சனி, 7 ஜனவரி, 2012

மோகன் விருதுகள் 2011


மோகன் அவார்ட்ஸ் 2011

சினிமா விருதுகள் பல்வேறு காரணங்கள் , தகுதிகள்,வியாபார ஒப்பந்தங்கள் என பல விசயங்களை அடிப்படையாக கொண்டு வழங்கப்படுகின்றன. இருந்தாலும் நம்ம மனசுக்கு புடிச்சது அப்படின்னு ஒன்னு இருக்கும்ல. அதன் அடிப்படையில் எனக்கு பிடித்தவைகளின் பட்டியல் , இரண்டாம் ஆண்டாக இதோ....

சிறந்த படம் - ஆடுகளம், தெய்வதிருமகள் , எங்கேயும் எப்போதும்.
கதை- பாஸ்கர் சக்தி - அழகர்சாமியின் குதிரை
திரைகதை- சரவணன் - எங்கேயும் எப்போதும்
வசனம்- சரவணன்- எங்கேயும் எப்போதும்
சமுத்திரகனி - போராளி
இயக்கம் - வெற்றிமாறன் - ஆடுகளம்
விஜய் - தெய்வ திருமகள்


ஒளிபதிவு - வேல்ராஜ் - எங்கேயும் எப்போதும்
படத்தொகுப்பு - கிஷோர் - எங்கேயும் எப்போதும்,ஆடுகளம்
இசை - ஜி.வி . பிரகாஷ்குமார் - தெய்வ திருமகள்,ஆடுகளம்
பாடல் - பிறை தேடும் இரவிலே - செல்வராகவன்- மயக்கம் என்ன
சாரகாத்து வீசும்போது - வைரமுத்து- வாகை சூட வா
என்னமோ ஏதோ - மதன் கார்க்கி - கோ
பாடகர்- எஸ் .பி.பாலசுப்ரமணியம்- யம்மா யம்மா - ஏழாம் அறிவு
பாடகி - சைந்தவி - பிறை தேடும் - மயக்கம் என்ன
சுசானே - மழை வரும் - வெப்பம்


சிறந்த நடிகர்- விஷால் - அவன் இவன்
விக்ரம்- தெய்வ திருமகள்
தனுஷ் - ஆடுகளம்
சிறந்த நடிகை - அஞ்சலி - எங்கேயும் எப்போதும்
நகைச்சுவை நடிகர் - சந்தானம் - வானம், தெய்வத் திருமகள்
குணசித்திர நடிகர் - ஜெயபாலன்- ஆடுகளம்
குணச்சித்திர நடிகை - சரண்யா - வானம்


கலை - தோட்டா தாரணி - 7 ஆம் அறிவு
குழந்தை நட்சத்திரம் - சாரா - தெய்வத் திருமகள்
பெயர் தெரியாத 2 சிறுவர்கள் - வாகை சூட வா
தமிழ் சினிமாவின் சிறந்த அப்பா ,அம்மா - சிறப்பு விருது - இளவரசு , சரண்யா

செவ்வாய், 20 டிசம்பர், 2011

உடையும் நிலையில் கேரள அணை - வீடியோ

முல்லை பெரியார் அணை நாளையே உடையபோவது போலவும், லட்சக்கணக்கான மக்கள் சாவபோவது போலவும் கேரளா அரசியல்வாதிகள் சரடு விட்டுக் கொண்டிருக்கும் வேலையில் ஒரு புதிய தகவல் வந்திருக்கிறது.


கேரளாவில் உள்ள அணைகளிலேயே முல்லை பெரியார் தான் மிகவும் பலமாக உள்ளதாகவும், என்றைக்கோ இடித்திருக்க வேண்டிய அணைகள் இன்னமும் உபயோகத்தில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.


ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றில் வெளியான வீடியோ பதிவு ஒன்று கிடைத்துள்ளது. கேரளாவில் நெய்யாற்றில் 1950 இல் கட்டப்பட்ட அணை ஒன்று 200 அடிக்குமேல் பெரிய விரிசல் விழுந்துள்ளது. ஆனால் அந்த அணையை இடிக்காமல் இன்னமும் பயன்படுத்தி வருகிறார்கள்.


ஒருவேளை முல்லை பெரியார் உடைந்தால், அந்த நீர் இடுக்கி அணை செல்லும் வழியில் வெறும் 450 குடும்பங்கள் மட்டுமே உள்ளன(கேரள அரசியல்வாதிகள் விடுவது டுபாக்கூர் என நிரூபணம் ஆகி உள்ளது ) ஆனால் உண்மைலேயே நிறைய மக்களுக்கு ஆபத்தான பாடாவதியான அணையை பற்றி அவர்கள் யாருமே கவலைப்படவில்லை. ஏனெனில் அதை வைத்து அரசியல் செய்ய முடியாது.


நீங்களே இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.


எண்ணமும் கருத்தும் , மோகன் .


புதன், 14 டிசம்பர், 2011

பெண்ணும் பொன்னும்

பெண்ணும் பொன்னும்



முத்துக்களோ கண்கள் என்றான்

தித்திப்பதோ கன்னம் என்றான்

பல்வரிசை பவளம் என்றான்

ஒற்றை நரை வெள்ளி என்றான்

அங்கமெல்லாம் தங்கமென்றான்

தீட்டாத வைரமென்றான்

திகட்டாத அமுதமேன்றான்

மேலுதட்டின் மச்சம் பார்த்து

அதிஷ்ட தேவதை கொட்டும் என்றான்

என் சின்னச் சிரிப்பில் விழும்

கன்னக்குழி கூட

பணக்குழியாம் - அவன் சொன்னான் .

சொன்னதற்க்கே சொக்கிப்போய்

அவன் குழியில் நான் விழுந்தேன் .

மனசெல்லாம் சிறகடிக்க

மணமேடையில் நான் இருக்க ...

முப்பது பவுன் போட்டால்தான்

முதல் முடிச்சே நான் இடுவேன்

இல்லையேல்

இந்த மூதேவி முகத்தினைப் போய்

எவன் பார்ப்பான் என்றுரைத்தான். !

மோகன்....


பின்குறிப்பு ...

என்னடா இவன் புதிதாக கவிதை வேறு எழுத ஆரம்பித்துவிட்டானா என அதிர்ச்சி அடையாதீர்கள் .சில ஆண்டுகளுக்கு முன் வாலிப வயதில் இது மாதிரி கொஞ்சம் கிறுக்குவேன்.(இப்போதும் வாலிபம் தான். அது முன்பகுதி, இது பின்பகுதி.) நான் பிளாக் ஆரம்பித்ததே என் கவிதைகளை எழுதுவதற்குத்தான். ப்ளாக்கின் ஆரம்ப பகுதிக்கு சென்று பாருங்கள் தெரியும். இனி நேரம் இருக்கும்போது ஒவ்வொன்றாய் பதிகிறேன்.சரி,இந்த கவிதை எப்படி இருக்கு... கருத்து சொல்லுங்கப்பா...!

சனி, 10 டிசம்பர், 2011

பவர் ஸ்டாரின் புதிய பூகம்பம்




தமிழ் சினிமா ரசிகபெருமக்களே..



இதோ உங்களை ரட்சிக்க மீண்டும் வருகிறார்...


தமிழ் சினிமாவின் புதிய சூறாவளி...
உங்களுக்கு ஆனந்த தொல்லை கொடுத்த ...

லத்திகா வாக லத்தியை சுழற்றிய....


பவர் ஸ்டார்....



டாக்டர் சீனிவாசனின் புதிய காவியம் ....



தேசிய நெடுஞ்சாலை...




இந்தமுறை விஜயின் ஆரம்பகால ஆஸ்தான நாயகி சங்கவியுடன்..!




இப்பொழுது ஸ்டில் ...



விரைவில் பூகம்பம்....

வடிவேலு ஒரு படத்தில் சுந்தர். சி இடம் சொல்லுவார்.. ''தைரியம் இருந்தா என் ஏரியாவுக்கு வாடா பாக்கலாம்'' ன்னு.
அதையேதான் உங்களிடம் சொல்லுகிறோம். படம வரட்டும். தைரியம் இருந்தால் தியேட்டர் பக்கம் வாருங்கள் பார்க்கலாம்.!



வியாழன், 1 டிசம்பர், 2011

பாலை - மதிப்பெண்களுக்கு அப்பாற்பட்ட படம் - விகடன்

பெரியார்,காமராஜை போன்ற திரைப்படங்களுக்குப் பிறகு ''பாலை'' படத்தை மதிப்பெண்கள் வழங்காமல் பாராட்டி இருக்கிறது ஆனந்த விகடன்.

கடந்த சில ஆண்டுகளில் அரிதாக சில படங்களுக்கு விகடன் மதிப்பெண்கள் போடாமல் இருந்திருக்கிறது. அவையும் வெவ்வேறு காரணங்களுக்காக.

துள்ளுவதோ இளமை படத்திற்கு மதிப்பெண் வழங்குவதே ஆபாசத்திற்கு ஆதராவாகிவிடும் என்ற காரனத்தால் மதிப்பெண் வழங்கவில்லை.


அதன் பிறகு சங்கரின் பாய்ஸ் படம். அதன் விமர்சனம் இன்றும் நினைவில் இருக்கிறது. வக்கிர மனம் கொண்ட ஒருசில இளைஞர் களுக்கு ஒருவேளை இந்த படம் பிடிக்கலாம். மற்றவர்களுக்கு சாரி .. என விமர்சித்தது.


இந்த இரண்டு ஆபாச படங்களிலும் பிரபலமானவர்கள் சம்பந்தப் பட்டிருந்ததால் இந்த அளவுக்கு விமர்சனம் செய்தது. அதன்பிறகு வந்த இந்தமாதிரியான படங்களை விகடன் கண்டுகொள்ளவில்லை.

அதேபோல் ஒரு படம் எப்படியெல்லாம் எடுக்ககூடாதோ , அப்படியெல்லாம் எடுக்கப்பட்ட ''இந்திரலோகத்தில் நா.அழகப்பன்'' என்ற படத்திற்கு மதிப்பெண் வழங்கவில்லை.


பெண் குழந்தை தொழிலாளி பற்றிய குட்டி என்ற படத்திற்கு மதிப்பெண் வழங்காமல் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக அறிவித்தது விகடன்.


பெரியார் ,காமராஜர் ஆகிய படங்களை மதிப்பெண்களை தாண்டி ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டும் என்ற வேண்டுகோளுடன் மதிப்பெண் தராமல் ஊக்குவித்தது விகடன்.




நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்போது பாலை படத்திற்கு அந்த பெருமை கிடைத்துள்ளது.


2000 ஆண்டுகளுக்கு முன் மண்ணுக்காக போராடிய தமிழர்களின் வீர வரலாற்றைப் படமாகி இருக்கிறார்கள். மதிப்பெண்களை தாண்டி அனைவரும் பார்க்க சொல்கிறது விகடன். பார்ப்போம்.
இந்த
மாதிரி படங்களை வரவேற்போம்.

திங்கள், 28 நவம்பர், 2011

மீண்டும் வெள்ளையர்க்கு அடிமை ஆவோம்

சில்லரை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் கூறியுள்ளார். இதற்காக நாம் முழுமையாக சந்தோசப் பட முடியாது. தமிழ்நாடு , மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அவர்களால் நேரடியாக கடை விரிக்க முடியாதே தவிர , மறைமுகமாக அவர்கள் நம்மை சுரண்டப் போகிறார்கள்.


எப்படி என்று சொல்கிறேன்....


பச்சை கடலை என்ற சிகப்பு மூகடலை உங்களுக்கு தெரியும் . அதிலிருந்து கடலைப்பருப்பு,கடலைமாவு,பொட்டுக்கடலை போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு நாட்டில் உற்பத்தி ஆகும் ஒட்டுமொத்த பச்சைக் கடலையை ( சில கோடி மூட்டைகள் ) ரிலையன்ஸ், ருச்சி சோயா, கார்த்திக் சிதம்பரத்தின் பினாமி நிறுவனம் உட்பட வெறும் நான்கு நிறுவனங்கள் வாங்கின. இதனால் வெளிமார்க்கெட்டில் இந்தப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டது. சுமார் இரண்டு மடங்கு விலை ஏறிய பிறகு தீபாவளிக்கு சில நாட்களுக்கு பிறகு அவை வெளி மார்கெட்டில் விடப்பட்டன.



அதாவது இந்த விலை உயர்வால் விவசாயி, வணிகர்கள் , மக்கள் யாருக்கும் பயன் இல்லை.


இப்போது காங்கிரஸ் அரசு அனுமதிக்க போகும் அந்நிய நிறுவனங்கள் இதேபோல்தான் செயல்பட போகின்றன. நாட்டின் ஒட்டு மொத்த விவசாய பொருட்களையும் இந்த ஒரு சில நிறுவனங்கள் வாங்கிவிடும். அதன் பிறகு அவர்கள் சொல்லுவது தான் விலை.



நூறு கோடி மக்களின் பணம் ,ஐந்து கோடி சிறு வணிகர்களின் உழைப்பை வெறும் பத்து ,இருவது அன்னிய நிறுவனங்கள் சுரண்டப் போகின்றன. இவர்களை அனுமதித்த இங்கிலாந்து,தாய்லாந்து போன்ற நாடுகளில் சிறு வணிகர்கள் தெருவுக்கு வந்து விட்டனர்.




எனவே இவர்களை அனுமத்தித்தால் பாதிக்கப்பட போவது வணிகர்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு இந்தியனும் இவர்கள் சொல்லும் விலைக்குதான் பொருட்களை வாங்கியாக வேண்டும் . இதனால் ஆதாயம் அடைய போவது ஒரு சில காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே.


வெளிநாட்டு பொருளை வாங்கறது வேற .. வெளிநாட்டுக்காரன் கிட்ட எல்லாத்தையும் கொடுத்துத்துட்டு ,அவன்கிட்டே அவன் சொல்ற விலைக்கு வாங்கறது வேற... காந்தி காலத்துல உப்பு சத்யாகிரகம் ன்னு ஒன்னு நடத்துனாரு தெரியுமா. வெள்ளகாரன்களை தவிர யாரும் உப்பு தயாரிக்க கூடாது , உப்பை அவன்களிடம்தான் வரி செலுத்தி வாங்கவேண்டும் என சட்டம் கொண்டுவந்தனர். அதை எதிர்த்துதான் காந்தி போராடி வெற்றி பெற்றார். காந்தி எதை எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றுத் தந்ததாரோ , கிட்டத்தட்ட அதே வடிவத்தை இன்றைய நவீன காங்கிரஸ் தலைவர்கள் கொண்டுவரத் துடிக்கிறார்கள்.



செவ்வாய், 11 அக்டோபர், 2011

காங்கிரசை அழிக்க தங்கபாலு சதி...



காங்கிரசை அழிக்க தங்கபாலு சதி...

தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று ( 10.10.2011 ) பேசிய தங்கபாலு, காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்தால் (!) , லஞ்சம் வாங்க மாட்டார்கள். லஞ்சம் வாங்கினால் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.


இது காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இவர் சொன்னபடி செய்ய ஆரம்பித்தால் , சாதாரண கவுன்சிலரில் ஆரம்பித்து சிதம்பரம் வரை எல்லோரையும் கட்சியை விட்டு நீக்க வேண்டியிருக்கும். இவரது மெகா டிவியை ரெய்டு செய்தால் இவரையே நீக்க வேண்டியிருக்கும் . காங்கிரஸ் என்ற கட்சியே இல்லாமல் போய்விடும்.

ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்துப்படி சுவிஸ் உட்பட 10 நாடுகளின் வருமானமே இந்திய காங்கிரஸ் தலைவர்களின் லஞ்ச பணம் தானாம்....!