புதன், 18 மே, 2011

அநியாயமா மின்சாரம் வீணா போகுது







அநியாயமா மின்சாரம் வீணா போகுது

முதல் அமைச்சராக பதவியேற்றுள்ள ஜெயலலிதா , மின் தட்டுப்பாட்டை போக்குவதே முதல் வேலை என அறிவித்துள்ளார். அதை நிறைவேற்ற என்ன திட்டங்கள் வைத்துள்ளார் என்பது தெரியவில்லை.
ஆனால் அதற்க்கு அவர் புதிய மின் திட்டங்களை தீட்ட தேவை இல்லை . நாமும்,அரசாங்கமும் வீணடிக்கும் மின்சாரத்தை மிச்ச்சப்படுத்தினாலே போதும் , தேவை போக மீதி இருக்கும்.


மின் இழப்பு
நம் நாட்டில் 100 யூனிட் மின்சாரம் தயாரித்தால் 70 யூனிட் மட்டுமே நுகர்வோரைப் போய் சேர்வதாக ஒரு கணக்கு சொல்கிறது. 30 யூனிட் மின்சாரம் வீணாகிறது.
உலகிலேயே அதிகமான அளவு இதுதான். துணை மின் நிலையங்களையும், டிரான்ஸ்பார்மர் களையும் நவீனப் படுத்தினால் 10 யூனிட் மட்டுமே இழப்பு ஏற்படும் . பல ஆயிரம்
கோடி ரூபாய் மின் கட்டணம் கூடுதலாக கிடைக்கும். எனவே இதற்க்காக எவ்வளவு செலவு செய்தாலும் ஒரே ஆண்டில் மீதி ஆகிவிடும். மேலும் மின்கம்பிகளை பூமிக்கு அடியில் கொண்டு சென்றாலும் பெருமளவு மின் இழப்பு தவிர்க்கப்படும்.

குண்டு பல்புகளைத் தவிர்ப்போம்

குண்டு பல்புகள் அதிக மின்சாரத்தை வீனடிப்பதுடன்,புவி வெப்பமயமாதலுக்கும் காரணமாகிறது.அதற்க்கு பதிலாக குறைந்த மின்சாரத்தில் எரியும் குழல் விளக்குகளை பயன்படுத்தலாம் .அனைத்து அரசு அலுவலகங்களிலும் உடனடியாக குண்டு பல்ப்புகளை நீக்கிவிட்டு குழல் விளக்குகளை பயன்படுத்தவேண்டும்.இமாச்சலப் பிரதேச அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வீடுகளுக்கும் CFL குழல் விளக்குகளை இலவசமாக கொடுத்தது. இதனால் அங்கு 40 சதவீதம் வரை மின் தேவைக் குறைந்துள்ளது. தமிழக அரசும் அவ்வாறு செய்யலாம்.அரசே விளம்பரங்களில் குண்டு பல்புகளை பரிந்துரைக்கிறது என்பது வேறு வேதனை.படத்தைப் பாருங்கள்.

தெரு விளக்குகள்

நம் ஊரில் உள்ள தெரு விளக்குகள் பெரும்பாலும் சோடியம் அல்லது மெர்குரி விளக்குகள்.
இவற்றிற்கு 500 முதல் 2000 வாட்ஸ் வரை மின்சாரம் செலவாகிறது.ஆனால் வெள்ளை நிற ஒளி தரும் LED விளக்குகள் 100 முதல் 200 வாட்ஸ் மட்டுமே செலவாகும்.எனவே இவற்றையும் உடனே மாற்றவேண்டும்.

மின் திருட்டு
அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் கைக்குள் போட்டுக்கொண்டு சில தொழில் அதிபர்கள் செய்யும் திருட்டால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்ப்படுகிறது.
சமீபத்தில் கூட சங்ககிரி அருகில் ஒரு இரும்புத் தொழிற்ச்சாலையில் 7 கோடி ரூபாய் அளவுக்கு மின்திருட்டை கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே இதற்க்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும்.திருட முடியாத அளவுக்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

கொக்கி போடுதல்
திருவிழா மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு மின்சாரம் இலவசம் என எந்த சட்டமும் இல்லை.யாரும் காசு கொதுட்டு கரண்ட் வாங்குவதும் இல்லை.தமிழர்கள் கண்டுபிடித்த கொக்கி போட்டு திருடும் முறை மூலம் இவர்கள் மின்சாரம் திருடுவதை தடுக்கவேண்டும்.இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்கலாம்.

சூரிய சக்தி
சோலார் சிஸ்டம் எனப்படும் சூரிய சக்தி மின் உபகரணங்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் .கல்வி நிறுவனங்கள்,தொழிற்சாலைகள்,அடுக்கு மாடி குடியிருப்புகள் போன்றவற்றிற்கு அனுமதி கொடுக்கும் போதே கண்டிப்பாக சோலார் சிஸ்டம் பொருத்த உத்தரவிட வேண்டும். இதை பொதுமக்கள் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.வரிச்சலுகை,மானியம் போல..கர்நாடகாவில் சோலார் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் மக்களுக்கு ஒவ்வொரு கரண்ட் பில்லிலும் ரூ.50 டிஸ்கவுன்ட் தருகிறார்கள்.




ஸ்டார் ரேட்டிங்
மின்சாதனங்களுக்கு அதன் மின்தேவைக்கு ஏற்ப 1 முதல் 5 வரை ஸ்டார் ரேட்டிங் ஐ மத்திய அரசு அளிக்கிறது. 5 ஸ்டார் ரேட்டிங் உள்ள பொருட்களை வாங்கினால்
குறைவான மின்சாரமே செலவாகும்.

மேற்கண்ட விசயங்களை செய்தாலே 40 சதவீதம் மின்சாரம் மீதி ஆகும்.இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் அரசு புதிதாக ஆரம்பிக்க உள்ள மிந்திட்டங்களின் உற்பத்திக்கு சமமாகும்.
இதை எல்லாம் நிறைவேற்ற துணிச்சலாக முடிவெடுக்கும் முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். அவர் இதை செய்வார் என நம்புவோம்.


எண்ணமும் கருத்தும் மோகன். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக