சனி, 29 ஜனவரி, 2011

என் பெயர் மரியாட்டு






என் பெயர் மரியாட்டு
ஆசிரியர் :மரியாட்டு கமரா ,சூசன் மேக்கிளிலேன்ட்
தமிழில் : அஞ்சனா தேவ்

ஆப்ரிக்காவின் வடமேற்கில் உள்ள ஒரு சிறிய நாடு சியாரா லியோனி .
சுமார் 14ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் கைகள் வெட்டப்பட்ட ஒரு சிறுமியின் போராட்ட வரலாறு. பின்னர் ஐநா அமைதிப் படையின் உதவியோடு போர் முடிவுக்கு வந்தது. ஒவ்வொரு போரிலும் சாதாரண அப்பாவி பொதுமக்கள் படும் கொடுமைகளை நம் கண்முன் நிறுத்துகிறார் மரியாட்டு.

ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்ற எண்ணமே தோன்றாத அளவுக்கு மொழிபெயர்த்திருக்கிறார் அஞ்சனாதேவ் .

எந்த ஒரு புத்தக விமர்சனமும் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறீர்களா..

நினைக்கலாம்..

ஆனால் இந்த நூலை ஏன் படிக்கவேண்டும் என்பதற்கு சில காரணங்கள்...

முதுமையின் தம்பட்டம் அல்ல .

நம்ம ஊருல எழுபது வயசுக்கு மேல ஆகியோ அல்லது அரசியல் அநாதை ஆகிவிட்டாலோ ,உடனே சுயசரிதம் எழுதுவார்கள்..னார்கள்..

ஆனால் பன்னிரண்டு வயதில் கைகள் வெட்டப்பட்ட மரியாட்டு,அதன் பின்னர் நடந்த போராட்டங்களை ,தன்னுடைய இருவதாவது வயதில் இந்த நூலை வெளியிட்டார்.தற்போது கனடாவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் படித்துகொண்டிருக்கிருக்கும் மரியாட்டுக்கு வயது இருபத்தி ஐந்து.


ஈழமோ சியாராவோ


இந்த நூல் ஒரு மரியாட்டுவின் கதை மட்டும் அல்ல.ஈழத்தில் ,ஈராக்கில் என உலகம் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கைப் போராட்டம் ..


கனடா....!


ஈழத்தில் மட்டுமல்ல,இந்தியாவிலும் முகாமில்தான் வாழ்கிறான் தமிழன் அகதிகள் என்ற பேரில்..ஆனால் எங்கோ உள்ள கனடா அவர்களை வாழ வழிசெய்கிறது.மரியாட்டுவும் இன்று கனடாவில் தான் வாழ்கிறார். கனடாவை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளரின் உதவியுடன் தான் இந்த நூலை எழுதியிருக்கிறார்.

அவசியம் இந்த நூலைப் படியுங்கள். விகடன் பிரசுரத்தின் சிறந்த வெளியீடுகளில் ஒன்று.
மரியாட்டு தற்போது ஐநா சபையின் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைதி தூதராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.அவரைப் பற்றி மேலும் அறிய
www.mariatufoundation.com
என்ற வலைத்தளத்தை பாருங்கள்.

என் பெயர் மரியாட்டு
விலை. ரூ.95
விகடன் பிரசுரம்
757 அண்ணா சாலை
சென்னை.
pubonline@vikatan.com



புதன், 19 ஜனவரி, 2011

மோகன் விருதுகள்

மோகன் விருதுகள் 2010



சிறந்த படம் - அங்காடித் தெரு, மைனா
இயக்குனர் - வசந்த பலன் (அங்காடித் தெரு)
கதை - வசந்த பலன் (அங்காடித் தெரு)
திரைக் கதை - பிரபு சாலமன் (மைனா)
வசனம் - பாண்டிராஜ் (வம்சம்)
ஒளிப்பதிவு - சுகுமார் (மைனா )
பாடல் இசை - ஏ.ஆர்.ரஹ்மான் (வி.தா.வருவாயா)
பின்னணி இசை - இளையராஜா(நந்தலாலா)
சிறந்த பாடல் - பூக்கள் பூக்கும் - நா.முத்துகுமார்
( மதராசப்பட்டினம்)
-அவள் அப்படி ஒன்றும் -நா.முத்துகுமார் (அ.தெரு)
-நீயும் நானும் - ஏக்நாத் (மைனா)
பாடகர் - கமலஹாசன் - நீல வானம் (மன்மதன் அம்பு )
பாடகி - அனுராதா ஸ்ரீராம் - காட்டு சிறுக்கி (ராவணன்)
நடிகர் - ஆர்யா (ம.பட்டினம்)
நடிகை - அஞ்சலி (அங்காடித்தெரு)
குணசித்திர நடிகர் - சேது, தம்பி ராமையா (மைனா)
குணசித்திர நடிகை - சரண்யா (தென்மேற்குப் பருவக்காற்று)
நகைச்சுவை - சந்தானம் ( பல படங்கள்)
கலை - T. சந்தானம் (ஆயிரத்தில் ஒருவன்)
கிராபிக்ஸ்,ஒலிப்பதிவு - எந்திரன்
டிவி - டிஸ்கவரி தமிழ்
டிவி நிகழ்ச்சி - நீயா நானா ,விஜய்
புத்தகம்- என் பெயர் மரியாட்டு - விகடன் பிரசுரம்
வரலாற்றுச் சுவடுகள் - தினத்தந்தி
குறிப்பு :
இன்று விருதுகள் பல்வேறு அமைப்புகள் ,பல்வேறு கணக்கீடுகளில் வழங்குகின்றன. ஆனால் நமக்கு பிடித்தவை என்று ஒன்று இருக்கும்.அதுபோல எனக்கு பிடித்தவவைகளுக்கு நான் இந்த விருதுகளை வழங்குகிறேன் . உங்களுக்கு பிடித்தவைகள் வேறாகவும் இருக்கலாம். உங்கள் விருப்பங்களை பதிவு செய்யுங்கள்

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கங்கையில் குளிப்பது புண்ணியமாம் ...!

கங்கை புனித நதியாம்...

காசியில் குளிப்பது புண்ணியமாம் ...!






அமைதியாய் மிதக்கும் பிணம் ....

அதை கொத்தி தின்னும் காகம் ...!

அருகேயே நீராடும் மக்கள்..

வாழ்வில் ஒரு முறை காசிக்குப் போய் வாருங்கள் ...