வியாழன், 23 ஆகஸ்ட், 2012

அணு விஞ்ஞானி நாராயணசாமி !

அணு விஞ்ஞானி நாராயணசாமி !

முயற்சி செய்தால் முடியாதது இல்லை என்பதற்கு உதாரணம் இவர்..


புதுச்சேரியில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.

படித்தது ஆறாம்வகுப்பு..

சரியான வேலை இல்லாததால் புதுவை காங்கிரஸ் கோஷ்டி ஒன்றில் இணைந்தார் ..

படிப்படியாக வளர்ந்து எம்பி ஆனார்...

வேறு ஆள் கிடைக்காததால் மந்திரி ஆனார்...

முக்கால்வாசி அரசியல்வாதிகளின் கதை இதுதானே என்று கேட்காதீர்கள் ...  

இதற்கு பிறகுதான் இருக்கிறது வரலாறு..



கூடங்குளத்தில் தேவையில்லாமல் ஒரு அணு உலையை கட்டிவிட்டு,

''கவன்பிளவில் கால் நுழைத்து ஆப்பசைத்துக் கொண்ட குரங்குதனைப்போல'' மாட்டிக்கொண்ட மத்திய அரசு ,அதை சமாளிக்க சரியான ஆளை தேடியது. அப்பத்தான் கண்ணில் பட்டார் நம்ம நாராயணசாமி...


அணு உலையை ஆறு ரவுண்ட் வந்தார்...

ஆறே மாதத்தில் அணு விசயங்களை கரைத்து குடித்தார்..

இந்தியாவிற்கு புதிய அணு விஞ்ஞானி கிடைத்தார்..

கூடங்குளம் போராட்ட குழுவின் கேள்விகளுக்கு அப்துல்கலாம் முதல் ரஷ்ய விஞ்ஞானிகள் வரை பதில் சொல்ல தடுமாறுகையில் , அசால்ட்டாக சமாளிக்கிறார் அ.வி(அணு விஞ்ஞானி).நாராயணசாமி...


அதுவும் நம்மைப் போன்ற பாமர மக்களுக்கும் புரியும் வகையில், ''இன்னைக்கு உலையில் யுரேனியம் போட்டாச்சு,15 நாள்ல கரண்ட் வந்திரும்னு எதோ அரிசிய உலைல போட்டாச்சு 15 நிமிசத்தில பொங்கிரும்''; ங்கிற மாதிரி எளிமையா சொல்றார் அ.வி.நாராயணசாமி...  

வெறும் ஆறாவது மட்டும் படித்து , சொந்த முயற்ச்சியால் அணு விஞ்ஞானியாக மாறிய நாராயணசாமியை,  விரைவில் இந்திய அணுசக்தி துறை தலைவராக வருவதற்கு வாழ்த்துங்கள்.. 

எனவே நாராயணசாமியை விட்டு பதில் சொல்வது , போராட்டக் குழுவினரை அவமானப்படுத்துவதற்காக என யாரும் நினைக்கவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

2 கருத்துகள்:

  1. திரு நாராயணசாமி அவர்கள் புதுவை தாகூர் கலைக்கல்லூரியில் B.A வும்,சென்னை சட்டக் கல்லூரியில் B.L ம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் M.L ம் படித்ததாக கேள்வி. ஆனால் நீங்கள் ஆறாவது தான் படித்திருக்கிறார் என்கிறீர்கள். எது சரி எனத்தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாராயணசாமி B.A படித்திருக்கலாம். கூடங்குளம் அணுமின்நிலையம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் நிபுணர்களை தவிர்த்துவிட்டு , நாராயணசாமி மட்டுமே பதில் சொல்வதை கிண்டல் செய்து இந்த பதிவு. நிபுணர்கள் பதில் சொன்னால் உண்மைகள் வெளிவந்துவிடும் என்ற மத்திய அரசின் திட்டம் தான் நாராயணசாமியை விட்டு பதில் சொல்வது.

      நீக்கு