செவ்வாய், 12 ஜூலை, 2016

குமட்டிக் காய்

30 நாள் 30 மருத்துவம் - நாள் 1


குமட்டிக் காய் 


தலையில் புழுவெட்டு உள்ளவர்கள் , பல மருந்து தேய்த்தும் எந்தவித பலனும் இல்லாதவர்கள் இதை செய்யுங்கள். கண்டிப்பாக பலன்கிடைக்கும். கிராமங்களிலும் , ரயில்வே ஓரங்கள், சாலை ஓரங்களில் வளர்ந்து கிடைக்கும் இந்த காய் எலுமிச்சை அளவில் தர்பூசணி பழத்தைப் போல் இருக்கும்.
பூச்சி வெட்டு பாதிக்கப்பட்ட இடங்களில் அந்த குமட்டி காய்க்குள் இருக்கும் உள் நீரை இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர்ந்து தொட்டு வைத்தால் , புழுவெட்டு மறைந்து முடி வளரும்.


முடி உதிர்தல், பொடுகு, தலையில் அரிப்பு, புழுவெட்டு உள்ளிட்ட தலை முடி பிரச்னைக்கு, வழுக்கு குமிட்டி காய் பூரண குணமளிக்கும். இதன் விதையை, அருகம்புல்லுடன் சேர்த்து அரைத்து, அம்மை நோயால் ஏற்படும் கொப்புளங்களில் வைத்தால், விரைவில் கொப்புளங்கள் குணமாகும். வழுக்கு குமட்டி காயின் இலையை அரைத்து வீக்கம், வலி உள்ள இடங்களில் வைத்து, மசாஜ் செய்தால், தீராத வலியும் குணமாகும்.

குறிப்பு :
இது விஷத்தன்மை கொண்டது குழந்தைகள் கையில் கொடுக்க வேண்டாம்.காயை பயன்படுத்திய பிறகு கையை நன்கு கழுவி விடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக