வியாழன், 1 டிசம்பர், 2011

பாலை - மதிப்பெண்களுக்கு அப்பாற்பட்ட படம் - விகடன்

பெரியார்,காமராஜை போன்ற திரைப்படங்களுக்குப் பிறகு ''பாலை'' படத்தை மதிப்பெண்கள் வழங்காமல் பாராட்டி இருக்கிறது ஆனந்த விகடன்.

கடந்த சில ஆண்டுகளில் அரிதாக சில படங்களுக்கு விகடன் மதிப்பெண்கள் போடாமல் இருந்திருக்கிறது. அவையும் வெவ்வேறு காரணங்களுக்காக.

துள்ளுவதோ இளமை படத்திற்கு மதிப்பெண் வழங்குவதே ஆபாசத்திற்கு ஆதராவாகிவிடும் என்ற காரனத்தால் மதிப்பெண் வழங்கவில்லை.


அதன் பிறகு சங்கரின் பாய்ஸ் படம். அதன் விமர்சனம் இன்றும் நினைவில் இருக்கிறது. வக்கிர மனம் கொண்ட ஒருசில இளைஞர் களுக்கு ஒருவேளை இந்த படம் பிடிக்கலாம். மற்றவர்களுக்கு சாரி .. என விமர்சித்தது.


இந்த இரண்டு ஆபாச படங்களிலும் பிரபலமானவர்கள் சம்பந்தப் பட்டிருந்ததால் இந்த அளவுக்கு விமர்சனம் செய்தது. அதன்பிறகு வந்த இந்தமாதிரியான படங்களை விகடன் கண்டுகொள்ளவில்லை.

அதேபோல் ஒரு படம் எப்படியெல்லாம் எடுக்ககூடாதோ , அப்படியெல்லாம் எடுக்கப்பட்ட ''இந்திரலோகத்தில் நா.அழகப்பன்'' என்ற படத்திற்கு மதிப்பெண் வழங்கவில்லை.


பெண் குழந்தை தொழிலாளி பற்றிய குட்டி என்ற படத்திற்கு மதிப்பெண் வழங்காமல் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக அறிவித்தது விகடன்.


பெரியார் ,காமராஜர் ஆகிய படங்களை மதிப்பெண்களை தாண்டி ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டும் என்ற வேண்டுகோளுடன் மதிப்பெண் தராமல் ஊக்குவித்தது விகடன்.




நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்போது பாலை படத்திற்கு அந்த பெருமை கிடைத்துள்ளது.


2000 ஆண்டுகளுக்கு முன் மண்ணுக்காக போராடிய தமிழர்களின் வீர வரலாற்றைப் படமாகி இருக்கிறார்கள். மதிப்பெண்களை தாண்டி அனைவரும் பார்க்க சொல்கிறது விகடன். பார்ப்போம்.
இந்த
மாதிரி படங்களை வரவேற்போம்.

1 கருத்து: