திங்கள், 28 நவம்பர், 2011

மீண்டும் வெள்ளையர்க்கு அடிமை ஆவோம்

சில்லரை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் கூறியுள்ளார். இதற்காக நாம் முழுமையாக சந்தோசப் பட முடியாது. தமிழ்நாடு , மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அவர்களால் நேரடியாக கடை விரிக்க முடியாதே தவிர , மறைமுகமாக அவர்கள் நம்மை சுரண்டப் போகிறார்கள்.


எப்படி என்று சொல்கிறேன்....


பச்சை கடலை என்ற சிகப்பு மூகடலை உங்களுக்கு தெரியும் . அதிலிருந்து கடலைப்பருப்பு,கடலைமாவு,பொட்டுக்கடலை போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு நாட்டில் உற்பத்தி ஆகும் ஒட்டுமொத்த பச்சைக் கடலையை ( சில கோடி மூட்டைகள் ) ரிலையன்ஸ், ருச்சி சோயா, கார்த்திக் சிதம்பரத்தின் பினாமி நிறுவனம் உட்பட வெறும் நான்கு நிறுவனங்கள் வாங்கின. இதனால் வெளிமார்க்கெட்டில் இந்தப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டது. சுமார் இரண்டு மடங்கு விலை ஏறிய பிறகு தீபாவளிக்கு சில நாட்களுக்கு பிறகு அவை வெளி மார்கெட்டில் விடப்பட்டன.



அதாவது இந்த விலை உயர்வால் விவசாயி, வணிகர்கள் , மக்கள் யாருக்கும் பயன் இல்லை.


இப்போது காங்கிரஸ் அரசு அனுமதிக்க போகும் அந்நிய நிறுவனங்கள் இதேபோல்தான் செயல்பட போகின்றன. நாட்டின் ஒட்டு மொத்த விவசாய பொருட்களையும் இந்த ஒரு சில நிறுவனங்கள் வாங்கிவிடும். அதன் பிறகு அவர்கள் சொல்லுவது தான் விலை.



நூறு கோடி மக்களின் பணம் ,ஐந்து கோடி சிறு வணிகர்களின் உழைப்பை வெறும் பத்து ,இருவது அன்னிய நிறுவனங்கள் சுரண்டப் போகின்றன. இவர்களை அனுமதித்த இங்கிலாந்து,தாய்லாந்து போன்ற நாடுகளில் சிறு வணிகர்கள் தெருவுக்கு வந்து விட்டனர்.




எனவே இவர்களை அனுமத்தித்தால் பாதிக்கப்பட போவது வணிகர்கள் மட்டுமல்ல. ஒவ்வொரு இந்தியனும் இவர்கள் சொல்லும் விலைக்குதான் பொருட்களை வாங்கியாக வேண்டும் . இதனால் ஆதாயம் அடைய போவது ஒரு சில காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே.


வெளிநாட்டு பொருளை வாங்கறது வேற .. வெளிநாட்டுக்காரன் கிட்ட எல்லாத்தையும் கொடுத்துத்துட்டு ,அவன்கிட்டே அவன் சொல்ற விலைக்கு வாங்கறது வேற... காந்தி காலத்துல உப்பு சத்யாகிரகம் ன்னு ஒன்னு நடத்துனாரு தெரியுமா. வெள்ளகாரன்களை தவிர யாரும் உப்பு தயாரிக்க கூடாது , உப்பை அவன்களிடம்தான் வரி செலுத்தி வாங்கவேண்டும் என சட்டம் கொண்டுவந்தனர். அதை எதிர்த்துதான் காந்தி போராடி வெற்றி பெற்றார். காந்தி எதை எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றுத் தந்ததாரோ , கிட்டத்தட்ட அதே வடிவத்தை இன்றைய நவீன காங்கிரஸ் தலைவர்கள் கொண்டுவரத் துடிக்கிறார்கள்.