வெள்ளி, 31 டிசம்பர், 2010

புத்தகம் வாங்கலாம் வாங்க



புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 4 முதல் 17 வரை நடைபெறுகிறது. நிறைய புதிய நூல்கள் கண்காட்சியை ஒட்டி வெளிவர இருக்கிறதுபுத்தகங்களை வாங்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .புதிதாக புத்தகங்கள் வாங்க வருபவர்களுக்கு , எனக்கு தெரிந்த சில நூல்களை பரிந்துரை செய்கிறேன்.


அறிவியல் ,உளவியல்
தலைமை செயலகம் - சுஜாதா
மனிதனுக்குள் ஒரு மிருகம் - மதன்
வரலாறு
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
சோழர்கள் வரலாறு - நீலகண்ட சாஸ்த்ரி
கிமு கிபி - மதன்
வரலாற்று புதினம்
பொன்னியின் செல்வன் - கல்கி
கடல் புறா - சாண்டில்யன்
சோழ நிலா - மு.மேத்தா
சேரமான் காதலி - கண்ணதாசன்
வில்லோடு வா நிலவே - வைரமுத்து
அரண்மனை ரகசியம் - பா.விஜய்

சுயசரிதை

அக்னி சிறகுகள் - அப்துல் கலாம்
பட்டாம்பூச்சி - ஹென்றி ஷாரியர் (தமிழில் - ரா.கி.ரங்கராஜன் )
இது ராஜபாட்டை அல்ல - நடிகர் சிவகுமார்
இவன்தான் பாலா - இயக்குனர் பாலா
நான் வித்யா - லிவிங் ஸ்மைல் வித்யா
வனவாசம் - கண்ணதாசன்
வழிகாட்டி நூல்கள்
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - சுவாமி சுகபோதானந்தா
அத்தனைக்கும் ஆசைப்படு - சத்குரு ஜாக்கி வாசுதேவ்
சமயம்
அர்த்தமுள்ள இந்து மதம் - கண்ணதாசன்
இந்து மதம் எங்கே போகிறது - அக்னிகோத்ரம் தாத்தாச்சாரியார்
கடவுள் - சுஜாதா
புதினம்,நாவல்
கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து
கருவாச்சி காவியம் - வைரமுத்து
ஜாக்கிரதை வயது 16 - ப்ரியா கல்யாணராமன்
நைலான் கயிறு - சுஜாதா
ஒன்பது ரூபாய் நோட்டு - தங்கர்பச்சான்
சினிமாவுக்கு போன சித்தாளு - ஜெயகாந்தன்
புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
கவிதை
வைரமுத்து கவிதைகள் - வைரமுத்து
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் - தபூ சங்கர்
தேவதைகளின் தேவதை - தபூ சங்கர்
கார்ச்சிலம்பு ஓசையிலே - பா.விஜய்

மேலாண்மை
அல்ல அல்ல பணம் - சோம.வள்ளியப்பன்
கோல் - விகடன் பிரசுரம்
பாலியல்
உயிர் -dr.நாராயண ரெட்டி
அந்தரங்கம் -dr. ஷாலினி
காமத்திலிருந்து கடவுளுக்கு - ஓஷோ
0 டிகிரி - சாரு நிவேதிதா
ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை - நளினி ஜமீலா
நகைச்சுவை
மதன் ஜோக்ஸ் - மதன்
அப்புசாமி கதைகள்- பாக்கியம் ராமசாமி


மற்றவை
கற்றதும் பெற்றதும் ,பல பாகங்கள் - சுஜாதா
ஹாய் மதன், பல பாகங்கள் - மதன்
தற்கால தமிழ் அகராதி -க்ரியா
ஆகட்டும் பார்க்கலாம் - வீரபாண்டியன்
(காமராஜரைப் பற்றிய சிறந்த நூல் )


பதிப்பகங்கள்
பிரபலங்கள் வரலாறுகள் - கிழக்குப் பதிப்பகம்
பல்சுவை நூல்கள் - விகடன் பிரசுரம்
இலக்கிய நூல்கள் - காலச்சுவடு
ஆன்மிகம் - ஈஷா


இவையெல்லாம் என் நினைவுக்கு வந்த பெயர்கள் மட்டுமே .நேரில் சென்று பாருங்கள் .லட்சக்கணக்கான புத்தகங்கள் காத்திருக்கின்றன உங்களுக்காக .


வியாழன், 30 டிசம்பர், 2010

நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்


http://manguniamaicher.blogspot.com


ஒரு ஏழை விவசாயி ஸ்டெப் எடுத்திருக்கான் - நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்



புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப்பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.


கடந்த 23-ம் தேதிகொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.. பெரியண்ண அரசு தலமையில் இலவசவண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழாநடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர்வாசிக்கப்பட்டதும், கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.


அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியைவாங்கிக் கொண்டார் . ஒரு விநாடி அங்கே நின்றவர், டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார். ஏதோ கோரிக்கை மனுகொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப்படித்தார்.


அதில்மனிதனுக்கு டி.வி. என்பதுபொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் வாழ அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவைன்னிறைவு அடைந்துவிட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்துவிட்டதா?


துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது? இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழஙகும் பணத்தை வைத்துவிவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.


தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒருமாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனைமின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.


அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார்வரை அனைத்தையும் வாங்கிக்கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோஅதை நாங்களேபூர்த்திசெய்துதன்னிறைவு அடைந்துவிடுவோம்.


விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர்பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கா குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந டி.வி. வேண்டாம். முதல்வர்கருணாநிதி மீதுஎனக்கு மிகுந்தமதிப்பும், மரியாதையும், அன்பும்உள்ளது.


எனவே, இந்த டி.வி.யை அவருக்கேஅன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர் ப்பத்தைப்பயன்படுத்திக் கொள்கிறேன். அவர் இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்என்று நீண்டது அந்தமனு.


இதைப் படித்தபெரியண்ண அரசுமுகத்தில் ஈயாடவில்லை.அருகில்இருந்த

திகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.ி.யையும் வாங்கிவைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல்

விஜயகுமாரை அனுப்பிவைத்தார் அரசு.


இதன் பின்னர் விஜயகுமாரிடம் கூறியது .


நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின் வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன் கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும் ,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.


இந்த நிலை, நாளைக்கு எனக்கும் ன் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியிலபடுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.


சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு. ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடிகுடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப ட்டைக்கும் டி.வி. கொடுத்தால்

இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.


கனத்த இதயத்தோடும், வாடியவயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி .? அவன் பொழப்பே சிரிப்பா

சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்துவே சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யைதிருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.


டி.வி.யை திருப்பிக் கொடுத்தகையோடு முதல்வர்கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.



அந்தக் கடிதத்தில்கொத்தமங்கலத்துக்கு வந்தடி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்பரிசாகநீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

மக்களிடம்
இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம்தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார்

அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்ககும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரைபாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

செவ்வாய், 28 டிசம்பர், 2010

இதோ மீண்டும் ஒரு இலவசம்



இதோ மீண்டும் ஒரு இலவசம் உங்களை தேடி வருகிறது பொங்கல் பரிசாக . ப்ரீயா கொடுத்தா பெனாயிலக்கூட குடிப்பான் தமிழன் என்ற பழமொழியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் கலைஞர் . அதையும் நம்மிடம் இருந்து பிடுங்கி ( வரி,பெட்ரோல், டாஸ்மாக்! ...) நமக்கே தருவது .அந்த வரிசையில் இப்போது பொங்கல் பரிசு !

சரி பொங்கல் பரிசுக்கு வருவோம். இந்த முறை ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் உண்டாம் . சுமார் இரண்டு கோடி பார்சல்கள் தயாரிக்கப் பட்டுள்ளன.CXYN ÙTÖjL¥ ÙTÖ£yL¸Á ÙUÖ†R மதிப்பு 52 ¤TÖš 53 ÛTNÖ Bh•. . வெளியில் நல்ல தரமானதாக வாங்கினால் கூட நாற்பத்தி ஐந்து தான் ஆகிறது.
இதில் இரண்டு லாபம் . ஒன்று எப்படியும் பாதி பேர்கூட வாங்க மாட்டார்கள்.
இரண்டு வெளிமார்கெட்டை விட அதிகம் செலவானதாக சொல்கிறார்கள்.
மூன்றாவதாக ஒன்று உள்ளது. முன்கூட்டியே திட்டமிடாமல் திடீரென கொள்முதல் செய்ததால் மார்கெட்டில் வெல்லம், முந்திரி போன்றவை கடுமையாக விலை உயர்ந்துவிட்டது. முப்பது ரூபாய்க்கு விற்ற வெல்லம் ஐம்பது ரூபாய்க்கு மேல் உயர்ந்து விட்டது ( கொள்முதலிலும் லாபம் ).

படத்தைப் பாருங்கள். அந்த முந்திரி , திராட்சை , ஏலக்காய் போன்றவற்றை ஒரே கவரில் போட்டிருக்கலாம். நாலு கோடி பிளாஸ்டிக் கவர்கள் குப்பைக்குப்
போவதை தவிர்த்திருக்கலாம். அந்த கேரிபேக்கைப் பாருங்கள் . ஒரு கிலோவிற்கு200 கேரிபேக் என வைத்துக்கொண்டாலும் சுமார் ஒரு லட்சம் கிலோ கேரிபேக்குகள் ...! எவ்வளவு பெரிய இயற்கை சீரழிவு .?
அரசே ஒரு பக்கம் ப்ளாஸ்டிக்கை தவிர்க்க சொல்கிறது.மறுபக்கம் ?
இதற்கு பதிலாக துணிப்பை கொடுத்திருக்கலாம் .அதிலும் கலைஞர் படம் பிரிண்ட் செய்ய முடியும் .வறுமையில் வாடும் நெசவாளர்களுக்கு உதவிய
மாதிரியும் இருக்கும் .
என்னத்த சொல்ல..!

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்

மக்களே,

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அலுவலகத்திற்கு செல்லவில்லை. அதுமட்டுமில்லாமல் இணையத்திலும் எதுவும் பதியவில்லை. இன்று உடல்நலம் சற்று தேறியவுடன் என்னுடைய கடமைகளை நிறைவேற்ற வந்தபோது ஒரு போஸ்டரைக்காண நேரிட்டது. அந்த போஸ்டரே இன்றைய இந்த பதிவின் காரணம்.

படத்தை பாருங்கள். ஒரு நடுத்தர வயது முதியவர் பைக் ஓட்டிச்செல்கையில் அவருடைய கவனம் சுவற்றில் இருக்கும் போஸ்டரின் மீதே இருக்கிறது. அதனால் ரைட் கட் எடுக்கவேண்டிய ஒரு சைக்கிள் ஓட்டும் இளைஞன் (அட, இவரு வேறங்க, நம்ம கலைஞரின் இளைஞன் கிடையாது) கடுப்பாகி அவரை திட்ட முயல்கிறான்.


சரி, அப்படி அந்த போஸ்டரில் என்ன விசேடம் என்று பார்த்தால் ஒன்றுமில்லை. சரி என்று மறுபடியும் கண்ணை கசக்கிக் கொண்டு பார்த்தால், அட, ஆமாங்க, மக்களை திரும்பி பார்க்கத்தூண்டும் ஒரு விஷயம் அந்த போஸ்டரில் இருந்தது.

அனுஷ்காவின் அந்த மார்புக் கச்சையின் நீளமானது சற்றே குறைவாக இருப்பதும், அதனால் அவரது வாளிப்பும், வனப்பும் அனைவரின் பார்வைக்கு விருந்தாகவும் இருந்ததை கண்டேன். மனம் நொந்தேன். ஒரு காலத்தில் இது போன்ற போஸ்டர்கள் ஓட்டுவதற்கு என்றே சில இடங்கள் இருந்தன. இப்போதோ, அனைத்து இடங்களிலும் ஓட்டுகிறார்கள்.


சற்று கஷடப்பட்டு பார்ப்பவர்களுக்காக இதோ மற்றுமொரு (அருகாமையில் எடுக்கப்பட்ட) புகைப்படம். இந்த படத்தில் என்ன மறைக்கப்படவேண்டுமோ, அது மறைக்கப்படாமல் ஒளிவு மறைவின்றி அனைவரின் கண்களுக்கும் விருந்தாகி, விபத்துக்களுக்கு வித்திட்டு கொண்டு இருக்கிறது.

இது போன்ற ஆபாச போஸ்டர்களை தடுக்க சென்னை மாநகராட்சி ஒரு சிஸ்டம் கொண்டு வந்ததாக நினைவு. அது மட்டுமின்றி நகரில் ஒட்டப்படும் அனைத்து போஸ்டர்களும் உத்தரவு பெறப்பட்டே (சான்றிதழுடன்) ஓட்டப்பட வேண்டும். சில நேரங்களில் இது போன்ற போஸ்டர்களில் தியேட்டர் பெயர்களை "முக்கியமான" இடத்தில் ஒட்டி விடுவார்கள். அட் லீஸ்ட் அப்படியாவது செய்து இருக்கலாம். இது போன்ற போஸ்டர்களை பார்க்கும்போதுதான் சென்னை மாநகராட்சி என்ன செய்துக்கொண்டு இருக்கிறது என்று கோபம் வருகிறது.



சரி, இந்த போஸ்டர் தான் இப்படி. மற்றபடி பத்திரிக்கைகளில் செய்யப்படும் விளம்பரமாவது சரியாக இருக்கிறதா என்று ஆராய கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளிவந்த தினத்தந்தி பத்திரிக்கையின் ஆன்லைன் பேப்பரை பார்த்தேன். (தமிழில் வரும் பத்திரிக்கைகளில் தினத் தந்தி, தினகரன், தமிழ் முரசு போன்றவை இலவசமாக ஆன்லைன் ஈ பேப்பரை அளிக்கின்றன). என்ன கொடுமை? அங்கேயும் இதே விளம்பரம்தான் வெளியிடப்பட்டு இருக்கிறது.


என்ன செய்வது? சமூக சீர்கேட்டை நோக்கி விரைவுப்பாதையில் சென்றுக்கொண்டிருக்கும் நம்முடைய நாட்டில் சட்டம் ஒழுங்கானது இந்த நிலையில்தானா இருக்கிறது? அது தவிர, சில பல கேள்விகள்:

ஒன்று: சென்னை மேயருக்கு / கமிஷனருக்கு: ஐயா, இது போன்ற விஷயங்களால் எவ்வளவு விபத்துக்கள் நடக்கின்றன என்பது உங்களுக்கு தெரியும். விபத்துக்களை தவிர "வேறு சிலவற்றுக்கும்" இந்த விளம்பரங்கள் வித்திடுகின்றன என்பதும் உங்களுக்கு தெரியும். என்ன செய்ய வேண்டும் என்பதும் உங்களுக்கு தெரியும். இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள் ஐயா?

இரண்டு: பத்திரிக்கைகளுக்கு: சமூக பொறுப்புணர்ச்சி என்று ஒன்று இருப்பதாக சில வேளைகளில் காட்டிக்கொள்வீர்களே, அது இன்னமும் உள்ளதா? இந்த விளம்பரங்களை வெளியிட்ட அந்த சினிமா விளம்பர பகுதி எடிட்டரின் தவறு என்று சொல்லி தப்பித்துக்கொள்ள வேண்டாம். இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள் ஐயா?

மூன்று: சினிமா நிறுவனங்களுக்கு: அடிக்கடி கேட்கப்படும் கேள்விதான். (உங்கள் சகோதரி, சொந்தங்களின் படங்களை இப்படி வெளியிடுவீர்களா?) ஆனால் நான் அதனை கேட்கப்போவதில்லை. இந்த மாதிரி காட்சிகள் படங்களில் வருவது வியாபார நோக்கில் இன்றியமையாததாகி விட்ட சூழலில், அட்லீஸ்ட் போஸ்டர்களிலாவது இவற்றை தவிர்க்கலாமே?

நான்கு: மாதர் சங்கங்களுக்கு: வழக்கமாக பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அவலங்களை கண்டு கொதிக்கும் உங்கள் ரத்தம் மாஸ்கோ பனி போல உறைந்து விட்டதா என்ன? இவற்றை எல்லாம் விட்டு விட்டு, ஏதாவது நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதில் தான் உங்களுக்கு விருப்பம் என்றால், உங்களிடம் கேட்க எனக்கு கேள்வியே இல்லை, மன்னிக்கவும்.

ஐந்து: சமூக நீதிக் காவலர்களுக்கு: சென்ற கேள்வியை அப்படியே ரிபீட் செய்துக்கொள்ளவும். டைப் அடிக்கவோ/ காபி பேஸ்ட் செய்யவோ சோம்பேறித்தனம்.

ஆறு: உயர்திரு ராம நாராயணன் அவர்களுக்கு: ஐயா, நீங்கள் மூன்றாம் முறையாகவும் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு பாராட்டுக்கள். சினிமா துறையை நீங்கள் வாழ வைப்பீர்கள் என்று பலரும் நம்புகிறார்களாம். ஆகையால், இது போன்ற விஷயங்களுக்கு உங்களின் தீர்வு என்ன?

நன்றி ,

வெடிகுண்டு வெங்கட்

http://vedigundu.blogspot.com

சனி, 25 டிசம்பர், 2010

ராசா1.75 லட்சம் கோடி திருடவில்லை..


ராசா1.75 லட்சம் கோடி திருடவில்லை..
ஊடகங்கள் கூறுவதை வைத்து ராசா 1.75 லட்சம் கோடி திருடிவிட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை.
செல்போன்கள் செயற்கைக்கோள் அலைவரிசை மூலமாக இயங்குகின்றன. ஸ்பெக்ட்ரம் பிரச்சனை என்பது குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு அந்த அலைவரிசைகளைப் பயன்படுத்திக் கொள்ள ,அரசுக்கு செல்போன் நிறுவனங்கள் ஏலத்தில் செலுத்திய பணம் பற்றியது.
1.75 லட்சம் கோடி என்பது இந்த அலைவரிசை மூலம் செல்போன் நிறுவனங்கள் சம்பாதிக்கும் வருமானத்தை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் ராசா என்ன செய்தார் என்றால் ,1.75 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளை ஏழாயிரம் கோடிக்கு (சுமார்25 மடங்கு குறைவாக) விற்றுவிட்டார் .
அதற்கு பிரதி பலனாக ரூ. ஐம்பதாயிரம் கோடி மட்டும் லஞ்சமாக வாங்கிக்கொண்டார் . சுப்ரமணிய சாமி சொல்லியவாறு ,சோனியா ,கலைஞர் ,கனிமொழி ஆகியோருக்கு கொடுத்தது போக ,ராசாவுக்குக் கிடைத்தது வெறும் பத்தாயிரம் கோடி மட்டுமே.!

அடுத்தது, இந்த1.75 லட்சம் கோடி பணம் எப்படி வரும் ?
மேற்படி வியாபாரத்தில் அரசுக்கு கட்டியது ரூ. ஏழாயிரம் கோடி மட்டுமே . ஆனால் செல் நிறுவனங்கள் நம்மிடம் வாங்குவது1.75 லட்சம் கோடி.

உலகின் பெரும்பாலான நாடுகளில், உள்நாட்டுக்குள் பேச கட்டணம் கிடையாது. ஆண்டுக்கு ஒரு முறை வாடகையாக ஒரு சிறு தொகை மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

ஆனால் நாம் இந்தியாவில் சுமார்25 மடங்கு அதிகமாக பில் கட்டுகிறோம். உதாரணமாக , ஆயிரம் ரூபாய் பில் கட்டும் ஒருவர் ,நியாயமாக40 ரூபாய் மட்டுமே கட்ட வேண்டும் .

சமீபத்திய கணக்கின் படி இந்தியாவில் சுமார்65 கோடி செல் இணைப்புகள் உள்ளன. பிச்சைக்காரர்களையும் சேர்த்து.
அதாவது பிச்சைக்காரர்களிடமே பிடுங்கி திங்கும் அளவுக்கு நம் அரசியல்வாதிகள் இறங்கிவிட்டதை நினைக்கும் போது.....

புதன், 22 டிசம்பர், 2010

ஈசன் - விமர்சனம்

ஈசன் - விமர்சனம்

மீண்டும் ஒரு நல்ல சினிமாவை தந்திருக்கிறார் சசிக்குமார். கதை தான் ஹீரோ, கதைக்காக மட்டுமே கதாபாத்திரங்கள் என்பதை வைத்தே எடுக்கப்பட்ட படம். நகரத்தின் வாழ்கையை இதுவரை சொல்லாத கோணத்தில் சொல்லியிருக்கிறார். சுப்ரமணியபுரத்தில் இருந்து மாறுபட்ட களமாக இருந்தாலும் அதே கோபம் இந்தக் கதையிலும் இருக்கிறது.

செழியன் (வைபவ்) அமைச்சர் தெய்வநாயகத்தின் (ஏ.எல்.அழகப்பன்) மகன். தன் அரசியல் செல்வாக்குகள் அத்தனையும் தன்னிடம் தக்கவைத்துக் கொள்ள அமைச்சரின் அடுத்த நம்பிக்கையாக இருப்பது அவரின் மகன் செழியன் தான். அமைச்சர் மகன் என்பதால் இவர் நண்பர் கூட்டம் போடாத ஆட்டம் இல்லை. நகரத்தின் இரவு வாழ்கையை ஏகத்துக்கும் நேசிப்பவர்கள்.


குடியும் கூத்தும்தான் இவர்கள் வாழ்க்கை. இதை தட்டிக் கேட்கிற போலிஸ் அதிகாரியாக சங்கைய்யா (சமுத்திரக்கனி). தட்டிக் கேட்டாலும் என்ன பிரயோஜனம். அமைச்சர் மகனாச்சே. கரை வேட்டிகளிடம் போராடி தோற்றுப் போகும் ஒரு காக்கிச் சட்டைக்காரன். இந்தக் குடிகாரப் பைய செழியனுக்கும் இன்னொரு குடிகார பொண்ணுக்கும் காதல் வருகிறது. ( நல்ல வேளை டூயட் எதுவும் இல்லை )

அட ச்சே... இது என்னடா கதை! சசிக்குமார் ஏமாத்திட்டாரே... டைட்டிலுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்!! கொடுமைடா சாமி. படத்தை யாரோ டைரக்‌ஷன் பண்ண, பெயரை சசிக்குமார்ன்னு மாத்தி போட்டுட்டாங்க போல இருக்கு என்று ரசிகர்கள் நினைக்ககூடும். இப்படி நினைத்துக் கொண்டிருக்கிற வேளையில் செழியனை யாரோ தலை மேல் நச்சுன்னு அடிக்க... (நம்ப தலையிலையும் தான்) யாருடா நீ என்று செழியன் கேட்தும் 'ஈசன்' என திரையில் டைட்டில் விழுகிறது! இப்போ தான் இடைவேளை...

இதற்கு பிறகு தான் கதையே. வாய்பேச முடியாத அபினயா. ஈசனூர் கிராமத்தில் இருந்து சென்னை வந்து ஃபேஷன் டெக்னாலகி படிக்கிறார். இவருக்கு நடந்த கொடுமை. அந்தக் கொடுமைக்கு காரணமாய் இருந்தவர்கள் அதைவிடக் கொடுமையாய் பழித்தீர்க்கப் படுகிறார்கள். இந்தப் பிளானை ஸ்கெச் போட்டு நடத்துகிறவர் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் அபினயாவின் தம்பி ஈசன்.


முதல் பாதி டோட்டல் போர். 'சுகவாசி' பாடலை கட் பண்ணியிருக்கலாம். ஆனால் இரண்டாவது பாதியில் சொல்ல வந்த விஷயத்தை போல்டா சொல்லியிருக்கிறார் சசிக்குமார். இவர்தான் ஹீரோ, இவர்தான் ஹீரோயின் என்ற விதியை உடைத்து கதைக்காக படம் எடுத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது.

படத்தில் பாராட்டப் பட வேண்டிய முதல் கேரக்டர் சமுத்திரக்கனி. வேட்டையாடு விளையாடு - கமல், சிங்கம் - சூர்யா, சாமி - விக்ரம் இந்த ஹீரோயிசங்களை ஓரம் தள்ளி விட்டு, இயல்பான நடிப்பில் அசத்தி இருக்கிறார். போலிஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமான பொருத்தம். ஈசனாக நடித்திருக்கும் துஷ்யந்துக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. மிரட்டல் நடிப்பு. அபிநயா இதயத்தை நெகிழவைக்கிறார்.

ஏ.எல்.அழகப்பனை இன்னும் கொஞ்சம் நடிக்க வைத்திருக்கலாம். இருந்தாலும் அரசியல்வாதிக்கு ஏற்ற தோற்றம். இவருக்கு அசிஸ்டெண்டாக நமோ நாராயணன் (நாடோடிகள் படத்தில் பில்டப்புக்காக பேனர் வைத்துக் கொள்வாரே, அவரே தான்) 'விரலை விடு வாந்தி வரும்' - சீரியஸ் டைமிலும் ஜாலி காமெடி.

ஜேம்ஸ் வசந்தன் கதைக்கு தேவையான இசையை கொடுத்திருக்கிறார். 'ஜில்லா விட்டு' சுண்டக் கஞ்சி பாடலுக்கு க்ளாப்ஸ். க்ளைமாக்ஸ் காட்சிக்கும் பின்னணி இசையின் பங்களிப்பு சூப்பர். தெளிவான காட்சிகளுக்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் கதிர். அலட்டல்கள் இல்லாமல் எது தேவையோ அதை கொடுத்திருக்கிறார்.

செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளி மாணவர்களை பார்க்கும் போது, சின்ன வயசுலேயே கொலை செய்தவர்கள் என்கிற நெகடிவ் பார்வைதான் வரும். ஆனால் அவர்கள் கடத்து வந்த நியாயமான வாழ்க்கையையும் உண்மையையும் கண்டுபிடித்து படமாக்கிய சசிக்குமாருக்கு ஒரு சல்யூட்!

ஈசன் - மீண்டும் ஒரு நியாயமான கோபம்!


நன்றி,
நக்கீரன்.COM


வெள்ளி, 17 டிசம்பர், 2010

தமிழ் அகராதி

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் பெரு முயற்ச்சி செய்து இணைய தமிழ் அகராதியை வெளியிட்டுள்ளது.
சுமார் இரண்டு லட்சம் வேர் சொற்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அகராதி தமிழுக்கு செய்யப்பட்டுள்ள அழகிய மகுடம் ஆகும் .



Agaraadhi/அகராதி

வியாழன், 9 டிசம்பர், 2010

தபூ சங்கர் கவிதைகள்


தபூ சங்கர் கவிதைகள்:
தபூ சங்கரின் சுய அறிமுகம்

ன் கவிதைகளில் இருக்கிற அளவுக்கு சுவாரசியம் என் காதலில் இருக்குமா என்பது தெரியவில்லை.

ஊரில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்வரை காதலுக்கும் எனக்கும் இருந்த ஒரே சம்பந்தம்... எட்டாம் வகுப்புப் படிக்கும்போது ஒரு காதல் கடிதம் எழுதிக்கொடுத்ததுதான்.

என் கையெழுத்து கொஞ்சம் நன்றாக இருக்கும் என்பதால்... பலமுறை பெயிலாகிப் பெயிலாகி என்னுடன் படித்த பெரியண்ணன் ஒருவன் என்னை எழுதித் தரச் சொன்னதால், அவன் சொல்லச் சொல்ல எழுதித் தந்திருக்கிறேன். அவ்வளவுதான்.

ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து, நான் பட்டப் படிப்புக்காக காந்திகிராமம் சென்றபோது... அங்கே காதல் தன் முழுப் பரிவாரங்களோடு காத்திருந்தது, என்னை ஆட்கொள்ள.

அவள் அழகி இல்லை; பேரழகியும் இல்லை; அதற்கும் மேல். ஒருத்தியை ஒருவன் காதலிக்கலாம்; அல்லது இருவர் காதலிக்கலாம். ஆனால் ஒரு கல்லூரியே காதலிக்குமா? காதலித்தது அவளை. ஆனால் அவளோ எல்லோரையும் தூசி மாதிரி பார்த்தாள்.

இத்தனைக்கும்... நான் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த போது அவள் படித்துக்கொண்டிருந்ததோ, பக்கத்திலிருக்கும் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு. அவள் அம்மா எங்கள் கல்லூரியில் பணியில் இருந்ததால் அவள் வீடு கல்லூரிக்குள் இருந்தது.

மாலை நேரங்களில் எங்கள் கல்லூரி மைதானத்தில் தான் தன் தோழிகளோடு அவள் கைப்பந்து விளையாடுவாள். அப்போதெல்லாம் எந்தப் பையனாவது அவளிடம் பேச முயற்சித்தால் திட்டி அனுப்பி விடுவாள்.
ஆனாலும் அவளிடம் பேசுகிற பாக்கியத்தை ஒருவன் பெற்றிருந்தான். அவன் பெண்களின் ஊழியன். எந்தப் பெண் எது சொன்னாலும் உடனே கடைக்குப் போய் வாங்கி வருபவன்.

அவன் அவளிடம் பேச ஆரம்பித்ததை நினைத்து யாருமே வருத்தப்படவில்லை. மாறாக மகிழ்ச்சியே அடைந்தனர். அவன்மூலம் அவளிடம் தங்கள் காதலைத் தெரியப் படுத்திவிடலாம் என்று நினைத்து.
அவள் விளையாடிவிட்டுப் போனதும், அவனை அழைத்து நடுவே உட்காரவைத்து `எங்களில் யார் பேராவது அவளுக்குத் தெரியுமா?' என்று கேட்பார்கள்.

`எனக்குத் தெரியாது' என்பான் அவன்.
`நீ கேட்க வேண்டியதுதானே?' என்பார்கள்.
`எப்படிக் கேக்கறது' என்பான்.
`சரி... நீ சொல்ல வேண்டியதுதானே?' என்பார்கள்.
`எப்படிச் சொல்றது?' என்பான்.

எல்லோரும் மௌனமாகிவிடுவார்கள். நானும் அந்தக் கூட்டத்தில்தான் இருப்பேன் என்றாலும், என்னை இந்த விஷயத்தில் என் நண்பர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஏனென்றால் நான் அவளைப் பற்றி ஒரு வார்த்தைகூட ஒருபோதும் பேசுவதில்லை. எனக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லை என்பதுபோல் இருப்பேன். ஆனாலும் அந்தக் கூட்டத்தில் இருப்பேன்... மௌனமாய் அவளைப் பார்த்தபடி...

கல்லூரிக்குள் இருக்கும் மளிகைக்கடையில் நான் ஏதாவது வாங்க நிற்கும்போது அவள் வந்தால், நான் ஒதுங்கிக் கொள்வேன். மற்ற நண்பர்களோ பக்கத்திலேயே நின்று வழிந்துகொண்டிருப்பார்கள்.

அவள் ஓர் அழகான சிவப்புச் சைக்கிள் வைத்திருந்தாள். கடைத் தெருவுக்குப் போவதற்காக விடுதிப் பெண்கள் கேட்டால் மட்டும் அதைத் தருவாள். அதற்கு வசதியாக அவள் விளையாடும் போது சாவியை ஊழியன் கையில் கொடுத்து விடுவாள். அவனிடமிருந்து பெண்கள் வாங்கிப் போய், திரும்ப வந்து கொடுப்பார்கள்.

அப்படித்தான் அன்றும் யாரோ ஒருத்தி அவனிடம் சாவி வாங்கிக் கொண்டு எங்கோ போய்த் திரும்பி வருகையில் அவன் இல்லாததால், அந்தப் பெண் சாவியை யாரிடமோ கொடுத்துவிட்டாள். அது அவள் கைக்குப் போய்ச் சேராததால், சாவி தொலைந்துவிட்டதாக எண்ணித் தேடிக் கொண்டிருந்தாள்.
இது தெரிந்து எங்கள் கூட்டம் அந்த மைதானத்தையே சலிக்க ஆரம்பித்துவிட்டது. சாவியைக் கண்டுபிடித்து அவள் இதயத்தில் இடம் பிடித்து விடலாம் என்கிற ஆசையில்... எங்கோ போயிருந்த ஊழியன் திரும்பி வந்து தேட ஆரம்பித்து... சாவியைக் கண்டுபிடித்தான். இந்தக் களேபரங்கள் எல்லாவற்றையும் மைதானத்தின் ஒரு மூலையில் அமர்ந்தபடி நான் மௌனமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் என் மௌனமெல்லாம் தொலையப் போகிறது என்பது தெரியாமல்.
எல்லாம் முடிந்தபிறகு, ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தபடி என்னருகில் வந்த பெண்களின் ஊழியன், `டேய் ஒரு விஷயம் தெரியுமா... சாவியைத் தேடும்போது... சங்கர்கிட்ட இருக்கான்னு கேளுன்னு அவள் சொன்னாடா' என்றான்.

அவ்வளவுதான்... என் இதயத்தில் காதல் வெடித்துப் பூத்துவிட்டது. என் பெயர் அவளுக்குத் தெரியுமா? சாவி என்னிடம் இருக்கும் என்று அவள் நினைத்திருக்கிறாள் என்றால், நான் அதை வைத்துக் கொள்ள ஆசைப்பட்டி ருக்கிறேன் என்று அவள் நினைத்திருக்கிறாளா என்று எனக்குள் எண்ணற்ற கேள்விகள் முட்டி மோதும்போது ``டேய் அவளுக்கு உன்னைத் தெரிஞ்சிருக்குடா'' என்றான் அவன். எப்படிடா என்று கேட்கத் துடித்தேன் நான். ஆனால் கேட்காமல் நின்றேன். அதுதான் நான்.

நெஞ்சில் தீப்பற்றிக்கொண்டது. உடலெங்கும் பரவசம் பரவியது. இரவு வந்தது தெரியாமல் அந்த மைதானத்திலேயே அமர்ந்திருந்தேன். கடைசியில் காதல் என்னையும் ஆசிர்வதித்துவிட்டது. ரசனைகள் பூத்தன. கவிதைகள் பிறந்தன.
ஆனால்... கடைசிவரை அவளிடம் என் காதலைச் சொல்லவே இல்லை. இதற்குமுன் காதலைச் சொல்லப்போன என் நண்பர்களிடம் அவள் நடந்து கொண்டதைப் போலவே என்னிடமும் நடந்துகொள்வாளோ என்கிற தயக்கம். அதிலேயே ஓடிவிட்டன மூன்று வருடங்கள். அவளை விட்டுவிட்டு வந்துவிட்டேன்.

ஆனால்... ஆனால்... அவளால் எனக்குள் பதியமிடப்பட்ட காதல் என்னை விடவில்லை. பதினாறு வருடங்கள் ஆனபிறகும். தினம் ஒரு கவிதையை... தினம் ஒரு காட்சியை... கனவாக... கற்பனையாக எனக்குள் பூக்கவைத்துக் கொண்டே இருக்கிறது காதல்.

அன்று என் இதயத்தில் நுழைந்தவளை... இன்று என் இதயமாகவே மாற்றிவிட்டது காதல்.

என்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றிலும் அவளைப் பார்க்கக் கற்றுக்கொடுத்து விட்டது காதல். எங்கோ இருப்பவளை எங்கும் இருப்பவளாக ஆக்கித் தந்திருக்கும் காதல்... கடைசியில் என்னையே கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாகவே மாற்றிக் கொண்டிருக்கிறது.

காதல்தான் என் குணம்.
காதல்தான் என் மதம்.
காதல்தான் என் புகழ்.

ஆம்...
என் எல்லாப் புகழும்
காதலுக்கே!

http://www.thabusankar.blogspot.com/

வெள்ளி, 12 நவம்பர், 2010

மைனா மைனா ....










மைனா ...
தமிழில் வருடத்திற்கு ஒரு நல்ல படம் வரும். அந்த வரிசையில் இந்த ஆண்டு மைனா. மைனா பற்றி ஆனந்த விகடன் திரைவிமர்சனம் படிக்கவும் .

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

மரங்கொத்திப் பறவை

ஒரு சிறிய மரங்கொத்திப் பறவை , பாம்பை தைரியமாக எதிர்த்து சண்டை போடும் ஆச்சர்யமான வீடியோ காட்சி. பார்த்து விட்டு சொல்லுங்கள் அதன் வீரத்தைப் பற்றி.....

திங்கள், 19 ஜூலை, 2010

பசுமைக் கரங்கள்


தெரியுமா உங்களுக்கு ...

நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்நாளில் சுமார் இருபத்தி ஐந்து மரங்களை அழிக்கிறோம். பென்சில்,பேப்பர், டேபிள்,சேர்,நாற்காலி,கதவு,ஜன்னல்,விறகு,தீக்குச்சி, என கட்டில் முதல் கடைசி வரை நாம் மரங்களை அழிக்கிறோம். ஆனால் நாம் அழித்த அளவிற்கு வளர்த்தோமா ? நம்மில் பலபேர் ஒரு மரம் கூட நட்டிருக்க மாட்டோம் . இடம் இல்லை , பணம் இல்லை, நேரம் இல்லை என பல காரணங்கள் ...

ஆனாலும் இப்படியே போனால் அடுத்த தலைமுறைக்கு புல் கூட இருக்காது. உங்களுக்காகவே ஈஷா பசுமைக்கரங்கள் என்ற அமைப்பை நிறுவி தமிழகத்தில் பதினோரு கோடி மரங்களை நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயித்து , இதுவரை நான்கு கோடி மரங்களை நட்டுப் பராமரித்து வருகிறது. உங்களுக்கு மரம் நடவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும்.பணம்,இடம்,உழைப்பு என ஏதாவது ஒரு விதத்தில் நமக்காக வெட்டிய மரங்களை நாம் மீண்டும் உருவாக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் இந்த முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அருகில் உள்ள ஈஷா மையத்தை அணுகுங்கள் .

Project GreenHands
c/o Isha Outreach

23/7U Raja Nagar 2nd Street

Sowripalayam

Coimbatore 641 028,

India

Tel: +91-422-2580155

Email:
info@projectgreenhands.org

Mailing Address

Project GreenHands

c/o Isha Foundation

15, Govindasamy Naidu Layout,

Singanallur

Coimbatore - 641 005, India

இணையதள முகவரி


ஞாயிறு, 18 ஜூலை, 2010

சிறந்த தமிழ் நூல்களை பதிவிறக்கம் செய்ய

சிறந்த தமிழ் நூல்களை பதிவிறக்கம் செய்ய இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள் . தமிழின் மிகச் சிறந்த நூல்களை இ-புக்குகளாக வெளியிட்டது இருக்கிறார்கள் .
Project மதுரை என்ற பெயரில் ஐநூறுக்கும் மேலான தமிழ் நூல்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்கள். சங்க இலக்கியங்கள் ,பாரதியார் பாடல்கள்,கல்கியின் நூல்கள், அரிய இலக்கியங்கள் , வெளியே கிடைக்காத அரிய நூல்களை தொகுத்துள்ளனர்.
இதை யார் வேண்டுமானாலும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம் .
டவுன்லோட் செய்யுங்கள்...
படியுங்கள் ....
தமிழெங்கள் உயிருக்கு மேல் ..!


http://projectmadurai.org/pmworks.html

மேலும் பின்வரும் இணைய தளத்திலும் தமிழ் நூல்களை டவுன்லோட் செய்யலாம் .
http://www.tamilcube.com/res/tamil_ebooks.html