செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

டங்கா‬ மாரியும் லாலி லாலியும்

டங்கா‬ மாரியும் லாலி லாலியும்


சில தினங்களுக்கு முன் விஜய் டிவி சூப்பர் சிங்கரில் நடிகர் தனுஷ் அநேகன் படத்தில் இருந்து ‘’டங்கமாரி ஊதாரி பூத்துக் கீண நீ நாறி’’ என்ற பாடலை பாடினார். சித்ரா , மனோ எல்லாம் அருமை என பாராட்டினார்கள். இந்த பாடலை எழுதிய லோகேஷ் ஒரு பேட்டியில் , தன் அம்மா தன்னை தினமும் திட்டும் வார்த்தைகளை சேர்த்து இந்த பாடலை எழுதியதாக பெருமையுடன் கூறினார்.

அதே சூப்பர் சிங்கரில் 2 நாட்களுக்கு முன் ஒரு சிறுமி சிப்பிக்குள் முத்து படத்திலிருந்து “ வரம் தந்த சாமிக்கு பதமான லாலி “ என்ற பாடலை பாடினாள். இதுவும் ஒரு அம்மா பாடுவதாக உள்ள பாடல்தான். ஆனால் இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம்.! தனக்கு தாய்மை வரம் அளித்த தன் குழந்தையை கண்ணனாக,ராமனாக ,முருகனாக நினைத்து , தன்னை யசோதையாக , கவுசல்யையாக , பார்வதியாக உருவகப் படுத்தி ஒரு தாய் பாடுகிறாள்.எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து. இந்த பாடலை எழுத அவர் நிறைய இதிகாசங்களையும் புராணங்களையும் படித்திருக்க வேண்டும். ஆனால் டங்கா மாரி எழுத அம்மா திட்டிய நாலு கெட்ட வார்த்தை போதும்..!

இதோ இந்த பாடல் வரிகளை படித்து பாருங்கள். பிறகு ராஜாவின் இசையில் கேட்டுப் பாருங்கள் . குழந்தை என்ன நம்மையே தூக்கம் ஆட்கொள்ளும். ஆனால் டங்கா மாறி .. படம் தியேட்டரை விட்டு போவதற்குள் காணாமல் போய்விடும்.
-----------------------------------
லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி

குறும்பான கண்ணனுக்கு...
குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே
கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே
யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே
யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே

கருயானை முகனுக்கு...
கருயானை முகனுக்கு மலை அன்னை நானே
கருயானை முகனுக்கு மலை அன்னை நானே
பார் போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே

ஆனந்த கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஆனந்த கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஸ்ரீராமன் பாடும் அந்த கம்ப நாடன் நானே
ஸ்ரீராமன் பாடும் அந்த கம்ப நாடன் நானே

ராம ராஜனுக்கு வால்மீகி நானே
ராம ராஜனுக்கு வால்மீகி நானே
ஆகாய வண்ணனுக்கு தியாகய்யர் நானே

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
ஆரிராரிராரிராரோ ஆரிராரிராரிராரோ

-மோகன் , சேலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக