செவ்வாய், 29 மார்ச், 2016

லிண்ட்சே‬ லோஹன் w/o மாரியப்பன்

லிண்ட்சே‬ லோஹன் w/o மாரியப்பன்

- வா. மணிகண்டன்


அட்டகாசமான சிறுகதை தொகுப்பு. மின்னல் கதைகள் என குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர் . உண்மையிலேயே மின்னல் கதைகள் தான். ஒரு சராசரி மனிதனின் பார்வையில் நடக்கும் சம்பவங்கள் . ஆனால் முடிவுகள் அதிர்ச்சி தரும் அல்லது ஆச்சர்யம் தருகிறது. சில கதைகளில் நம்மை பொருத்தி பார்க்க முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஆழ்மனதில் சில விபரீத ஆசைகள் இருக்கும் . அவை யாருக்கும் தெரியாமலே நிராசை ஆகி விடும் .

பல கதைகள் இது போன்ற மனிதனின் மனோபாவத்தை உரசிப் பார்க்கிறது. அதே நேரத்தில் மிகவும் நுணுக்கமாகவும் எழுதி இருக்கிறார். உதாரணமாக 50களில் நடக்கும் ஒரு கதையில் நெல் அரிசியின் அருமை, அளவுமுறை போன்றவை , சாதிகள் குறிப்பிடப் படும் கதைகளில் முகத்தில் அறையும் உண்மைகள் .... படித்துப் பாருங்கள் .உங்களுக்கு ஒரு புதிய வாசிப்பு அனுபவம் கிடைக்கும். யாவரும் வெளியீடு.

ஆன்லைனில் வாங்க ....

http://discoverybookpalace.com/products.php…

வியாழன், 17 மார்ச், 2016

டார்வின் ஸ்கூல்



டார்வின் ஸ்கூல்


''குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் - டார்வின்'' . இதை தவிர நமக்கு டார்வினைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால் அது கூட தவறுதான். குரங்கும் மனிதனும் ஒரே மூதாதையரிடம் இருந்து வந்தவை என்றே டார்வின் சொன்னார். டார்வினின் கோட்பாடுகளை அழகாக எளிமை படுத்தி கொடுத்துள்ளார் ஆசிரியர் ஆயிஷா நடராஜன். 


இயற்கையை இத்தனை எளிமையாக யாரும் சொல்லி கொடுக்கவில்லை. விலங்குகள் படிக்கும் ஒரு கற்பனை பள்ளிக்கூடம் (டார்வின் ஸ்கூல் ) . அதில் வரும் விலங்குகளின் வழியாக உலகின் தோற்றம், உயிரினங்களின் தோற்றம் , பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் வாழ்க்கை முறை , இயற்கையை அழிக்கும் மனிதன் ... என அட்டகாசமான பதிவு.
இது குழந்தைகளுக்கான நூல் மட்டும் அல்ல. ஒவ்வொரு பெரியவர்களும் படிக்க வேண்டிய நூல் .

ஆன்லைனில் வாங்க...
http://discoverybookpalace.com/products.php?product=டார்வின்-ஸ்கூல்

செவ்வாய், 1 மார்ச், 2016

மெனிஞ்சியோமா




- கணேச குமாரன்


உடல்நலமின்றியோ அல்லது விபத்தில் சிக்கியோ மாதக்கணக்கில் , வருடக்கணக்கில் படுக்கையில் இருப்பவர்களை நாம் சந்தித்திருப்போம் , கடந்து வந்திருப்போம் . அவர்களின் வலியையும் ஒரு சின்ன பரிதாபத்தோடு கடந்திருப்போம். ஆனால் அந்த வலியை உணர்ந்திருக்கிறீர்களா..

சந்துருவுக்கு மூளையில் உள்ள கொழுப்பை நீக்க ஆப்ரேஷன் நடக்கிறது. ஆப்ரேசனுக்கு முன்னும்,பின்னும் , மருத்துவமனையிலும் வீட்டிலும் அவன்படும் வேதனையை ஒவ்வொரு வரியிலும் உணர்த்துகிறார் கணேசன் . 


அறுவை சிகிச்சைக்குப்பின் ஒரு சொட்டு நீருக்காக தவிப்பதாகட்டும் , ஒரு துளி சிறுநீர் பிரிவதாகட்டும் .. வார்த்தைகளிலேயே வலியை நமக்கு கடத்துகிறார் . சந்துரு , அவன் அப்பா காளிதாஸ் மற்றும் மருத்துவ அறிவியல் மூன்றின் வழியாகவும் பயணிக்கிறது கதை. சுஜாதாவின் "தலைமைச்செயலகம்" எனக்கு மூளை பற்றிய அறிவியலை தந்தது. கணேச குமாரனின் மெனிஞ்சியோமா மூளைப் பற்றிய உணர்வியலை தந்தது.

"பைத்தியருசி" நூலுக்கு சற்று முன்னர்தான் கணேசகுமாரன் எனக்கு நண்பர் மூலம் அறிமுகம் ஆனார். ஆனால் வாடா மாப்ளே என அழைக்கும் அளவுக்கு உரிமை எடுத்துக்கொள்ளும் நண்பன் . கணேசகுமாரனின் "மிஷன் காம்பவுண்ட்" என்ற சிறுகதை தொகுப்பு பிப்ரவரி 14 அன்று வெளிவரவுள்ளது. அதோடு சேர்த்து மெனிஞ்சியோமாவையும் சேர்த்து வாங்கிப் படிப்பது உங்களுக்கும் கணேசனுக்கும் நன்மை பயக்கும்.

ஆன்லைனில் வாங்க....
http://discoverybookpalace.com/products.php?product=மெனிஞ்சியோமா

மிஷன் காம்பவுண்ட்



மிஷன் காம்பவுண்ட்




குலசாமிக்கு பலியிட ஆடு வளர்ப்பவன் அதன் மீது வைத்த பாசப் போராட்ட மன உளைச்சலில் தன்னையே பலிகொடுக்கும் இசக்கி (குலசாமியைக் கொன்றவன்);
இரண்டாவது மனைவியாக வாக்கப்பட்டு அன்பும், தியாகமும் வெளிஉலகுக்கு புரியாவிட்டாலும் கடைசிவரை நேர்மையாய் வாழ்ந்து சாகும் சுசீலா (அப்பாவின் காதலிக்கு... )


நாகர்கோவில் மண் வாசனையுடன் காதல் வாழ்க்கையின் வலி , வலியால் சந்தேகம் , சந்தேகத்தின் பலி .. என உருக்கும் மனிதர்கள் ( மிஷன் காம்பவுண்ட் ) ;
யானையின் கனவு முதல் வானத்தின் கனவு வரை சிதைக்கும் மனிதம் ( யானையின் கனவில் .... )

ஜி.கே , உறை , வாக்குமூலம் , தனி .... எல்லாமே தனிமையில் உழலும் மனிதர்களின் கனவு ,வலி , வன்மம் , காமம் , ஏக்கம் , நட்பு , துரோகம் , தற்கொலை எண்ணங்கள்.. என ஆழ்மனத்தின் வலியையும் , வக்கிரங்களையும் வீரியமாக பதிவு செய்கிறார் ஒவ்வொரு கதையிலும் . கதையாக இவை எல்லாமே அருமையானவை. சொந்த பாதிப்பும் உள்ளது எனில் மீண்டு வா கணேசா...


மிஷன் காம்பவுண்ட்
தக்கை பதிப்பகம் , சேலம் .

புத்தகம் தேவைப்படுவோருக்கு...
டிஸ்கவரி புக் பேலஸ் , சென்னை Ph:044-65157525 ,9940446650

கணேசகுமாரன் , சென்னை
98409-24906

குற்றப் பரம்பரை



குற்றப் பரம்பரை 

- வேல ராம மூர்த்தி


ஜுனியர் விகடனில் கூட்டாஞ்சோறு என்ற தலைப்பில் தொடராக வந்தது . இவ்வளவு வீரியமான கதைக்கு "குற்றப் பரம்பரை" என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்பதால் பெயர் மாற்றப் பட்டது.


இந்த புத்தகத்தை முதலில் சில பக்கங்கள் படித்தேன். சில பக்கங்களிலேயே தெரிந்துகொண்டேன் இது ஓரே மூச்சில் படிக்கவேண்டிய நூல் என்று. காலை ,மாலை, இரவு , அதிகாலை என மூன்றே நாளில் படித்து முடித்த பிறகுதான் கீழே வைக்க முடிந்தது.

நூறாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வாழ்ந்த இரண்டு இன மக்களின் வரலாறு.. ரத்தமும் சதையும் அன்பும் துரோகமும் கலந்து வீரியமாக எழுதியுள்ளார் வேல.ராமமூர்த்தி . இது அவரின் முப்பாட்டன் கதை தான். நிச்சயமாக இந்த நூல் காலம் கடந்து நிற்கும் தமிழ் பொக்கிஷங்களில் ஒன்றாக இருக்கும்.

குற்றப்பரம்பரை
வேல.ராமமூர்த்தி
விலை . ரூ .400
ஆன்லைனில் வாங்க ..
.

http://discoverybookpalace.com/products.php?product=குற்றப்-பரம்பரை