ஞாயிறு, 16 நவம்பர், 2014

அன்பு முத்தம்

 அன்பு முத்தம்


சென்னை ஐஐடி வளாகம்....

சென்னைவாசிகளுக்கே தெரியாது சென்னையில் இவ்வளவு அழகான, ரம்மியமான ஒரு இடம் இருக்கும் என்று.. தலையெல்லாம் மூளைன்னு சொல்லுவாங்களே அந்த அளவுக்கு படிப்பாளியா இருந்தா தான் இங்கு இடம் கிடைக்கும். நண்பர் ஒருவரை பார்க்க சென்றிருந்தேன். அருமையான சூழலை ரசித்தவாறே மெல்ல நடந்தேன் . கேண்டீன் அருகே காத்திருக்க சொன்னார் .
கேண்டீன் அருகே உள்ள புல்வெளியில் மாணவ மாணவிகள் குவிந்திருந்தனர். அதில் ஒருவர் பேசினார் .

''டியர் பிரெண்ட்ஸ் .. இன்றைய நவீன உலகில் நம் விருப்பபடி வாழ நமக்கு உரிமை உண்டு. கலாசாரம் என்ற பெயரில் சிலர் இதை எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு நம் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்த அன்பு முத்தம் நிகழ்ச்சி . நீங்கள் உங்கள் நண்பர் அல்லது காதலரை கட்டிபிடித்து முத்தமிடுங்கள் '' என்றார். எல்லோரும் ஹே .. என கத்தினார்கள். ஒருவரை ஒருவர் கட்டி கொண்டு முத்தமிட்டனர். நான் மெல்ல எழுந்து அருகே சென்றேன்.
ஒரு மாணவியிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன்.
''எல்லோரும் சந்தோசமா இருக்கீங்க , சரிதான் ... இருந்தாலும் இது தப்பில்லையா ''
இதிலென்ன தப்பு அங்கிள் ..?
நான் அங்கிள் லாம் இல்லமா ...!
ஹஹா.. நீங்க அங்கிள் தான் . அதனால தான் உங்களுக்கு இது புரியல..!
அப்படி இல்லமா...
அப்புறம் என்ன ... இங்க வாங்க ..
அய்யோ.... வேண்டாம்மா.... விடும்மா ..

என் பேச்சை அந்த பெண் கேட்கவே இல்லை. சிரித்து கொண்டே என்னை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
.
.
.
.
.ஏங்க .. தூங்கிக்கிட்டே ஏங்க சிரிக்கிறீங்க.. எந்திரீங்க .. மணி 7 ஆகுது ... போய் சிக்கன் வாங்கிட்டு வாங்க.. !

அடடா.. என்ன ஒரு அருமையான கனவு....!