சனி, 21 செப்டம்பர், 2013

பஞ்சாப்புல மண்ணு எடுத்து

பஞ்சாப்புல மண்ணு எடுத்து
சிந்து நதியின் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை ..
இது பொம்மை இல்ல பொம்மை இல்ல உண்மை..

அலுங்காம ஜெயிக்க வச்சது
அஸ்ஸாமோட  மண்ணுங்க -ஆனா
ஆட்டுவிப்பது எல்லாம் அந்த
அமேதி தொகுதி அன்னைங்க ..

கண்ணழகு செஞ்சதெல்லாம்
ஆக்ஸ்போர்டு மண்ணுங்க..
கையெழுத்து போட்டதெல்லாம்
ரிசர்வ் பேங்கு மண்ணுங்க..

வாயழகு செஞ்சதெல்லாம்
டெல்லியோட மண்ணுங்க - அதுல
திண்டுக்கல்லு பூட்டால
பூட்டிவச்சது யாருங்க..

புத்தி செய்யும் மண்ணுக்கு
சுத்தி சுத்தி வந்தேங்க..
இத்தாலியில் மண்ணெடுத்து
புத்தி செஞ்சேன் பாருங்க..

பூமியெல்லாம் மண்ணெடுத்து
பொம்மை செஞ்சேன் நானுங்க
பாவிமகன் களிமண்ணா போனது
யாரு குத்தங்க ..

(பஞ்சாப்புல மண்ணு எடுத்து )

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

மோகன் விருதுகள் 2012

மோகன் விருதுகள் 2012

எனக்கு பிடித்த சினிமாக்களை மோகன் அவார்ட்ஸ் என்ற பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக என் பிளாக்கில் எழுதினேன்.அதில் பெரும்பான்மையானவை தேசிய விருது,விஜய் அவார்ட்ஸ் என தேர்வு செய்யப்பட்டதில் இருந்து என்னுடைய தேர்வுகள் சரியே என்ற  மகிழ்ச்சியுடன் ,இதோ 2012 ஆம் ஆண்டுக்கான மோகன் விருதுகள்...!


சிறந்த படம் - வழக்கு எண் 18/9

இயக்குனர் -பாலாஜி சக்திவேல் - வழக்கு எண் 18/9

கதை - ச.வெங்கடேசன் - அரவான்

திரைக்கதை - SS .ராஜமவுலி - நான் ஈ

வசனம் - அன்பழகன் - சாட்டை

ஒளிப்பதிவு - சுகுமார் - கும்கி

படத்தொகுப்பு -கோபி கிருஷ்ணா - வழக்கு எண் 18/9

 படத்தொகுப்பு - லியோ ஜான் பால் - பிட்சா

இசை -பாடல்கள்- D .இமான் - கும்கி

இசை - பின்னணி- இளையராஜா -நீதானே என் பொன்வசந்தம்

பாடலாசிரியர் - யுகபாரதி - கையளவு நெஞ்சத்துல - கும்கி

நா.முத்துக்குமார் - சாய்ந்து சாய்ந்து - நீதானே என் பொன்வசந்தம்

பாடகர் - வேல்முருகன் - ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் - கழுகு

பாடகி - மகிழினி மணிமாறன் - கையளவு நெஞ்சத்தில - கும்கி

ஸ்ரேயாகோஷால் - சொல்லிட்டாளே அவ காதல - கும்கி

 நடனம் - பரா கான் - நண்பன்

கலை - விஜய் முருகன் -அரவான் 

 ஒப்பனை - சரத்குமார் - அரவான்

கிராபிக்ஸ் - ராகுல் வேணுகோபால்,அடேல் அதிலி ,பீட் டிராபெர் - நான் ஈ

நடிகர் - ஆதி -அரவான் 

 நடிகர் - விஜய் சேதுபதி - நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

நடிகை -லக்ஷ்மிமேனன் - கும்கி

சுனைனா - நீர் பறவை               

துணை நடிகர் - தம்பி ராமையா -கும்கி

பசுபதி - அரவான்

துணை நடிகை - விஜி - ஆரோகணம்

சரண்யா - நீர்பறவை


நகைச்சுவை நடிகர் - சந்தானம் - ஒரு கல் ஒரு கண்ணாடி, கலகலப்பு

சூரி - சுந்தரபாண்டியன்

வில்லன் - தம்பி ராமையா - சாட்டை

குழந்தை நட்சத்திரம் - பகோடா பாண்டியன் -மெரீனா

 குறிப்பு :
இவை என்னுடைய விருப்பங்களே... உங்கள் விருப்பங்களை குறிப்பிடுங்கள்....

செவ்வாய், 30 அக்டோபர், 2012

இந்து மதம் எங்கே போகிறது

இந்து மதம் எங்கே போகிறது


மத்திய ஆசியாவிலிருந்து சுமார் 2500-3000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் குடியேறிய ஆரியர்கள் ( பின்னாளில் அந்தணர்கள் என அழைக்கப்பட்டனர்) , இந்தியாவில் பசுவதையை அறிமுகப்படுத்தினர்.


மேலும் அஸ்வமேக யாகம் என்ற பெயரில் ஏராளமான குதிரைகளையும் பலி கொடுத்தனர்.

எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் உயிர்பலி கட்டாயம் கொடுக்கவேண்டும் என மன்னர்களையும்,மக்களையும் நம்ப வைத்தனர்.

பின்னாளில் இந்த உயிர்பலியை பெருமளவிற்கு தடுத்து நிறுத்தியவர் புத்தர். தனது சீடர்களுடன் ஊர் ஊராக சென்று மக்களிடம் பேசி இந்த மூடநம்பிக்கையை கைவிட வைத்தார்.

உயிர்பலிக்கு பதிலாக எலுமிச்சை,பூசணி ஆகியவற்றை (குங்குமம் வைத்து) பலியிடும் முறையை கொண்டுவந்ததும் புத்தர் பெருமானே...   -''அக்னிகோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்'' எழுதிய

''இந்து மதம் எங்கே போகிறது'' - என்ற நூலிலிருந்து.

-நக்கீரன் பதிப்பகம் வெளியீடு. மத்திய ஆசியாவிலிருந்து சுமார் 2500-3000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் குடியேறிய ஆரியர்கள் ( பின்னாளில் அந்தணர்கள் என அழைக்கப்பட்டனர்) , இந்தியாவில் பசுவதையை அறிமுகப்படுத்தினர்.
மேலும் அஸ்வமேக யாகம் என்ற பெயரில் ஏராளமான குதிரைகளையும் பலி கொடுத்தனர். 
எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் உயிர்பலி கட்டாயம் கொடுக்கவேண்டும் என மன்னர்களையும்,மக்களையும் நம்ப வைத்தனர்.
பின்னாளில் இந்த உயிர்பலியை பெருமளவிற்கு தடுத்து நிறுத்தியவர் புத்தர். தனது சீடர்களுடன் ஊர் ஊராக சென்று மக்களிடம் பேசி இந்த மூடநம்பிக்கையை கைவிட வைத்தார். 
உயிர்பலிக்கு பதிலாக எலுமிச்சை,பூசணி ஆகியவற்றை (குங்குமம் வைத்து) பலியிடும் முறையை கொண்டுவந்ததும் புத்தர் பெருமானே...


-''அக்னிகோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்'' எழுதிய 
''இந்து மதம் எங்கே போகிறது'' - என்ற நூலிலிருந்து.
-நக்கீரன் பதிப்பகம் வெளியீடு.

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

அணு விஞ்ஞானி நாராயணசாமி !

அணு விஞ்ஞானி நாராயணசாமி !

முயற்சி செய்தால் முடியாதது இல்லை என்பதற்கு உதாரணம் இவர்..


புதுச்சேரியில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.

படித்தது ஆறாம்வகுப்பு..

சரியான வேலை இல்லாததால் புதுவை காங்கிரஸ் கோஷ்டி ஒன்றில் இணைந்தார் ..

படிப்படியாக வளர்ந்து எம்பி ஆனார்...

வேறு ஆள் கிடைக்காததால் மந்திரி ஆனார்...

முக்கால்வாசி அரசியல்வாதிகளின் கதை இதுதானே என்று கேட்காதீர்கள் ...  

இதற்கு பிறகுதான் இருக்கிறது வரலாறு..



கூடங்குளத்தில் தேவையில்லாமல் ஒரு அணு உலையை கட்டிவிட்டு,

''கவன்பிளவில் கால் நுழைத்து ஆப்பசைத்துக் கொண்ட குரங்குதனைப்போல'' மாட்டிக்கொண்ட மத்திய அரசு ,அதை சமாளிக்க சரியான ஆளை தேடியது. அப்பத்தான் கண்ணில் பட்டார் நம்ம நாராயணசாமி...


அணு உலையை ஆறு ரவுண்ட் வந்தார்...

ஆறே மாதத்தில் அணு விசயங்களை கரைத்து குடித்தார்..

இந்தியாவிற்கு புதிய அணு விஞ்ஞானி கிடைத்தார்..

கூடங்குளம் போராட்ட குழுவின் கேள்விகளுக்கு அப்துல்கலாம் முதல் ரஷ்ய விஞ்ஞானிகள் வரை பதில் சொல்ல தடுமாறுகையில் , அசால்ட்டாக சமாளிக்கிறார் அ.வி(அணு விஞ்ஞானி).நாராயணசாமி...


அதுவும் நம்மைப் போன்ற பாமர மக்களுக்கும் புரியும் வகையில், ''இன்னைக்கு உலையில் யுரேனியம் போட்டாச்சு,15 நாள்ல கரண்ட் வந்திரும்னு எதோ அரிசிய உலைல போட்டாச்சு 15 நிமிசத்தில பொங்கிரும்''; ங்கிற மாதிரி எளிமையா சொல்றார் அ.வி.நாராயணசாமி...  

வெறும் ஆறாவது மட்டும் படித்து , சொந்த முயற்ச்சியால் அணு விஞ்ஞானியாக மாறிய நாராயணசாமியை,  விரைவில் இந்திய அணுசக்தி துறை தலைவராக வருவதற்கு வாழ்த்துங்கள்.. 

எனவே நாராயணசாமியை விட்டு பதில் சொல்வது , போராட்டக் குழுவினரை அவமானப்படுத்துவதற்காக என யாரும் நினைக்கவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

சனி, 18 ஆகஸ்ட், 2012

ரா.கி.ரங்கராஜன் மறைவு

ரா.கி.ரங்கராஜன் மறைவு

பிரபல எழுத்தாளரும், குமுதம் இதழின் ஆரம்ப கால தூண்களில் ஒருவருமான ரா.கி.ரங்கராஜன் சென்னையில் நேற்று [18.8.2012] காலமானார். தமிழ் எழுத்து உலகிற்கும், என்னை போன்ற வாசகர்களுக்கும் பேரிழப்பாகும்.


என் புத்தக ஆர்வத்தை துவக்கி வைத்தவர் ..

என்னுடைய புத்தக ஆர்வத்திற்கும், இன்று  வீட்டில்  சுமார் 500 நூல்களுடன் ஒரு மினி நூலகம் அளவிற்கு நூல்கள் வைத்திருப்பதற்கும் ரா.கி.ரங்கராஜன் ஐயா ஒரு முக்கிய காரணம் . 15 ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பா சேலம் கன்னங்குறிச்சி அரசு பள்ளியில் பணிபுரிந்த போது , நூலகத்தில் இருந்து ஒரு புத்தகம் கொண்டுவந்தார். அதன் பெயர் பட்டாம்பூச்சி.


 ஹென்றி ஷாரியர் என்பவர் எழுதிய நூலை தமிழில் மொழிபெயர்த்திருந்தார் ரா.கி.ர .
எதேச்சையாக அதை படிக்க துவங்கிய என்னால் ,முழுமையாக படிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. படிக்கும் ஒவ்வொருவரையும் உலுக்கி எடுக்கும் அந்த நூல் பல நாட்கள் மனதை ஆக்கிரமித்திருந்தது. அதன் பாதிப்பிலேயே புத்தகங்களை தேடி தேடி வாங்க ஆரம்பித்தேன் .


பொன்னியின் செல்வன் போல தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த நூல்களில் ஒன்று பட்டாம்பூச்சி. படிக்கவும்,பாதுகாக்கவும்,பரிசளிக்கவும் ஒரு பட்டாம்பூச்சியை இன்றே வாங்குங்கள். அதுதான் அந்த மனிதருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி.

பட்டாம்பூச்சி
மயிர் கூச்செறிய வைக்கும் மானிட சாசனம் -ஹென்றி ஷாரியர்

தமிழில் ரா.கி.ரங்கராஜன்
விலை . 250.00

நர்மதா பதிப்பகம்
No 10 1st Floor, Pondy Bazaar Adjacent To T Nagar Head Post Office, Nana Street, T Nagar, Chennai - 600017

ஆன்லைனில் வாங்க ...
http://discoverybookpalace.com/products.php?product=PattamPoochi%252dRa.Ki.Rangarajan%252dbuy-tamil-books

எண்ணமும் எழுத்தும்

மோகன்

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

ஹெல்மெட்டும் எம்பெருமான் முருகனும்.. !

வாரியார் சுவாமிகள் ஸ்டைலில் படிக்கவும்..



HEL என்றால் நரகம்...

MET என்றால் சந்திப்பது....

HELMET போடாமல் வண்டி ஓட்டினால் நரகத்துக்குத் தான் போவாய் என்று அர்த்தம் ...


HELMET போட்டுக்கொண்டு வண்டி ஒட்டுங்கள்..

உனக்கான நேரம் வரும்போது எம்பெருமான் முருகன் உங்களை சொர்க்கத்திற்க்கே அழைத்துக்கொள்வான்.

செவ்வாய், 24 ஜூலை, 2012

காளமேகப் புலவரின் கிண்டல் பாடல்

காளமேகப் புலவரின் கிண்டல் பாடல்

மோர்காரியின் மோரில் தண்ணீர் அதிகம் இருப்பதாக கிண்டல் செய்து கவி காளமேகப் புலவர் பாடிய சிலேடைப் பாடல் ...


கார்என்று பேர்படைத்தாய்


                 ககனத்து உறும்போது

நீர்என்று பேர்படைத்தாய்

                நெடும்தரையில் வந்ததன்பின்

வார்ஒன்றும் மென்முலையார்

                ஆய்ச்சியர்கை வந்ததன்பின்

மோர்என்று பேர்படைத்தாய்

                முப்பெரும் பெற்றாயே...!