புதன், 21 டிசம்பர், 2016

மோகன் சினிமா விருதுகள் 2016

மோகன் சினிமா விருதுகள் 2016


ஒவ்வொரு ஆண்டும் எனக்கு பிடித்த சினிமாக்களை மோகன் சினிமா விருதுகள் என்ற பெயரில் குறிப்பிட்டு வருகிறேன். அந்த வரிசையில் இதோ வெற்றிகரமாக 7 ஆம் ஆண்டு சினிமா விருதுகள் .....



சிறந்த படம் – ஆண்டவன் கட்டளை ( மணிகண்டன் ) , விசாரணை (வெற்றிமாறன் ),  ஜோக்கர் ( ராஜு முருகன் )
இயக்குனர் – சுதா கொங்கரா ( இறுதி சுற்று ) , ராஜு முருகன் ( ஜோக்கர் )

கதை – சந்திரகுமார் ( விசாரணை ) சமுத்திரக்கனி ( அப்பா )
திரைக்கதை – அருள்செழியன் , மணிகண்டன் , அனுசரண் ( ஆண்டவன் கட்டளை )
வசனம் – சசி ( பிச்சைக்காரன் ) ராஜூமுருகன் (ஜோக்கர் )

ஒளிப்பதிவு –  மணிகண்டன் ( குற்றமே தண்டனை ) , வெற்றிவேல் மகேந்திரன் ( தொடரி )
படத்தொகுப்பு – கிஷோர் ( விசாரணை )
பின்னணி இசை - இளையராஜா ( தாரை தப்பட்டை )

பாடலாசிரியர் – நா.முத்துக்குமார் (கொஞ்சி பேசிட வேண்டாம், சேதுபதி ) தாமரை (தள்ளிப் போகாதே , அ.எ.மடமையடா )   யுகபாரதி (
என்னங்க சார் உங்க சட்டம் ,ஜோக்கர் )  
பாடகர் - சியான் ரோல்டன் ( அடியே அழகே , ஒருநாள் கூத்து ), சத்யபிரகாஷ் ( ராசாளி , அ.எ. மடமையடா )
பாடகி –  ஷ்ரேயா கோஷல் ( கண்ணை காட்டு போதும் , றெக்க ) , சுப்ரியா ஜோஷி ( நெஞ்சோரத்தில் , பிச்சைக்காரன் )
ஹிட் பாடல் : ஜித்து ஜில்லாடி ( தெறி ) , நெருப்புடா ( கபாலி ), ஆவி பறக்கும் டீக்கடை ( ரஜினி முருகன் )

நடனம் – பிரபு தேவா ("சல் மார்" பாடல் , தேவி )
கலை – ராஜீவன் ( காஷ்மோரா )
கிராபிக்ஸ் - காஷ்மோரா டீம்
ஒப்பனை – நிகார் தவான், ரோஷன் ( காஷ்மோரா )
சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன் ( தெறி ) , திலீப் சுப்பராயன் ( கிடாரி )

நடிகர் – எஸ்ஜே.சூர்யா ( இறைவி ), சமுத்திரக்கனி ( விசாரணை ), விஜய் சேதுபதி ( ஆண்டவன் கட்டளை )
நடிகை – வரலட்சுமி ( தாரை தப்பட்டை ) , ரித்திகா சிங் ( இறுதி சுற்று ) 

அறிமுக நடிகர் - குரு சோமசுந்தரம் ( ஜோக்கர் ) 
அறிமுக நடிகை - நிவேதா பெத்துராஜ் ( ஒருநாள் கூத்து ) 
துணை நடிகர் – தம்பி ராமையா ( அப்பா ), இ.ராம்தாஸ் ( விசாரணை )
துணை நடிகை – பூஜா தேவரியா ( இறைவி ), சரண்யா ( கொடி )

நகைச்சுவை – சூரி , ரோபோ சங்கர் ( வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் )
வில்லன் – வேல ராமமூர்த்தி ( கிடாரி ), பாபி சிம்ஹா ( மெட்ரோ )
குழந்தை நட்சத்திரம் – நைனிகா ( தெறி ), விக்னேஷ் , கேப்ரில்லா ( அப்பா )

சிறந்த தயாரிப்பு – ஜெ.செல்வகுமார் ( ஒரு நாள் கூத்து ) , விஜயகுமார் ( உறியடி)
சிறந்த பொழுதுபோக்கு படம் - ரஜினிமுருகன் ( பொன்ராம் ) , கபாலி ( ரஞ்சித்) 

 சிறந்த படம் , சிறப்பு விருது - இளமி ( ஜுலியன் பிரகாஷ் ) பாரம்பரிய ஜல்லிக்கட்டின் பெருமையை படமாக்கியதற்காக ....
டிவி - பாலிமர் நியூஸ்
டிவி தொகுப்பாளர் - அரவிந்த் சாமி ( நீ.வெ. ஒரு கோடி , விஜய் டிவி )
டிவி நிகழ்ச்சி - ஒரு வார்த்தை ஒரு லட்சம் ( விஜய் டிவி )


நல்லவற்றை குறிப்பிடும் போது மோசமானவை பற்றியும் சொல்லவேண்டும் அல்லவா...

இதோ மோசமான படங்களுக்கான "சுறா" விருதுகள் 


படம் -  முத்தின கத்தரிக்காய் ( வெங்கட் ராகவன் )
கதை - பாக்யராஜ் கண்ணன் ( ரெமோ )
நடிகர் - சுந்தர். சி ( முத்தின கத்திரிக்காய் )
நடிகை - ஏமி ஜாக்சன் (கெத்து )
டிவி - தந்தி டிவி
டிவி நிகழ்ச்சி - நிஜங்கள் ( சன் டிவி )
டிவி தொகுப்பாளர் - ஆதவன் ( காமெடி ஜங்சன், சன் டிவி  )

சூர்யகாயத்ரி

சூர்யகாயத்ரி 

- கேரளாவின் தெய்வீக குழந்தை


இந்த 9 வயது குட்டி தேவதை இன்று கேரளா கொண்டாடும் இசைக் குழந்தை .வ்ட கேரளாவில் வடகரை அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஏழை மிருதங்க வித்வானின் மகள் சூர்யகாயத்ரி . 



பிறவியிலேயே தெய்வீக குரல் அமைய பெற்ற இவரை கோழிக்கோட்டில் இசைப் பயிற்சி அளித்தார் இவரது தந்தை. சில மாதங்களுக்கு முன் புகழ் பெற்ற சென்னை நாரத கான சபாவில் இவர் நடத்திய இசைக்கச்சேரி காண்போரை மயக்கியது.

காயத்ரியின் திறமையை அறிந்த சென்னையை சேர்ந்த இசைக்கலைஞர் குல்தீப் , காயத்ரியுடன் இணைந்து பக்தி கானங்களை வழங்கிவருகிறார். யூடியூபில் வெளியிடப்படும் காயத்ரியின் ஒவ்வொரு வீடியோவும் லட்சக்கணக்கில் லைக் வாங்குகிறது.

ஜேசுதாசின் குரலிலேயே கேட்டுப் பழகிய ஹரிவராசனம் பாடலை இவரின் குரலில் கேட்டால் மெய் மயங்கும். MS.அம்மாவின் பாடல்களும் ... காயத்ரியின் பாடல்களை யூ டியூபில் காணலாம். அல்லது குல்தீப்பின் பேஸ்புக் பக்கத்தில் [ https://www.facebook.com/kuldeepmpai/videos ] காணலாம்.

சாம்பிள் வீடியோ ...
https://www.youtube.com/watch?v=ezKWPd9rH0M