திங்கள், 21 மார்ச், 2011

தேர்தல்: நல்ல தலைவர் யார் ?



இது ஸ்பெக்ட்ரம் காலத்தில் நடக்கும் தேர்தல். நேர்மை , எளிமை, தூய்மை, உண்மை போன்றவை கிலோ என்ன விலை என கேட்கும் தலைவர்கள் உங்களைத் தேடி வருகிறார்கள். இந்த காலத்திலும் மேலே சொன்ன நேர்மை , எளிமை, தூய்மை, உண்மை போன்றவற்றை கடைபிடிக்கும் தலைவர்கள், உள்ளார்களா என தேடியபோது ஒரு சிலர் தேறினார்கள். அவர்களின் பட்டியலைத் தருகிறேன்.
அவர்களில் சிலர் நேரடி அரசியலில் ஈடுபடாதவர்களாகவும் இருக்கலாம்.
இருந்தாலும் இந்த தேர்தல் நேரத்தில் இருக்கும் ஒரு சில நல்லவர்களை அடையாளம் காட்டும் முயற்ச்சி இது.


.ப.ஜெ.அப்துல் கலாம்
(முதல் பெயராக எழுத இவரை விட்டால் ஆள் இல்லை )


திரு.நல்லக்கண்ணு
திரு. தா.பாண்டியன் ( சில விதிவிலக்குகளுடன் )
திரு .மகேந்திரன் (சிபி ஐ எம்.எல்.ஏ )


செல்வி .பாலபாரதி ( சிபிஎம் எம்.எல். )



சைதை துரைசாமி (அ.தி.மு.க வேட்பாளர் ,கொளத்தூர் தொகுதி,மனிநேய மன்றம் )

வைகோ ( சில விதிவிலக்குகளுடன்)


திரு.டி.ராஜா (இ.கம்யூ மாநிலங்களவை எம்பி , நடப்பு பாராளுமன்ற எம்பிக்களில் மிகவும் ஏழையான எம்பியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.)

திரு.தமிழருவி மணியன் (அரசியல் விமர்சகர்)
திரு.சோ ,அரசியல் விமர்சகர்
இயக்குனர் சீமான் (நாம் தமிழர் இயக்கம்)
இயக்குனர் தங்கர்பச்சான் (அரசியல் விமர்சகர்)
பழ.நெடுமாறன்

உமாசங்கர் ஐ.ஏ.எஸ் (எல்காட் தலைவர் )






.சகாயம்
ஐ.ஏ.எஸ் (நாமக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியர் )



.நாராயணன் கிருஷ்ணன் ,மதுரை (சமூக சேவகர், சிஎன்என் தொலைகாட்சி 2010 ன் உலகின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக தேர்ந்தெடுத்து உள்ளது.
இவரைப் பற்றி மேலும் அறிய http://www.akshayatrust.org/ என்ற வலைத்தளத்தைப் பார்க்கவும்)

இப்பொதைக்கு தோன்றியவர்களை குறிப்பிட்டுள்ளேன். உங்களுக்கு தெரிந்த நல்லவர்களின் பெயர்களை கூறுங்கள்.நல்லவர்களின் பட்டியலில் சேர்க்கப்படும்.

குறிப்பு ;
இந்த பதிவை படித்துவிட்டுத் தோழர் விடுதலை அனுப்பிய தகவல்

இப்படியும் ஓரு எம்.எல்.ஏ இருக்க முடியுமா தமிழ்நாட்டில்


இந்த ஆட்சிக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த பத்தாம் தேதி யோடு முடிவடைந்துவிட்டது. ஐந்து ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்திட்ட தெம்பில் பலர் உற்சாகத்தோடு தொண்டர்கள் புடைசூழ விடுதியில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு முன் னாலும் குறைந்தது ஐம்பது, அறுபது பேர் ‘தேவ்டு’ காத்து நிற்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏவான நன்மாறனின் அறை மட்டும் ஆள் அரவமற்று அமைதியாய் நிற்கிறது. உள்ளே ஒரு உருவம் ஓடியாடி ஏதோ அவசரத்தில் தன் உடைமைகளை ஒரு பையில் எடுத்து அழுத்திக் கொண்டிருந்தது. கூர்ந்து பார்த்தால் நன்மாறன் எம்எல்ஏ.

‘எம்எல்ஏவுக்கு 50 ஆயிரம் சம்பளம் தருகிறது அரசாங்கம். அத கட்சிக்கு கொடுத்துடுவேன். கட்சியின் முழு நேர ஊழியர் நான். அதற்காக கட்சி 5500 ரூபாய் சம்பளம் தருகிறது. அதுதான் குடும்ப ஜீவனத்துக்கு ஆதா ரம்” என்று எளிமையாய் சிரிக்கிறார்.

நன்மாறனுக்கு இரண்டு மகன்கள், ஒரு பையன் எம்எஸ்சி படித்துவிட்டு வேலைபார்க்கிறார். இன்னொருவர் பி.ஏ.பட்டதாரி. மனைவி சண்முக வள்ளி நன்மாறனின் உறவினர் வீட் டுப் பெண்!

‘பாட்டி காலத்துல இருந்து ஒரு வீட்ல குடி இருந்தோம். அந்த வீட்ட வாங்கிக்கச் சொல்லி வீட்டு உரிமை யாளர் கேட்டுக்கிட்டார். பத்து வருஷத் துக்கு முன்னாடி வாங்கினது.184 சதுரடி. சின்னதா ஒரு வீடு, இதுதாங்க நம்ம சொத்து’ என்கிறார்.

நன்மாறனின் எளிமை ஊர் அறிந்த விஷயம். தன்னுடைய மகனின் கல்லூரி சேர்ப்புக்காக சென்றபோது, கல்லூரி கேட்ட சின்ன தொகையை தயார் செய்து கொண்டு போவதற்குள், அட்மிஷன் முடிந்துவிட்டது. சிபாரிசு எதுவும் போகாமல் வேறு கல்லூரியில் தன் மகனைச் சேர்த்துவிட்டு விட்டார். யாரும் தன்னை குறை சொல்லிவிடக் கூடாது என்று அச்சப்படும் தன்மாறன் இந்த நன்மாறன்.

அம்மா, அப்பா: கூலி வேலை மகள் : எம்எல்ஏ


இவரைப் போலவே மிக சிம்பிள் திருவட்டாரு எம்எல்ஏ லீமாரோஸ். அவரைத் தேடிச் சென்றபோது ஒரு டீக்கடையில் தனியாக நின்று டீ குடித் துக் கொண்டிருந்தார். யாரும் அவரு டன் இல்லை. தனி மனுஷி!

“ஒருமுறை மக்கள் பிரச்சனைக்காக அரசு அலுவலகத்திற்குப் போன போது உள்ளே விட மறுத்துட்டாங்க. எம்எல்ஏன்னா ஆடம்பரமாக பெரிய படையோட வரணும்னு எதிர்பார்க்குறாங்க அதிகாரிங்க. என்னோட அடை யாள அட்டையைக் காட்டினதற்கு அப்புறம்தான் உள்ளேயே விட்டாங்க” என்கிறார். இந்தக் காலத்திலும் எம்எல்ஏவுக்கான எந்த அடையாள மும் இல்லாமல் இருப்பவர்.

‘எங்க போனாலும் பஸ்தாங்க. பலமுறை எம்எல்ஏன்னு நடத்துனர் கிட்ட சொன்னாக் கூட நம்ப மறுக் கிறாங்க.

சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவள் நான். ஊர்ல என் அம்மாவும், அப்பாவும் கூலி வேலைக்குப் போறாங்க. இந்த மக்கள் என்னை மாதிரியான ஒரு ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவளை ஏற்றுக் கொண்டாங்க இல்லையா? அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும்’ என்று சொல்லும் லீமாரோஸ் பணபலம் இல் லாமல் வெற்றி பெற்ற எம்எல்ஏ.

‘உங்களுக்கு என்று உள்ள சொத்து என்ன?’ என்றால், பெரியதாக சிரித்த வர்... ‘ஒன்றுமில்ல. 2002ல் இருந்து மூன்று மாசத்துக்கு ஒருமுறை 359 ரூபாய் பிரீமியம் கட்டுற மாதிரி ஒரு எல்ஐசி பாலிசி போட்டேன். அதான் என் சொத்து’ என்று நம்மை பதற்றப் பட வைக்கிறார்.

கட்சி இவருக்கு சம்பளமாக கொடுப்பது மாதம் 4 ஆயிரம்!

“சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வரும்போது கூட ரயிலில் இரண்டாம் வகுப்புலதான் வருகிறேன். ஏ.சி. கோச்ல வரலாமே என்று ரயில் பரிசோதனை அதிகாரிகள் கேட்கிறார் கள். எந்த கிளாஸ்ல வந்தா என்ன சார்? எல்லா ரயிலும் சென்னைக்குதானே வருகிறது?” என்று சொல்லும் லீமா ரோஸ், நன்மாறன் மாதிரியான எம்எல் ஏக்களை அடுத்த ஆட்சியில் மக்கள் கௌரவிப்பார்களா?






புதன், 2 மார்ச், 2011

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!


தலைப்பு என்னவோ உண்மை தான். ஆனால், அதை எல்லாம் தாண்டி அசாதாரணமானது, தி.மு.க., - பா.ம.க., உறவு. "துரோகம்... துரோகம்... பச்சைத் துரோகம்' என, தி.மு.க., தலைவரை விமர்சித்த அதே வாய், இன்று, "மீண்டும் மகத்தான வெற்றி பெற்று ஆறாவது முறை தமிழக முதல்வராக வருவார் கருணாநிதி' என்கிறது. இரு தரப்பு விமர்சனங்கள் ஏராளம். அவற்றில், நினைவில் நின்றவை மட்டும் இங்கே.


* ஆட்சியைத் தக்கவைக்க, காங்கிரசின் தயவு வேண்டும் என்பதால், இலங்கைத் தமிழர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார். - ராமதாஸ், 25.3.2009


* இலங்கைத் தமிழர் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி மாற்றி மாற்றி பேசுகிறார். இருப்பது ஓர் உயிர். அது, இலங்கைத் தமிழர்களுக்காகப் போகட்டும் என்றார். பின்னர், "மத்திய அரசு நினைத்தால், இலங்கைத் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றலாம். இல்லையென்றால், இங்குள்ள தமிழர்களும் சாக வேண்டியது தான்' என்றார். அதிலிருந்தும் பல்டியடித்து, "இலங்கைத் தமிழர் பிரச்னையில் இதை விட அதிகமாக செய்வதற்கு எதுவும் இல்லை' என்கிறார். - ராமதாஸ், 11.4.2009


* இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறும் ராமதாஸ், மத்திய அமைச்சரவையில் தன் மகனை இன்னும் நீடிக்கச் செய்வது ஏன்? பதவியை ராஜினாமா செய்துவிட்டு இதையெல்லாம் பேசியிருந்தால், ராமதாஸ் நேர்மையானவர் என கருதலாம். - கருணாநிதி, 16.4.2009


* தமிழக முதல்வர் கருணாநிதி டில்லி சென்று, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் முன் அமர்ந்து, இலங்கைப் போரை நிறுத்தும்படி வலியுறுத்தியிருக்க வேண்டும். மாறாக, பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுப்பதெல்லாம் கண் துடைப்பு வேலை. - அன்புமணி, 22.4.2009


* லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி, 40க்கு, 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். தேர்தல் முடிந்ததும், தமிழக அரசியலிலும், தி.மு.க., ஆட்சியிலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். - ராமதாஸ், 27.4.2009


* பஸ் கட்டணக் குறைப்பு என்பது, இதற்கு முன் கேள்விப்பட்டிராதது. லோக்சபா தேர்தலை ஒட்டி இந்த நடவடிக்கையை எடுத்துள்ள முதல்வர் கருணாநிதியும், போக்குவரத்து அமைச்சர் நேருவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். - ராமதாஸ், 3.5.2009


* லோக்சபா தேர்தல் வருவதால், இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக மக்களை ராமதாஸ் ஏமாற்றுகிறார். அவருக்கு இந்தத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். - ஸ்டாலின், 7.5.2009


* டாஸ்மாக் நிறுவனம், 12,300 கோடி ரூபாய் லாபத்தில் இயங்குவதாக, தி.மு.க., அரசு சொல்கிறது. அது, ஏழைகளிடம் இருந்து சுரண்டப்பட்ட பணம். - ராமதாஸ், 9.1.2010


* குடிசை மாற்று வாரியம் என்பது, குடிசைகளை ஒழித்து, அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக, 1967ம் ஆண்டு தி.மு.க., அரசால் உருவாக்கப்பட்டது. ஆனால், சென்னை இன்னமும் குடிசைகளின் நகரமாகத் தான் இருக்கிறது. - ராமதாஸ், 9.1.2010


* தி.மு.க., - அ.தி.மு.க., என எந்தக் கட்சியும் கூட்டணி வைக்கத் தயாராக இல்லாததால், விரைவில் பா.ம.க., என்ற கட்சியே காணாமல் போய்விடும். - ஸ்டாலின், 19.1.2010


* வாக்காளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வினியோகிக்கும்போது தி.மு.க.,வினர் கையும், களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர். அப்படியும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். - ராமதாஸ், 27.2.2010


* தி.மு.க.,வுடனான கூட்டணியில் மீண்டும் இணைய நாங்கள் விரும்புகிறோம்; ராஜ்யசபா சீட் ஒன்றை எங்களுக்கு ஒதுக்க வேண்டும். - ராமதாஸ், கடிதம்


* வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தான் ராஜ்யசபா தேர்தலில் சீட் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்கப்படும். - தி.மு.க., தீர்மானம், 30.5.2010


* தன்னைத் தானே சமூக நீதி போராளி என அழைத்துக்கொள்ளும் கருணாநிதி, ஜாதிவாரி கணக்கெடுப்புக்குத் தயாராக இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. - ராமதாஸ், 26.8.2010


* புராணங்களில் குரு என்றழைக்கப்பட்ட சுக்கிராச்சாரியார், நல்லவற்றை நடக்கவிடாமல் தடுத்து வந்தார். (காடுவெட்டி ) குரு என்றால் அது தான் அர்த்தம். - கருணாநிதி, 5.9.2010


* இந்தியாவிலேயே அதிகம் இளம் விதவைகள் இருப்பது தமிழகத்தில் தான். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் வரை இந்நிலை தான் தொடரும். - ராமதாஸ், 8.1.2011


* காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. - கருணாநிதி, 30.1.2011


* கூட்டணி குறித்து பா.ம.க., இன்னும் முடிவு செய்யவில்லை. எங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழைப்பு வருகிறது. - ராமதாஸ், 30.1.2011


* பா.ம.க., இருக்கிறது என்று நாங்கள் சொன்னபோது, அவர் மறுத்தார். இனி, கூட்டணி பற்றிய கேள்விக்கே இடமில்லை. - கருணாநிதி, 1.2.2011


* பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்க சோனியா விரும்பவில்லை. டில்லியில் அவர் என்னிடம், "எதிரிகளைக் கூட மன்னித்துவிடலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது' என்றார். - கருணாநிதி, 3.2.2011


* தி.மு.க., - பா.ம.க., கூட்டணி மகத்தான வெற்றி பெறும். - ராமதாஸ், 17.2.2011


நன்றி : தினமலர் 26.02.2011 பதிப்பு