திங்கள், 28 நவம்பர், 2011

மீண்டும் வெள்ளையர்க்கு அடிமை ஆவோம்

சில்லரை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் கூறியுள்ளார். இதற்காக நாம் முழுமையாக சந்தோசப் பட முடியாது. தமிழ்நாடு , மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அவர்களால் நேரடியாக கடை விரிக்க முடியாதே தவிர , மறைமுகமாக அவர்கள் நம்மை சுரண்டப் போகிறார்கள்.


எப்படி என்று சொல்கிறேன்....


பச்சை கடலை என்ற சிகப்பு மூகடலை உங்களுக்கு தெரியும் . அதிலிருந்து கடலைப்பருப்பு,கடலைமாவு,பொட்டுக்கடலை போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு நாட்டில் உற்பத்தி ஆகும் ஒட்டுமொத்த பச்சைக் கடலையை ( சில கோடி மூட்டைகள் ) ரிலையன்ஸ், ருச்சி சோயா, கார்த்திக் சிதம்பரத்தின் பினாமி நிறுவனம் உட்பட வெறும் நான்கு நிறுவனங்கள் வாங்கின. இதனால் வெளிமார்க்கெட்டில் இந்தப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டது. சுமார் இரண்டு மடங்கு விலை ஏறிய பிறகு தீபாவளிக்கு சில நாட்களுக்கு பிறகு அவை வெளி மார்கெட்டில் விடப்பட்டன.



அதாவது இந்த விலை உயர்வால் விவசாயி, வணிகர்கள் , மக்கள் யாருக்கும் பயன் இல்லை.


இப்போது காங்கிரஸ் அரசு அனுமதிக்க போகும் அந்நிய நிறுவனங்கள் இதேபோல்தான் செயல்பட போகின்றன. நாட்டின் ஒட்டு மொத்த விவசாய பொருட்களையும் இந்த ஒரு சில நிறுவனங்கள் வாங்கிவிடும். அதன் பிறகு அவர்கள் சொல்லுவது தான் விலை.



நூறு கோடி மக்களின் பணம் ,ஐந்து கோடி சிறு வணிகர்களின் உழைப்பை வெறும் பத்து ,இருவது அன்னிய நிறுவனங்கள் சுரண்டப் போகின்றன. இவர்களை அனுமதித்த இங்கிலாந்து,தாய்லாந்து போன்ற நாடுகளில் சிறு வணிகர்கள் தெருவுக்கு வந்து விட்டனர்.




எனவே இவர்களை அனுமத்தித்தால் பாதிக்கப்பட போவது வணிகர்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு இந்தியனும் இவர்கள் சொல்லும் விலைக்குதான் பொருட்களை வாங்கியாக வேண்டும் . இதனால் ஆதாயம் அடைய போவது ஒரு சில காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே.


வெளிநாட்டு பொருளை வாங்கறது வேற .. வெளிநாட்டுக்காரன் கிட்ட எல்லாத்தையும் கொடுத்துத்துட்டு ,அவன்கிட்டே அவன் சொல்ற விலைக்கு வாங்கறது வேற... காந்தி காலத்துல உப்பு சத்யாகிரகம் ன்னு ஒன்னு நடத்துனாரு தெரியுமா. வெள்ளகாரன்களை தவிர யாரும் உப்பு தயாரிக்க கூடாது , உப்பை அவன்களிடம்தான் வரி செலுத்தி வாங்கவேண்டும் என சட்டம் கொண்டுவந்தனர். அதை எதிர்த்துதான் காந்தி போராடி வெற்றி பெற்றார். காந்தி எதை எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றுத் தந்ததாரோ , கிட்டத்தட்ட அதே வடிவத்தை இன்றைய நவீன காங்கிரஸ் தலைவர்கள் கொண்டுவரத் துடிக்கிறார்கள்.



செவ்வாய், 11 அக்டோபர், 2011

காங்கிரசை அழிக்க தங்கபாலு சதி...



காங்கிரசை அழிக்க தங்கபாலு சதி...

தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று ( 10.10.2011 ) பேசிய தங்கபாலு, காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்தால் (!) , லஞ்சம் வாங்க மாட்டார்கள். லஞ்சம் வாங்கினால் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.


இது காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இவர் சொன்னபடி செய்ய ஆரம்பித்தால் , சாதாரண கவுன்சிலரில் ஆரம்பித்து சிதம்பரம் வரை எல்லோரையும் கட்சியை விட்டு நீக்க வேண்டியிருக்கும். இவரது மெகா டிவியை ரெய்டு செய்தால் இவரையே நீக்க வேண்டியிருக்கும் . காங்கிரஸ் என்ற கட்சியே இல்லாமல் போய்விடும்.

ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்துப்படி சுவிஸ் உட்பட 10 நாடுகளின் வருமானமே இந்திய காங்கிரஸ் தலைவர்களின் லஞ்ச பணம் தானாம்....!

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

ஆசை ,பேராசை,நப்பாசை ...!











ஆசை ,பேராசை,நப்பாசை ...!

ஆசை
உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களை பிடிக்கும்
- கருணாநிதி

பேராசை
காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு அதிக இடங்களை கைப்பற்றும்
- தங்கபாலு


நப்பாசை
இந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு பெருவாரியான இடங்களில் வெற்றி பெறுவோம்- ராமதாஸ்

நிராசை
நாங்க கடைசி வரைக்கும் முட்டாளாகவே இருக்க மாட்டோம் என மக்கள் முடிவெடுத்த பின் ஆசை,பேராசை,நப்பாசை எல்லாம் நிராசை ஆகும்.


எண்ணமும்,கருத்தும் J . மோகன்

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

அதிர்ச்சி.காம்

அதிர்ச்சி.காம்

தினத்தந்தியில் தினமும் வெளிநாட்டு வினோதங்கள் என்ற தலைப்பில் , உலக அளவில் நடக்கும் வேடிக்கை வினோத செய்திகள் இடம்பெறும் . கிட்டத்தட்ட அதே பாணியில் உலக அளவிலான வேடிக்கை வினோத செய்திகளைத் தருகிறது , அதிர்ச்சி.காம் வலைத்தளம். மிகவும் சுவாரஸ்யமான வலைத்தளம். அடிக்கடி விஜயம் செய்யுங்கள் .
அதிர்ச்சியிலிருந்து ஒரு செய்தி உங்களுக்காக...

என்னை கர்ப்பமாக்கினால் 1மில்லியன் யுவான்கள் : சீன அழகி அதிரடி!

மேலத்தேய நாடுகளில் பெண்கள் தங்கள் கற்பை ஏலம் விடுவதென்பது சர்வ சாதாரண ஒரு விடயமாகிவிட்டது. அது போன்று அண்மையில் சீனா நாட்டைச்சேர்ந்த இளம் அழகிய யுவதி ஒருவர் வித்தியாசமான அறிவிப்பை விடுத்துள்ளார். 28 வயது நிரம்பிய அழகிய பெண்தான் கியான் யாவ் . இவருடைய கணவர் ஹாங்கொங் நாட்டின் பணக்கார தொழிழதிபர். இவர் ஒரு விபத்தில் இறந்துவிட தனது பணக்கார குடும்பத்திற்கு வாரிசை பெற்றுக்கொடுக்க ஒரு நல்ல மனிதனை தேட முடிவெடுத்தார். இதற்காக சீன பத்திரிகைகள் அலுவலகங்கள் எங்கும் விளம்பர பதாதைகளை அடித்து ஒட்டத்தொடங்கினார். அதில் தன்னை கர்ப்பமாக்கும் ஆணுக்கு 1மில்லியன் யுவான்கள் வழங்கப்படும் என குறிப்பிட்டார். மேலும் தனது தொலைபேசி இலக்கங்களை குறிப்பிட்டு அதன் மூலம் தொடர்புகொண்டு பேசி எனக்கு சரி என்றவுடன் முற்பணமாக 30 இலட்சம் யுவான்கள் தரமுடியும் எனவும் பின்னர் உங்களை நாடிவந்து கர்ப்பமாகிய பின்னர் மிகுதி தொகை தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ம்ம்… எங்கே செல்லும் இந்த பாதை…..??

மேலும் சுவாரஸ்யமான தகவல்களுக்கு
http://www.athirchi.com/

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

சேலம் மாவட்ட பத்திரிக்கையாளர் மன்றம்

சேலம் மாவட்ட பத்திரிக்கையாளர் மன்றம்

சேலம் மாவட்ட பத்திரிக்கை நண்பர்களால் நடத்தப்படும் வலைப்பூ. உள்ளூர் செய்திகள்,புகை படங்கள் , குறும்படங்கள் என ரசிக்கும் படியான வலைப்பூ . சேலம் சார்ந்த வலைப்பூ என்பதால் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.

மாதிரிக்கு அதில் வரும் ஒரு குறும் படம்.

கீழே உள்ள லிங்க் -ஐ அழுத்துங்கள்.

.: குறும்படம்: "asl please":
தங்கள் குழந்தைகளை நேசிக்கும் ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் மீது அதிக அக்கறையும் கவனமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

தங்களுக்குப் பெற்றோர் தரும் சுதந்திரத்தைத் தவறாகக் குழந்தைகளும் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.

இணைய பயன்பாடுகளில் சாட்டிங் போன்றவற்றில் முகம் காட்டாமல் புனை பெயருடன் கதைத்துக் கற்பனையுலகில் அகமகிழும் இளைய தலைமுறையினருக்கு ஒரு எச்சரிக்கை மணிதான் இந்தக் குறும்படம்.

அந்தக் காலத்தில் கே.பாலசந்தர் இயக்கி வெளிவந்த 'நியூவேவ்' படங்களை இந்தப் படம் நினைவு படுத்துகிறது

முகவரி..

http://www.salemdistpress.blogspot.com

சனி, 20 ஆகஸ்ட், 2011

படைப்பாளி

படைப்பாளி
படைப்பாளி என்ற பெயரில் எளிய ,அழகிய கவிதைகள் , கருத்துக்களை முன்வைக்கிறார். அழகிய தென்றலைப் போல உள்ள இந்த வலைபக்கத்தை நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.

அவரைப் பற்றி அவரே கூறுகிறார்

காட்டுக்கோட்டை..
பெயரைப்போல காடில்லாவிட்டாலும்
அந்த ஊரில் காட்டுக் கொட்டாயில் தான் எங்கள் வீடு..
அளவான குடும்பம்…
ஆறுமுகம், சந்திரமதியின் மூத்த புதல்வன் நான்.
தமையன் ஒருவன்.
பள்ளிப்படிப்பு சொந்த ஊரில்..
பட்டப்படிப்பு சென்னை மாப்பட்டினத்தில்..
ஓவியக்கல்லூரி மாணவன்..
முகவரி சொன்னால்…
முதலில் ஓவியன்…
அப்பப்போ.. கவிதை எனும் பெயரில்
சிறு சிறு கிறுக்கல்கள்.. சிற்சில சிந்தனைகள்..
நான் படைப்பென நினைப்பதை..
உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்..

காட்டுக்கோட்டை..

பெயரைப்போல காடில்லாவிட்டாலும்

அந்த ஊரில் காட்டுக்கொட்டாயில்தான் எங்கள் வீடு.

அளவான குடும்பம்

ஆறுமுகம், சந்திரமதியின் மூத்த புதல்வன் நான்.

தமையன் ஒருவன்

பள்ளிப்படிப்பு சொந்த ஊரில்..

பட்டப்படிப்பு சென்னைமாப்பட்டிணத்தில்..

ஓவியக்கல்லூரியில் முதுகலை படித்தவன்

முகவரி சொன்னால்

முதலில் ஓவியன்.

அப்பப்போ.. கவிதை,கதை எனும் பெயரில்

சிறு சிறு கிறுக்கல்கள்.. சிற்சில சிந்தனைகள்..

நான் படைப்பென நினைப்பதை

உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்..

பாரீர்!!நான் செம்மையுற உமது கருத்துகள் தாரீர்!!

மாதிரிக்கு ஒரு கவிதை

இன்று சுதந்திர தினமாமே!

கொடி வாங்கலையோ கொடி

ஒரு ரூபாய்தான் அண்ணா

ஒன்னு வாங்கிக்கோங்க

அக்கா ஒன்னு வாங்கிக்கோங்க

காலைல சாப்பிடக்கூட இல்ல

சார் ஒன்னு வாங்கிக்கோங்க

இப்படித்தான் விடிகிறது

ஏழ்மைக்கு இன்றைய தினம்.

எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள்

இந்தியாவுக்கு இன்று சுதந்திர தினமாமே!

வலைப் பக்க முகவரி
http://padaipali.wordpress.com/

புதன், 18 மே, 2011

அநியாயமா மின்சாரம் வீணா போகுது







அநியாயமா மின்சாரம் வீணா போகுது

முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள ஜெயலலிதா , மின் தட்டுப்பாட்டை போக்குவதே முதல் வேலை என அறிவித்துள்ளார். அதை நிறைவேற்ற என்ன திட்டங்கள் வைத்துள்ளார் என்பது தெரியவில்லை.
ஆனால் அதற்க்கு அவர் புதிய மின் திட்டங்களை தீட்ட தேவை இல்லை . நாமும்,அரசாங்கமும் வீணடிக்கும் மின்சாரத்தை மிச்ச்சப்படுத்தினாலே போதும் , தேவை போக மீதி இருக்கும்.


மின் இழப்பு
நம் நாட்டில் 100 யூனிட் மின்சாரம் தயாரித்தால் 70 யூனிட் மட்டுமே நுகர்வோரைப் போய் சேர்வதாக ஒரு கணக்கு சொல்கிறது. 30 யூனிட் மின்சாரம் வீணாகிறது.
உலகிலேயே அதிகமான அளவு இதுதான். துணை மின் நிலையங்களையும், டிரான்ஸ்பார்மர் களையும் நவீனப் படுத்தினால் 10 யூனிட் மட்டுமே இழப்பு ஏற்படும் . பல ஆயிரம்
கோடி ரூபாய் மின் கட்டணம் கூடுதலாக கிடைக்கும். எனவே இதற்க்காக எவ்வளவு செலவு செய்தாலும் ஒரே ஆண்டில் மீதி ஆகிவிடும். மேலும் மின்கம்பிகளை பூமிக்கு அடியில் கொண்டு சென்றாலும் பெருமளவு மின் இழப்பு தவிர்க்கப்படும்.

குண்டு பல்புகளைத் தவிர்ப்போம்

குண்டு பல்புகள் அதிக மின்சாரத்தை வீனடிப்பதுடன்,புவி வெப்பமயமாதலுக்கும் காரணமாகிறது.அதற்க்கு பதிலாக குறைந்த மின்சாரத்தில் எரியும் குழல் விளக்குகளை பயன்படுத்தலாம் .அனைத்து அரசு அலுவலகங்களிலும் உடனடியாக குண்டு பல்ப்புகளை நீக்கிவிட்டு குழல் விளக்குகளை பயன்படுத்தவேண்டும்.இமாச்சலப் பிரதேச அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வீடுகளுக்கும் CFL குழல் விளக்குகளை இலவசமாக கொடுத்தது. இதனால் அங்கு 40 சதவீதம் வரை மின் தேவைக் குறைந்துள்ளது. தமிழக அரசும் அவ்வாறு செய்யலாம்.அரசே விளம்பரங்களில் குண்டு பல்புகளை பரிந்துரைக்கிறது என்பது வேறு வேதனை.படத்தைப் பாருங்கள்.

தெரு விளக்குகள்

நம் ஊரில் உள்ள தெரு விளக்குகள் பெரும்பாலும் சோடியம் அல்லது மெர்குரி விளக்குகள்.
இவற்றிற்கு 500 முதல் 2000 வாட்ஸ் வரை மின்சாரம் செலவாகிறது.ஆனால் வெள்ளை நிற ஒளி தரும் LED விளக்குகள் 100 முதல் 200 வாட்ஸ் மட்டுமே செலவாகும்.எனவே இவற்றையும் உடனே மாற்றவேண்டும்.

மின் திருட்டு
அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு சில தொழில் அதிபர்கள் செய்யும் திருட்டால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்ப்படுகிறது.
சமீபத்தில் கூட சங்ககிரி அருகில் ஒரு இரும்புத் தொழிற்ச்சாலையில் 7 கோடி ரூபாய் அளவுக்கு மின்திருட்டை கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே இதற்க்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும்.திருட முடியாத அளவுக்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

கொக்கி போடுதல்
திருவிழா மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு மின்சாரம் இலவசம் என எந்த சட்டமும் இல்லை.யாரும் காசு கொதுட்டு கரண்ட் வாங்குவதும் இல்லை.தமிழர்கள் கண்டுபிடித்த கொக்கி போட்டு திருடும் முறை மூலம் இவர்கள் மின்சாரம் திருடுவதை தடுக்கவேண்டும்.இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்கலாம்.

சூரிய சக்தி
சோலார் சிஸ்டம் எனப்படும் சூரிய சக்தி மின் உபகரணங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் .கல்வி நிறுவனங்கள்,தொழிற்சாலைகள்,அடுக்கு மாடி குடியிருப்புகள் போன்றவற்றிற்கு அனுமதி கொடுக்கும் போதே கண்டிப்பாக சோலார் சிஸ்டம் பொருத்த உத்தரவிட வேண்டும். இதை பொதுமக்கள் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.வரிச்சலுகை,மானியம் போல..கர்நாடகாவில் சோலார் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் மக்களுக்கு ஒவ்வொரு கரண்ட் பில்லிலும் ரூ.50 டிஸ்கவுன்ட் தருகிறார்கள்.




ஸ்டார் ரேட்டிங்
மின்சாதனங்களுக்கு அதன் மின்தேவைக்கு ஏற்ப 1 முதல் 5 வரை ஸ்டார் ரேட்டிங் ஐ மத்திய அரசு அளிக்கிறது. 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள பொருட்களை வாங்கினால்
குறைவான மின்சாரமே செலவாகும்.

மேற்கண்ட விசயங்களை செய்தாலே 40 சதவீதம் மின்சாரம் மீதி ஆகும்.இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசு புதிதாக ஆரம்பிக்க உள்ள மிந்திட்டங்களின் உற்பத்திக்கு சமமாகும்.
இதை எல்லாம் நிறைவேற்ற துணிச்சலாக முடிவெடுக்கும் முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். அவர் இதை செய்வார் என நம்புவோம்.


எண்ணமும் கருத்தும் மோகன். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.நன்றி.