படைப்பாளி என்ற பெயரில் எளிய ,அழகிய கவிதைகள் , கருத்துக்களை முன்வைக்கிறார். அழகிய தென்றலைப் போல உள்ள இந்த வலைபக்கத்தை நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.
அவரைப் பற்றி அவரே கூறுகிறார்
காட்டுக்கோட்டை..
பெயரைப்போல காடில்லாவிட்டாலும்
அந்த ஊரில் காட்டுக்கொட்டாயில்தான் எங்கள் வீடு.
அளவான குடும்பம்
ஆறுமுகம், சந்திரமதியின் மூத்த புதல்வன் நான்.
தமையன் ஒருவன்
பள்ளிப்படிப்பு சொந்த ஊரில்..
பட்டப்படிப்பு சென்னைமாப்பட்டிணத்தில்..
ஓவியக்கல்லூரியில் முதுகலை படித்தவன்
முகவரி சொன்னால்
முதலில் ஓவியன்.
அப்பப்போ.. கவிதை,கதை எனும் பெயரில்
சிறு சிறு கிறுக்கல்கள்.. சிற்சில சிந்தனைகள்..
நான் படைப்பென நினைப்பதை
உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்..
பாரீர்!!நான் செம்மையுற உமது கருத்துகள் தாரீர்!!
மாதிரிக்கு ஒரு கவிதைஇன்று சுதந்திர தினமாமே!
கொடி வாங்கலையோ கொடி
ஒரு ரூபாய்தான் அண்ணா
ஒன்னு வாங்கிக்கோங்க
அக்கா ஒன்னு வாங்கிக்கோங்க
காலைல சாப்பிடக்கூட இல்ல
சார் ஒன்னு வாங்கிக்கோங்க
இப்படித்தான் விடிகிறது
ஏழ்மைக்கு இன்றைய தினம்.
எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள்
இந்தியாவுக்கு இன்று சுதந்திர தினமாமே!
வலைப் பக்க முகவரிhttp://padaipali.wordpress.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக