புதன், 23 மே, 2012

என் பிரண்ட போல யாரு மச்சான் ....

என் பிரண்ட போல யாரு மச்சான் ....


கடந்த வாரம் எதேச்சையாக ராஜசேகரின் போன் நம்பர் கிடைத்தது. பேசியதும் பயங்கர சந்தோசம் ஆகிவிட்டான். இரண்டு நாட்களுக்கு பிறகு அவன் கூப்பிட்டான். நம்ம பசங்க எல்லாம் பாப்பியா, என்ன பண்றாங்க, ஒரு கெட்-டூ-கெதர் மாதிரி பண்ணலாம் என்றான். எங்கள் யாகூ க்ரூப்பில் அதைப் பற்றி எழுதினான். அதற்க்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் . மெயில் பக்கமே நிரம்பிவிட்டது.


நாங்கள் +2 முடித்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும்கூட என் பள்ளித் தோழர்கள் தான் நண்பர்களாக உள்ளனர். இன்றும்கூட எல்லோரது பெயரும் நினைவில் உள்ளது. சேலம் ராமக்ரிஷ்ணாவில் படித்த நாட்கள் ஒரு பொற்காலம். அதுவும் +1 ,+2  படித்த நாட்கள். அதே பள்ளியில் 10th முடித்து விட்டு +1 சேர்ந்தோம். 39  மாணவர்கள், 21 மாணவிகள். 



முதல் நாள் டால் பிசிக்ஸ் சார் ( சுப்பிரமணியம்) சார் பேசியது நினைவில் உள்ளது. நல்லா படிக்காவிட்டால்  எதிர்காலத்தில் பள்ளிக்கு எதிரில் உள்ள குட்டிச் சுவரில் அமர்திருப்பீர்கள், அப்போது வருந்துவீர்கள் என்றார். பள்ளி முடியும் வரை அடிக்கடி சொல்லுவார். ஆனால் எங்கள் செட்டில் இருந்த 39 பேரில் சுமார் 15 பேர் BE,ME என படித்தது எங்களுக்கே அதிசயம். ஏனென்றால் இன்று வேண்டுமானால் வருவோர்,போவோர் எல்லாம் BE படிக்கிறார்கள். ஆனால் நாங்கள் படித்த 95 களில் அதிகபட்சம் 2,3 பேர் படிப்பார்கள் என நினைத்தோம். TP சார் கேட்டால் சந்தோசப் படுவார்.



 
ஞாபகம் வருதே...


நானும் ,யாசரும் ஒரு மழை நாளில் பன்னீர் வீட்டுக்கு போனது

தினேஷ் ரேடியோ கொண்டுவந்து கிரிகெட் கமெண்ட்ரி கேட்கும் பொது , டப் சாரிடம் மாட்டிக்கொண்டது,

நான் போர்டில் ZOO இயல் என எழுதிவைக்க , ZOO மிஸ் என் பேரை மோ GUN என எழுதியது

பாட்டணி சார் சுபாஷைப் பார்த்து ஏண்டா சிரிக்கிற என கேட்டதற்கு ,என் மூஞ்சியே அப்படித்தான் சார் என அவன் சொன்னது

காசி, நான் ,யாசர் மூவரும் என் பழைய விஜய் சூப்பரில் சினிமாவிற்கு போனது

தமிழ் தேர்வில் எழுதிய சிறுகதையில் '' பட்டிக்காட்டான் காசியும் ,பாகலும் (பாகல்பட்டி மணிகண்டன் ) மிட்டாய் கடையைப் பார்த்தது போல'' என நான் எழுத சண்முகவடிவு டீச்சர் அதை எல்லோருக்கும் படித்து காட்டியது


கிரியும் நானும் சினிமா புதிர் விளையாடியது, ராஜேஸ்குமார் நாவல் படித்தது

சம்பத் சாரிடம் கணக்கு டியூசன் படித்தது

எட்டணா டியூப் ஐஸ் வாங்கி அதை இரண்டாக்கி சாப்பிட்டது

பத்தே ரூபாயில் பர்த்டே ட்ரீட் கொடுத்தது

ராஜசேகரிடம் அனுபவக் கதை கேட்பது...

அருணாச்சலம் சாருடன் போன கொடைக்கானல் டூர் ( போட்டோவிற்கு காசு கொடுத்தவர்களை மட்டுமே போட்டோ எடுத்தான் என் நண்பன் )

எல்லோருடைய டிபன் பாக்ஸ்-ஐயும் உரிமையோடு ஒப்பன் பண்ணும் அருண்.....

ZOO ப்ராக்டிகலுக்கு எனக்கு சிக்கன் சைசில் தவளை கொண்டுவந்து கொடுத்த உலகநாதன்...
 
இன்னும் முஸ்தாக்,ராஜ்குமார்,வெள்ளாலப்பட்டியான், கேர்ள்ஸ்......

எழுத ஆரம்பித்தால் எழுதிக்கொண்டே இருக்கலாம்.என்னை போலவே ஒவ்வொருவரிடமும் ஒரு கதை இருக்கும்.



வாருங்கள் நண்பர்களே நம் பள்ளி காலத்து கனவுகள்,காதல்,நட்பு,தோழிகள்,வாத்தியார்,ஸ்ட்ரைக்,டூர் .... எல்லாம் மீண்டும் ஒரு முறை பேசலாம்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக