திங்கள், 3 அக்டோபர், 2016

மருத்துவக் கடவுள்

மருத்துவக் கடவுள்


கிமு 35 ஆம் ஆண்டு.... 


( இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் )

கிரேக்க பேரரசர் ஜூலியஸ் சீசர் மரணப் படுக்கையில் இருக்க ,அவரின் உடல்நலம் பற்றி வெளியே தெரிந்தால் , அண்டை நாட்டு மன்னன் கிரேக்கத்தை கைப்பற்ற முதலக் கூடும் என்பதால் ரகசியமாக அரண்மனையில் வைத்தியம் நடக்கிறது. அரசர் நலம் பெற்று விரைவில் மக்கள் முன் தரிசனம் தருவார் என அறிவிக்கிறார் பேரரசி கிளியோபாட்ரா .

இருந்தாலும் மக்கள் மத்தியில் கவலை . மருத்துவக் கடவுளை நோக்கி ஓடுகிறார்கள். ஒலிம்பஸ் குன்றின் அடிவாரத்தில் மக்கள் குவிகிறார்கள் . இருந்தாலும் குன்றின் மேல் ஏற மக்களுக்கு அனுமதியில்லை. கீழே இருந்தவாறே சூரியனை தொழுகிறார்கள்.. ஏனென்றால் சூரியனுக்கான கிரேக்க கடவுள் தான் மருத்துவத்திற்கும் கடவுள் ..


மந்திரி பிரதானிகளுடன் தலைமை மருத்துவ குரு குன்றின் மேலே, மருத்துவ கடவுளை நோக்கி பூஜை செய்தார். திடீரென அவர் கண்களில் பிரகாசம் ... மந்திரிகள் ஏன் என்று கேட்க ... மருத்துவ கடவுள் தன் கண் முன் தோன்றியதாகவும் மன்னர் குணமாவார் என கூறியதாகவும் சொன்னார்.

எங்கள் கண்களுக்கு தெரியவில்லையே என மந்திரிகள் கேட்க , யாருடைய மனைவி பத்தினியோ அவர்கள் கண்ணுக்கு மட்டுமே தெரிவார் என கூறிவிட்டு குரு புறப்பட்டார். நம் கண்களுக்கு தெரியவில்லை என கூறினால் நம் மனைவி பத்தினி இல்லை என ஆகிவிடும் .எனவே நேரம் ஆக ஆக எல்லா மந்திரிகளும் கடவுளை பார்த்துவிட்டதாக கூறி கீழே வந்தனர். மக்களிடம் மருத்துவக் கடவுளை கண்டதாகவும் ,மன்னர் குணமாகிவிடுவார் என கூறியதாகவும் தெரிவித்தனர்.

www.facebook.com/mohan.salem1

இருந்தாலும் மக்களிடம் குழப்பம் நீடிக்கவே , தலைமை தளபதி வந்து மலையில் ஏறி , அவரும் கடவுளை பார்த்ததாக கூறினார். இது தான் சாக்கு என மன்னனால் ஓரம்கட்டப்பட்டு இருந்த குறுநில மன்னன் தாலாமாவல்ஸ் ஒலிம்பஸ் மலைக்கு வந்தார். மலையின் இரண்டாம் சுற்று வரை சென்றதாகவும் , கடவுளை பார்த்தவர்கள் மன்னர் குணமாகி விடுவார் என கூறியதாகவும் சொன்னார்.

மன்னர் குணமானாரா இல்லையா .. ( விரைவில் ...)

சொல்ல மறந்துவிட்டேனே ... கிரேக்க புராணங்களின் படி .. மருத்துவ கடவுளின் பெயர் என்ன தெரியுமா... ?

"அப்போலோ" 


- மோகன் , சேலம்