செவ்வாய், 20 டிசம்பர், 2011

உடையும் நிலையில் கேரள அணை - வீடியோ

முல்லை பெரியார் அணை நாளையே உடையபோவது போலவும், லட்சக்கணக்கான மக்கள் சாவபோவது போலவும் கேரளா அரசியல்வாதிகள் சரடு விட்டுக் கொண்டிருக்கும் வேலையில் ஒரு புதிய தகவல் வந்திருக்கிறது.


கேரளாவில் உள்ள அணைகளிலேயே முல்லை பெரியார் தான் மிகவும் பலமாக உள்ளதாகவும், என்றைக்கோ இடித்திருக்க வேண்டிய அணைகள் இன்னமும் உபயோகத்தில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.


ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றில் வெளியான வீடியோ பதிவு ஒன்று கிடைத்துள்ளது. கேரளாவில் நெய்யாற்றில் 1950 இல் கட்டப்பட்ட அணை ஒன்று 200 அடிக்குமேல் பெரிய விரிசல் விழுந்துள்ளது. ஆனால் அந்த அணையை இடிக்காமல் இன்னமும் பயன்படுத்தி வருகிறார்கள்.


ஒருவேளை முல்லை பெரியார் உடைந்தால், அந்த நீர் இடுக்கி அணை செல்லும் வழியில் வெறும் 450 குடும்பங்கள் மட்டுமே உள்ளன(கேரள அரசியல்வாதிகள் விடுவது டுபாக்கூர் என நிரூபணம் ஆகி உள்ளது ) ஆனால் உண்மைலேயே நிறைய மக்களுக்கு ஆபத்தான பாடாவதியான அணையை பற்றி அவர்கள் யாருமே கவலைப்படவில்லை. ஏனெனில் அதை வைத்து அரசியல் செய்ய முடியாது.


நீங்களே இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.


எண்ணமும் கருத்தும் , மோகன் .


புதன், 14 டிசம்பர், 2011

பெண்ணும் பொன்னும்

பெண்ணும் பொன்னும்



முத்துக்களோ கண்கள் என்றான்

தித்திப்பதோ கன்னம் என்றான்

பல்வரிசை பவளம் என்றான்

ஒற்றை நரை வெள்ளி என்றான்

அங்கமெல்லாம் தங்கமென்றான்

தீட்டாத வைரமென்றான்

திகட்டாத அமுதமேன்றான்

மேலுதட்டின் மச்சம் பார்த்து

அதிஷ்ட தேவதை கொட்டும் என்றான்

என் சின்னச் சிரிப்பில் விழும்

கன்னக்குழி கூட

பணக்குழியாம் - அவன் சொன்னான் .

சொன்னதற்க்கே சொக்கிப்போய்

அவன் குழியில் நான் விழுந்தேன் .

மனசெல்லாம் சிறகடிக்க

மணமேடையில் நான் இருக்க ...

முப்பது பவுன் போட்டால்தான்

முதல் முடிச்சே நான் இடுவேன்

இல்லையேல்

இந்த மூதேவி முகத்தினைப் போய்

எவன் பார்ப்பான் என்றுரைத்தான். !

மோகன்....


பின்குறிப்பு ...

என்னடா இவன் புதிதாக கவிதை வேறு எழுத ஆரம்பித்துவிட்டானா என அதிர்ச்சி அடையாதீர்கள் .சில ஆண்டுகளுக்கு முன் வாலிப வயதில் இது மாதிரி கொஞ்சம் கிறுக்குவேன்.(இப்போதும் வாலிபம் தான். அது முன்பகுதி, இது பின்பகுதி.) நான் பிளாக் ஆரம்பித்ததே என் கவிதைகளை எழுதுவதற்குத்தான். ப்ளாக்கின் ஆரம்ப பகுதிக்கு சென்று பாருங்கள் தெரியும். இனி நேரம் இருக்கும்போது ஒவ்வொன்றாய் பதிகிறேன்.சரி,இந்த கவிதை எப்படி இருக்கு... கருத்து சொல்லுங்கப்பா...!

சனி, 10 டிசம்பர், 2011

பவர் ஸ்டாரின் புதிய பூகம்பம்




தமிழ் சினிமா ரசிகபெருமக்களே..



இதோ உங்களை ரட்சிக்க மீண்டும் வருகிறார்...


தமிழ் சினிமாவின் புதிய சூறாவளி...
உங்களுக்கு ஆனந்த தொல்லை கொடுத்த ...

லத்திகா வாக லத்தியை சுழற்றிய....


பவர் ஸ்டார்....



டாக்டர் சீனிவாசனின் புதிய காவியம் ....



தேசிய நெடுஞ்சாலை...




இந்தமுறை விஜயின் ஆரம்பகால ஆஸ்தான நாயகி சங்கவியுடன்..!




இப்பொழுது ஸ்டில் ...



விரைவில் பூகம்பம்....

வடிவேலு ஒரு படத்தில் சுந்தர். சி இடம் சொல்லுவார்.. ''தைரியம் இருந்தா என் ஏரியாவுக்கு வாடா பாக்கலாம்'' ன்னு.
அதையேதான் உங்களிடம் சொல்லுகிறோம். படம வரட்டும். தைரியம் இருந்தால் தியேட்டர் பக்கம் வாருங்கள் பார்க்கலாம்.!



வியாழன், 1 டிசம்பர், 2011

பாலை - மதிப்பெண்களுக்கு அப்பாற்பட்ட படம் - விகடன்

பெரியார்,காமராஜை போன்ற திரைப்படங்களுக்குப் பிறகு ''பாலை'' படத்தை மதிப்பெண்கள் வழங்காமல் பாராட்டி இருக்கிறது ஆனந்த விகடன்.

கடந்த சில ஆண்டுகளில் அரிதாக சில படங்களுக்கு விகடன் மதிப்பெண்கள் போடாமல் இருந்திருக்கிறது. அவையும் வெவ்வேறு காரணங்களுக்காக.

துள்ளுவதோ இளமை படத்திற்கு மதிப்பெண் வழங்குவதே ஆபாசத்திற்கு ஆதராவாகிவிடும் என்ற காரனத்தால் மதிப்பெண் வழங்கவில்லை.


அதன் பிறகு சங்கரின் பாய்ஸ் படம். அதன் விமர்சனம் இன்றும் நினைவில் இருக்கிறது. வக்கிர மனம் கொண்ட ஒருசில இளைஞர் களுக்கு ஒருவேளை இந்த படம் பிடிக்கலாம். மற்றவர்களுக்கு சாரி .. என விமர்சித்தது.


இந்த இரண்டு ஆபாச படங்களிலும் பிரபலமானவர்கள் சம்பந்தப் பட்டிருந்ததால் இந்த அளவுக்கு விமர்சனம் செய்தது. அதன்பிறகு வந்த இந்தமாதிரியான படங்களை விகடன் கண்டுகொள்ளவில்லை.

அதேபோல் ஒரு படம் எப்படியெல்லாம் எடுக்ககூடாதோ , அப்படியெல்லாம் எடுக்கப்பட்ட ''இந்திரலோகத்தில் நா.அழகப்பன்'' என்ற படத்திற்கு மதிப்பெண் வழங்கவில்லை.


பெண் குழந்தை தொழிலாளி பற்றிய குட்டி என்ற படத்திற்கு மதிப்பெண் வழங்காமல் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக அறிவித்தது விகடன்.


பெரியார் ,காமராஜர் ஆகிய படங்களை மதிப்பெண்களை தாண்டி ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டும் என்ற வேண்டுகோளுடன் மதிப்பெண் தராமல் ஊக்குவித்தது விகடன்.




நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்போது பாலை படத்திற்கு அந்த பெருமை கிடைத்துள்ளது.


2000 ஆண்டுகளுக்கு முன் மண்ணுக்காக போராடிய தமிழர்களின் வீர வரலாற்றைப் படமாகி இருக்கிறார்கள். மதிப்பெண்களை தாண்டி அனைவரும் பார்க்க சொல்கிறது விகடன். பார்ப்போம்.
இந்த
மாதிரி படங்களை வரவேற்போம்.