வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

விஜயகாந்த்



விஜயகாந்த் 


கழுவி ஊத்துவதற்கும் கலாய்ப்பதற்கும் போட்டோ கமென்ட் போடவும் மட்டும் தானா விஜயகாந்த் ..! இதோ அவரைப் பற்றி சில தகவல்கள்..
 .பிறந்தது அருப்புக்கோட்டை அருகே உள்ள இராமானுஜபுரம் என்ற கிராமம் ( 25.8.1952 )
2    .முதல் படம்  1978 இல்  இனிக்கும் இளமை. அதிலிருந்து 2010இல் விருதகிரி வரை 33 ஆண்டுகளில் 125 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் .
3    .அதில் 25 படங்கள் வெள்ளி விழா கண்டவை.
4     .திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு கொடுத்த முதல் நடிகர் விஜயகாந்த் அவர்களே. ஊமைவிழிகளில் நடிக்க வேண்டாம் என பலரும் சொன்னார்கள். ஆனால் விஜயகாந்த் “மாணவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். கண்டிப்பாக சாதிப்பார்கள் “ என கூறி ஊமைவிழிகளில் நடித்தார். அதுதான் அரவிந்தராஜ், ஆபாவாணன், RK செல்வமணி முதல் ஏராளமானோர் சாதிக்க காரணம்.
5      .நேர்மையான காவல் துறையினர்  மீதும் , ராணுவம் மீதும் மரியாதை அதிகம்.அதனால்  கடைசி 10 ஆண்டுகளில் நடித்த பெரும்பாலான படங்களில் அந்த வேடம் ஏற்று நடித்தார் .

 6. 1986இல் பிலிம்பேர் விருதும் ,2001இல் தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றார். 2009 இல் சிறந்த சாதனையாரருக்கான பிலிம்பேர் விருது பெற்றார் . 2001இல் சிறந்த இந்திய குடிமகனுக்கான ஜனாதிபதி விருது பெற்றார்.

6  .  என்னதான் ஈழ ஆதரவாளராக பலர் காட்டிக்கொண்டாலும் பிரபாகரன் பெயரை தன் படத்திற்கும் , தன் மகனுக்கும் வைத்தவர் விஜயகாந்த் மட்டுமே.
7    .நட்புக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர். தன் ஆரம்ப கால நண்பர்  இப்ராஹீம் ராவுத்தர் க்காக பல அவர் தயாரிப்பில் பல படங்களில் நடித்துள்ளார். அரசியலுக்கு வந்த பிறகு அந்த நட்பு பிரிந்ததற்கு விஜயகாந்த் காரணம் அல்ல.
8    .அதே போல தன் நண்பன் அருண் பாண்டியனுக்காக அவர் தயாரித்த தேவன் படத்தில் கவரவ வேடத்தில் நடித்தார். அருண் பாண்டியனை தன் கட்சி சார்பில் எம்எல்ஏ ஆக்கினார். ஆனால் அருண் பாண்டியன் நன்றி மறந்து அம்மாவிடம் போனார்.
9   .பல ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கி வந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை லாபத்தில் கொண்டுவந்த முதல் நடிகர் சங்க தலைவர். இவர் தலைவராக் இருந்த காலத்தில் தான் கடன்கள் அடைக்கப் பட்டு , சொந்த இடம் வாங்கப் பட்டது.
10.   தேமுதிக தொடங்கி முதல் தேர்தலிலேயே யார் ஆதரவும் இன்றி விருதாச்சலத்தில் வெற்றி பெற்றார்.
11.   கடந்த தேர்தலில் 29 இடங்களில் வென்றார். காங்கிரஸ், திமுக, அதிமுக , தமாக அடுத்து எதிர் கட்சி அந்தஸ்தை பெற்ற 5வது கட்சி தேமுதிக .
12.   இது எல்லாவற்றையும் விட முக்கியமானது ஒன்று இருக்கிறது. பாய்ஸ் படத்தில் செந்தில் பேசுவது போல ஒரு வசனம் . எங்கெங்கு அன்னதானம் கிடைக்கும் என ஒரு லிஸ்ட் சொல்லுவார். அதில் “விஜயகாந்த் ஆபிசில் எப்போ கறி சோறு போடுவாங்க என வசனம் வரும். அந்த அளவிற்கு விஜயகாந்த் அன்னதான பிரபுவாக இருந்தார். அவர் வீட்டிற்கோ அலுவலகத்திற்கோ வரும் ரசிகரோ , உதவி இயக்குனரோ , சினிமா ஊழியர்களோ யாரும் சாப்பிடாமல் திரும்ப முடியாது.... அதற்கென தனி உணவுகூடமே வைத்திருந்தார். இயக்குனர் சங்கர் இந்த வசனத்தை வைத்ததற்கு காரணம் அவரும் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் விஜயகாந்த் அலுவலகத்தில் சாப்பிட்டிருக்கிறார்.
13.   பசிக்கு உணவளிக்கும் எண்ணமுள்ள ஒருவர் தவறான மனிதராக இருக்க முடியாது. அரசியலில் சில சறுக்கல்கள் சந்தித்திருக்கலாம். சில முடிவுகள் தவறாக போய் இருக்காலாம். ஆனால் எம்ஜிஆர் , ஜெயலிதாவிற்கு பிறகு திரைத் துறையில் இருந்து 100 க்கும் மேற்பட்டவர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள் . ஆனால் அதில் இந்த அளவிற்கு சாதித்தது விஜயகாந்த் மட்டுமே.

.        -மோகன் ,சேலம் .

திங்கள், 23 பிப்ரவரி, 2015

விஞ்ஞான சீரழிவு

விஞ்ஞான சீரழிவு 


சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவ மாணவிகளின் செல்போன்களை ஆய்வு செய்ததில் ( 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ) பெரும்பாலான மாணவ மாணவிகள் ஆபாச படம் வைத்திருந்தனர் .அல்லது ஆபாச இணைய தளங்களை பார்த்துள்ளனர். சாட்டிங், வாட்சப்பில் பகிர்ந்துள்ளனர். பெற்றோர்களும் பிள்ளைகள் கேட்கிறார்கள் என்று நவீன ஸ்மார்ட் போன்களை வாங்கி தருகிறார்கள். நம் பிள்ளைக்கு ஒன்றும் தெரியாது என்ற நம்பிக்கையில் போனை சோதனை செய்வதில்லை. அல்லது பெற்றோருக்கு தெரியாதவாறு லாக் செய்து வைக்கிறார்கள்.  இயல்பான பருவ புரிதல்களை அந்தந்த வயதில் நாமும் கடந்து தான் வந்திருக்கிறோம். ஆனால் அவை இலைமறை காய் போல இருந்தது. ஆனால் இன்று உள்ளங் கையில் இருக்கிறது.


இந்த படத்தை பகிர்வதா என யோசனையாக இருந்தது. ஆனால் நம் பிள்ளைகள் எத்தகைய சீரழிவில் உள்ளார்கள் என உணர வேண்டிய நேரம் இது. இனியும் என் குழந்தைக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது . அதே நேரத்தில் பெற்றோர் என்ற தோரணையில் மிரட்டியோ அடித்தோ சரி செய்ய முடியாது. ஒரு தோழனாக ,தோழியாக பேசுங்கள்.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

டங்கா‬ மாரியும் லாலி லாலியும்

டங்கா‬ மாரியும் லாலி லாலியும்


சில தினங்களுக்கு முன் விஜய் டிவி சூப்பர் சிங்கரில் நடிகர் தனுஷ் அநேகன் படத்தில் இருந்து ‘’டங்கமாரி ஊதாரி பூத்துக் கீண நீ நாறி’’ என்ற பாடலை பாடினார். சித்ரா , மனோ எல்லாம் அருமை என பாராட்டினார்கள். இந்த பாடலை எழுதிய லோகேஷ் ஒரு பேட்டியில் , தன் அம்மா தன்னை தினமும் திட்டும் வார்த்தைகளை சேர்த்து இந்த பாடலை எழுதியதாக பெருமையுடன் கூறினார்.

அதே சூப்பர் சிங்கரில் 2 நாட்களுக்கு முன் ஒரு சிறுமி சிப்பிக்குள் முத்து படத்திலிருந்து “ வரம் தந்த சாமிக்கு பதமான லாலி “ என்ற பாடலை பாடினாள். இதுவும் ஒரு அம்மா பாடுவதாக உள்ள பாடல்தான். ஆனால் இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம்.! தனக்கு தாய்மை வரம் அளித்த தன் குழந்தையை கண்ணனாக,ராமனாக ,முருகனாக நினைத்து , தன்னை யசோதையாக , கவுசல்யையாக , பார்வதியாக உருவகப் படுத்தி ஒரு தாய் பாடுகிறாள்.எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து. இந்த பாடலை எழுத அவர் நிறைய இதிகாசங்களையும் புராணங்களையும் படித்திருக்க வேண்டும். ஆனால் டங்கா மாரி எழுத அம்மா திட்டிய நாலு கெட்ட வார்த்தை போதும்..!

இதோ இந்த பாடல் வரிகளை படித்து பாருங்கள். பிறகு ராஜாவின் இசையில் கேட்டுப் பாருங்கள் . குழந்தை என்ன நம்மையே தூக்கம் ஆட்கொள்ளும். ஆனால் டங்கா மாறி .. படம் தியேட்டரை விட்டு போவதற்குள் காணாமல் போய்விடும்.
-----------------------------------
லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி

குறும்பான கண்ணனுக்கு...
குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே
கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே
யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே
யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே

கருயானை முகனுக்கு...
கருயானை முகனுக்கு மலை அன்னை நானே
கருயானை முகனுக்கு மலை அன்னை நானே
பார் போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே

ஆனந்த கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஆனந்த கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஸ்ரீராமன் பாடும் அந்த கம்ப நாடன் நானே
ஸ்ரீராமன் பாடும் அந்த கம்ப நாடன் நானே

ராம ராஜனுக்கு வால்மீகி நானே
ராம ராஜனுக்கு வால்மீகி நானே
ஆகாய வண்ணனுக்கு தியாகய்யர் நானே

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
ஆரிராரிராரிராரோ ஆரிராரிராரிராரோ

-மோகன் , சேலம்