வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

விஜயகாந்த்



விஜயகாந்த் 


கழுவி ஊத்துவதற்கும் கலாய்ப்பதற்கும் போட்டோ கமென்ட் போடவும் மட்டும் தானா விஜயகாந்த் ..! இதோ அவரைப் பற்றி சில தகவல்கள்..
 .பிறந்தது அருப்புக்கோட்டை அருகே உள்ள இராமானுஜபுரம் என்ற கிராமம் ( 25.8.1952 )
2    .முதல் படம்  1978 இல்  இனிக்கும் இளமை. அதிலிருந்து 2010இல் விருதகிரி வரை 33 ஆண்டுகளில் 125 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் .
3    .அதில் 25 படங்கள் வெள்ளி விழா கண்டவை.
4     .திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு கொடுத்த முதல் நடிகர் விஜயகாந்த் அவர்களே. ஊமைவிழிகளில் நடிக்க வேண்டாம் என பலரும் சொன்னார்கள். ஆனால் விஜயகாந்த் “மாணவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். கண்டிப்பாக சாதிப்பார்கள் “ என கூறி ஊமைவிழிகளில் நடித்தார். அதுதான் அரவிந்தராஜ், ஆபாவாணன், RK செல்வமணி முதல் ஏராளமானோர் சாதிக்க காரணம்.
5      .நேர்மையான காவல் துறையினர்  மீதும் , ராணுவம் மீதும் மரியாதை அதிகம்.அதனால்  கடைசி 10 ஆண்டுகளில் நடித்த பெரும்பாலான படங்களில் அந்த வேடம் ஏற்று நடித்தார் .

 6. 1986இல் பிலிம்பேர் விருதும் ,2001இல் தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றார். 2009 இல் சிறந்த சாதனையாரருக்கான பிலிம்பேர் விருது பெற்றார் . 2001இல் சிறந்த இந்திய குடிமகனுக்கான ஜனாதிபதி விருது பெற்றார்.

6  .  என்னதான் ஈழ ஆதரவாளராக பலர் காட்டிக்கொண்டாலும் பிரபாகரன் பெயரை தன் படத்திற்கும் , தன் மகனுக்கும் வைத்தவர் விஜயகாந்த் மட்டுமே.
7    .நட்புக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர். தன் ஆரம்ப கால நண்பர்  இப்ராஹீம் ராவுத்தர் க்காக பல அவர் தயாரிப்பில் பல படங்களில் நடித்துள்ளார். அரசியலுக்கு வந்த பிறகு அந்த நட்பு பிரிந்ததற்கு விஜயகாந்த் காரணம் அல்ல.
8    .அதே போல தன் நண்பன் அருண் பாண்டியனுக்காக அவர் தயாரித்த தேவன் படத்தில் கவரவ வேடத்தில் நடித்தார். அருண் பாண்டியனை தன் கட்சி சார்பில் எம்எல்ஏ ஆக்கினார். ஆனால் அருண் பாண்டியன் நன்றி மறந்து அம்மாவிடம் போனார்.
9   .பல ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கி வந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை லாபத்தில் கொண்டுவந்த முதல் நடிகர் சங்க தலைவர். இவர் தலைவராக் இருந்த காலத்தில் தான் கடன்கள் அடைக்கப் பட்டு , சொந்த இடம் வாங்கப் பட்டது.
10.   தேமுதிக தொடங்கி முதல் தேர்தலிலேயே யார் ஆதரவும் இன்றி விருதாச்சலத்தில் வெற்றி பெற்றார்.
11.   கடந்த தேர்தலில் 29 இடங்களில் வென்றார். காங்கிரஸ், திமுக, அதிமுக , தமாக அடுத்து எதிர் கட்சி அந்தஸ்தை பெற்ற 5வது கட்சி தேமுதிக .
12.   இது எல்லாவற்றையும் விட முக்கியமானது ஒன்று இருக்கிறது. பாய்ஸ் படத்தில் செந்தில் பேசுவது போல ஒரு வசனம் . எங்கெங்கு அன்னதானம் கிடைக்கும் என ஒரு லிஸ்ட் சொல்லுவார். அதில் “விஜயகாந்த் ஆபிசில் எப்போ கறி சோறு போடுவாங்க என வசனம் வரும். அந்த அளவிற்கு விஜயகாந்த் அன்னதான பிரபுவாக இருந்தார். அவர் வீட்டிற்கோ அலுவலகத்திற்கோ வரும் ரசிகரோ , உதவி இயக்குனரோ , சினிமா ஊழியர்களோ யாரும் சாப்பிடாமல் திரும்ப முடியாது.... அதற்கென தனி உணவுகூடமே வைத்திருந்தார். இயக்குனர் சங்கர் இந்த வசனத்தை வைத்ததற்கு காரணம் அவரும் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் விஜயகாந்த் அலுவலகத்தில் சாப்பிட்டிருக்கிறார்.
13.   பசிக்கு உணவளிக்கும் எண்ணமுள்ள ஒருவர் தவறான மனிதராக இருக்க முடியாது. அரசியலில் சில சறுக்கல்கள் சந்தித்திருக்கலாம். சில முடிவுகள் தவறாக போய் இருக்காலாம். ஆனால் எம்ஜிஆர் , ஜெயலிதாவிற்கு பிறகு திரைத் துறையில் இருந்து 100 க்கும் மேற்பட்டவர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள் . ஆனால் அதில் இந்த அளவிற்கு சாதித்தது விஜயகாந்த் மட்டுமே.

.        -மோகன் ,சேலம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக