சனி, 27 டிசம்பர், 2014

மோகன் சினிமா விருதுகள்- 2014

மோகன் சினிமா விருதுகள்- 2014

[வெற்றிகரமான 5 ஆம் ஆண்டு ]



 என்னுடைய விருப்பம் , ரசனை அடிப்படையில் இந்த ஆண்டிற்கான சிறந்த சினிமா படைப்பாளிகள்... உங்களுக்கு பிடித்தமானவற்றையும் கமெண்டில் தெரிவியுங்கள் .




சிறந்த படம் – குக்கூ (ராஜு முருகன் )

சதுரங்க வேட்டை ( வினோத் )

ராமானுஜன் (ஞான ராஜசேகரன் )

இயக்குனர் ராஜு முருகன் - குக்கூ
கதை SSஅருண்குமார் (பண்ணையாரும் பத்மினியும் )
திரைகதை ரா.பார்த்திபன் – க.தி.வ.இயக்கம்
வசனம் வினோத் – சதுரங்க வேட்டை

ஒளிப்பதிவு  ரவி ராய் (பிசாசு ) வெற்றிவேல் மகேந்திரன் ( கயல் ) சதீஷ்குமார் ( மீகாமன்)

படத்தொகுப்பு – ராஜா சேதுபதி (சதுரங்க வேட்டை) , விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா )

பின்னணி இசை - சந்தோஷ் நாராயணன் (குக்கூ ), அரோல் கொரேலி (பிசாசு)

பாடலாசிரியர் யுகபாரதி ( கூடமேலே கூடவச்சு , ரம்மி )

ஹிட் பாடல் - செல்பி புள்ள - கத்தி

பாடகர் விவி.பிரசன்னா ( கூடமேல கூட வச்சு , ரம்மி ) 

அந்தோணி தாசன் ( கல்யாணமாம் கல்யாணம் , குக்கூ ) 

பாடகி  ஷாஷா திருப்பதி – ஹே மிஸ்டர் மைனர் – காவியத் தலைவன் 

நடனம் தினேஷ் (மான் கராத்தே ) 
கலை சந்தானம் ( காவியத் தலைவன் )

ஒப்பனை பட்டணம் ரஷீத் (காவியத் தலைவன் )

சண்டை பயிற்சி – அனல் அரசு (மீகாமன் )

நடிகர் தினேஷ் (குக்கூ ) , ப்ரித்விராஜ் ( காவியத் தலைவன் )

நடிகை மாளவிகா (குக்கூ )

ஆனந்தி (கயல் ) துணை நடிகர் – ஜெயபிரகாஷ் (பண்ணையாரும் பத்மினியும் ) துணை நடிகை – துளசி (பண்ணையாரும் பத்மினியும் ) நகைச்சுவை – சந்தானம் ( இது கதிர்வேலன் காதல் , அரண்மனை )

ராம்தாஸ்  (முன்டாசுப்பட்டி )
வில்லன் பாபி ஜிண்டால் (ஜிகர்தண்டா )
குழந்தை நட்சத்திரம் – கிஷோர் ,ஸ்ரீராம்,பாண்டி,முருகேஷ் (கோலிசோடா)

சிறந்த பொழுதுபோக்கு படம் – மான் கராத்தே (திருக்குமரன் )
சிறந்த தயாரிப்பு – மனோபாலா – சதுரங்க வேட்டை 

 குறிப்பு - 1
-------------
அதிகம் எதிர்பார்க்க வைத்து அட்டர் பிளாப் ஆன படத்திற்கு சமீப கால உதாரணம் ''சுறா '' . எனவே ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மொக்கை படத்திற்கு சுறா பெயரில் விருது வழங்கப் படும் .


சிறந்த மொக்கைக்கான
                 ''சுறா விருது ''  - அஞ்சான் (லிங்குசாமி )

குறிப்பு - 2
--------------
விவசாயிகளின் பிரச்சனையை சொன்னதற்காக கத்தி (முருகதாஸ் ) , லிங்கா (பொன்.குமரன் ) இரண்டு கதைகளும் சிறந்த கதைகள் தான். ஆனால் துரதிஷ்ட வசமாக இரண்டு கதைகளுமே அவர்களுடையது அல்ல என நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது.

சனி, 13 டிசம்பர், 2014

சேலம் திரையரங்குகள் ஒரு பார்வை

சேலம் திரையரங்குகள் ( 1995-2014) ஒரு பார்வை ..

1980-1990 களில் தென்னிந்தியாவில் அதிக திரை அரங்குகள் இருந்த நகராக சேலம் விளங்கியது. வேறு பொழுதுபோக்கு , சுற்றுலா தளங்கள் இல்லாததும் காரணம். ஆனால் காலபோக்கில் அது நலிவடைந்தது. புகழ் பெற்ற சென்ட்ரல், நியூ சினிமா, இம்பீரியல் , விக்டோரியா போன்ற அரங்குகள் 90 க்கு முன்பே மூடப்பட்டன .

மூடப்பட்ட திரையரங்குகள் ( 1995-2014)

ஓரியண்டல், சாந்தி, சித்ரா, சங்கம், கல்பனா, ரோகிணி, மிட்லண்ட், ராம், மல்லமூப்பம்பட்டி R.ஜெயா , சங்கர் , பாலாமணி ,செவ்வாய்பேட்டை சண்முகா , பிரபாத் , கன்னங்குறிச்சி ஆனந்த் , பிரியரத்னா , பேலஸ் , தேவி சாரதாஸ் , சாந்தம் ,சப்னா , சந்தோஷ் , உமா , பழனியப்பா ,அப்சரா , அபிராமி , ஸ்ரீமான் , சித்தேஸ்வரா , பாரத் , நாகா (மினி )

வேறு நிர்வாகத்திற்கு மாறியவை

சங்கம் பாரடைஸ் – ராஜேஸ்வரி
சபரி – ராஜசபரி
ஜோதி – சரஸ்வதி
VPS - கேஎஸ்

ரிலையன்ஸ் அட்லேப்ஸ் வசம் மாறியவை

கீர்த்தனா , ரமணா , கைலாஷ் , பிரகாஷ் , கேஎஸ்

புதியதாக கட்டப்பட்டவை

சுப்ரகீத் , ரமணா , மல்டிபிளக்ஸ் ( 5 தியேட்டர்கள் )

புதுப்பிப்பு :

10 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட 3 தியேட்டர் (சாந்தம் ,சப்னா , சந்தோஷ்) ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தால் தற்போது புதுப்பிக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது.

இறுதியாக...

கால ஓட்டத்தில் திரை அரங்குகள் மூடப்பட்டாலும் ... அவை மூடி பல ஆண்டுகள் கழித்தும் அந்த பகுதி அந்த சினிமா தியேட்டரின் பெயராலேயே இன்னமும் அழைக்கப்பட்டு வருகிறது . அதுவே சினிமாவின் வெற்றி...

தொகுப்பு : மோகன் சேலம்

ஞாயிறு, 16 நவம்பர், 2014

அன்பு முத்தம்

 அன்பு முத்தம்


சென்னை ஐஐடி வளாகம்....

சென்னைவாசிகளுக்கே தெரியாது சென்னையில் இவ்வளவு அழகான, ரம்மியமான ஒரு இடம் இருக்கும் என்று.. தலையெல்லாம் மூளைன்னு சொல்லுவாங்களே அந்த அளவுக்கு படிப்பாளியா இருந்தா தான் இங்கு இடம் கிடைக்கும். நண்பர் ஒருவரை பார்க்க சென்றிருந்தேன். அருமையான சூழலை ரசித்தவாறே மெல்ல நடந்தேன் . கேண்டீன் அருகே காத்திருக்க சொன்னார் .
கேண்டீன் அருகே உள்ள புல்வெளியில் மாணவ மாணவிகள் குவிந்திருந்தனர். அதில் ஒருவர் பேசினார் .

''டியர் பிரெண்ட்ஸ் .. இன்றைய நவீன உலகில் நம் விருப்பபடி வாழ நமக்கு உரிமை உண்டு. கலாசாரம் என்ற பெயரில் சிலர் இதை எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு நம் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்த அன்பு முத்தம் நிகழ்ச்சி . நீங்கள் உங்கள் நண்பர் அல்லது காதலரை கட்டிபிடித்து முத்தமிடுங்கள் '' என்றார். எல்லோரும் ஹே .. என கத்தினார்கள். ஒருவரை ஒருவர் கட்டி கொண்டு முத்தமிட்டனர். நான் மெல்ல எழுந்து அருகே சென்றேன்.
ஒரு மாணவியிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன்.
''எல்லோரும் சந்தோசமா இருக்கீங்க , சரிதான் ... இருந்தாலும் இது தப்பில்லையா ''
இதிலென்ன தப்பு அங்கிள் ..?
நான் அங்கிள் லாம் இல்லமா ...!
ஹஹா.. நீங்க அங்கிள் தான் . அதனால தான் உங்களுக்கு இது புரியல..!
அப்படி இல்லமா...
அப்புறம் என்ன ... இங்க வாங்க ..
அய்யோ.... வேண்டாம்மா.... விடும்மா ..

என் பேச்சை அந்த பெண் கேட்கவே இல்லை. சிரித்து கொண்டே என்னை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
.
.
.
.
.ஏங்க .. தூங்கிக்கிட்டே ஏங்க சிரிக்கிறீங்க.. எந்திரீங்க .. மணி 7 ஆகுது ... போய் சிக்கன் வாங்கிட்டு வாங்க.. !

அடடா.. என்ன ஒரு அருமையான கனவு....!