வெள்ளி, 26 டிசம்பர், 2008

ஒரு நிமிடம்


கடைக்குச் செல்கிறீர்களா ...

ஒரு நிமிடம் ...!

பை எடுத்துச்செல்லுங்கள் ..

தமிழக நகரங்களில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் ஏழு கேரிபேக்குகள் வீதம் ஆண்டுக்கு சுமார் இரண்டாயிரம் கேரிபேக்குகள் பயன்படுத்தப் படுகிறது .கேரிபேக் உபயோகிப்பது ஒரு நாகரீகம் ஆகிவிட்டது . நாம் நினைத்தால் இவற்றை முடிந்த அளவுக்குத் தவிக்கமுடியும். காய் ,பால் ,மளிகை என என்ன வாங்க சென்றாலும் ஒரு பை எடுத்துச் செல்வோம் .( சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்படித்தான் செய்தோம்).

மண் மாசுபடுவதைத் தவிர்ப்போம். அடுத்தத் தலைமுறைக்கு வளமான பூமியை விட்டுச் செல்வோம்.

திங்கள், 22 டிசம்பர், 2008

தமிழ் சினிமாவில் ...


தமிழ் சினிமா...

கற்பழிக்க முயலும் வில்லனிடம் இருந்து பயங்கரமாக சண்டை போட்டு , கதாநாயகியை காப்பாற்றுவார் ஹீரோ .

''தெய்வம் மாதிரி வந்து காப்பாத்துனீங்க ''

''நான் என் கடமையை தான் செய்தேன் ''

போன்ற பரஸ்பர டயலாக்குகளுக்கு பிறகு அதே வேலையை ஹீரோ செய்ய ஆரம்பிப்பார்...!

ஒரு பட்டிமன்றத்தில் திண்டுக்கல் லியோனி

டி ஆர் கோபப்பட்டால் ...

உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்குமேயானால் இந்த வீடியோவைப் பார்த்து வாய் விட்டு சிரிக்கவும் .

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

உன் மனதை ...






கணிப்பொறியில் 'சர்ச்'



பட்டன் இருப்பது போல ...



உன் மனதில்



தேடுவதற்கும்



ஏதேனும் வழி இருந்தால்



சொல்லேன் ...



சனி, 20 டிசம்பர், 2008

பூ பூக்கும்



பாலைவனத்திலும்


பூ பூக்கும் ...


உன் மனதில்


காதல்


பூத்தது போல ...

காதல்



குழந்தையின்

கையில் உள்ள

பந்து போல

உன் கையில்

என் காதல் ....

இஷ்டம் போல

விளையாடுகிறாய் ...

வாய்ப்பு


உங்கள் கனவுகளும் ,நம்பிக்கைகளும் தகர்க்கப் படும்போது ,அந்த சிதைவுகளுக்கிடையே தேடிப்பாருங்கள். இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும் .

வெள்ளி, 19 டிசம்பர், 2008

அன்பே ...


நீ
நான்
உற்சவம் ...

நீ இல்லாத
நான்
சவம்...

வியாழன், 18 டிசம்பர், 2008

வணக்கம்

வணக்கம் நண்பர்களே
நான் மோகன் . சேலத்திலிருந்து எழுதுகிறேன் .
என்னுடைய எண்ணங்கள் ,கனவுகள் , கவிதைகள் ....
பார்த்தது , கேட்டது , படித்தது ........
மற்றும் சகலவிதமான என் கிறுக்கல்களை பதிவு செய்ய இந்த ப்லோக் எழுதுகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .