ஞாயிறு, 8 மே, 2016

இலவசம்

 இலவசம்


ஜீன்ஸ் படத்தில் வரும் "பூவுக்குள் ஒளிந்திருக்கும் " ஸ்டைலில் பாடவும்


பூவையர் ஓட்டிச் செல்ல
ஸ்கூட்டி தான் இலவசம்
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
வாங்கலியோ இலவசம் 


நாளெல்லாம் பேச இனி
செல்போனும் இலவசம்
தெரு மீட்டிங் போனா
பீர் பாட்டில் இலவசம்
இலவசமே அசந்து போகும்
எல்லாமே இலவசம் ..

கல்தோன்றி மண்தோன்றிக்
கடல்தோன்றும் முன்னாலே
உண்டான நோய் இந்த இலவசம்

பதினெட்டு வயதான
பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற ஆசை இலவசம்

ஒரு பயனுமில்லா மிக்சி பேன்
ஒரு ரூபாய் இட்லியாம்.
இட்லியும் அதிசயமே

விலையில்லா பொருட்களிலே
உருப்படியாய் ஒன்றுமில்லை
அவமானம் இலவசமே ..

மின்சாரம் இல்லாமல்
மின்திட்டமும் இல்லாமல்
நூறு யூனிட் மின்சாரம் இலவசமாம் ..

ஓட்டு வாங்க என்னெல்லாம்
கொடுக்கலாம் என்பதும்
ஜெயித்து வந்தா என்னெல்லாம்
எடுக்கலாம் என்பதும்
நினைத்தால் நினைத்தால் கேவலமே....

‪#‎பூவையர்‬ ஓட்டிச் செல்ல
ஸ்கூட்டி தான் இலவசம்
வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி
வாங்கலியோ இலவசம்

நாளெல்லாம் பேச இனி
செல்போனும் இலவசம்
தெரு மீட்டிங் போனா
பீர் பாட்டில் இலவசம்

இலவசமே அசந்து போகும்
எல்லாமே இலவசம் ..

-மோகன் ,சேலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக