செவ்வாய், 28 டிசம்பர், 2010

இதோ மீண்டும் ஒரு இலவசம்



இதோ மீண்டும் ஒரு இலவசம் உங்களை தேடி வருகிறது பொங்கல் பரிசாக . ப்ரீயா கொடுத்தா பெனாயிலக்கூட குடிப்பான் தமிழன் என்ற பழமொழியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் கலைஞர் . அதையும் நம்மிடம் இருந்து பிடுங்கி ( வரி,பெட்ரோல், டாஸ்மாக்! ...) நமக்கே தருவது .அந்த வரிசையில் இப்போது பொங்கல் பரிசு !

சரி பொங்கல் பரிசுக்கு வருவோம். இந்த முறை ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் உண்டாம் . சுமார் இரண்டு கோடி பார்சல்கள் தயாரிக்கப் பட்டுள்ளன.CXYN ÙTÖjL¥ ÙTÖ£yL¸Á ÙUÖ†R மதிப்பு 52 ¤TÖš 53 ÛTNÖ Bh•. . வெளியில் நல்ல தரமானதாக வாங்கினால் கூட நாற்பத்தி ஐந்து தான் ஆகிறது.
இதில் இரண்டு லாபம் . ஒன்று எப்படியும் பாதி பேர்கூட வாங்க மாட்டார்கள்.
இரண்டு வெளிமார்கெட்டை விட அதிகம் செலவானதாக சொல்கிறார்கள்.
மூன்றாவதாக ஒன்று உள்ளது. முன்கூட்டியே திட்டமிடாமல் திடீரென கொள்முதல் செய்ததால் மார்கெட்டில் வெல்லம், முந்திரி போன்றவை கடுமையாக விலை உயர்ந்துவிட்டது. முப்பது ரூபாய்க்கு விற்ற வெல்லம் ஐம்பது ரூபாய்க்கு மேல் உயர்ந்து விட்டது ( கொள்முதலிலும் லாபம் ).

படத்தைப் பாருங்கள். அந்த முந்திரி , திராட்சை , ஏலக்காய் போன்றவற்றை ஒரே கவரில் போட்டிருக்கலாம். நாலு கோடி பிளாஸ்டிக் கவர்கள் குப்பைக்குப்
போவதை தவிர்த்திருக்கலாம். அந்த கேரிபேக்கைப் பாருங்கள் . ஒரு கிலோவிற்கு200 கேரிபேக் என வைத்துக்கொண்டாலும் சுமார் ஒரு லட்சம் கிலோ கேரிபேக்குகள் ...! எவ்வளவு பெரிய இயற்கை சீரழிவு .?
அரசே ஒரு பக்கம் ப்ளாஸ்டிக்கை தவிர்க்க சொல்கிறது.மறுபக்கம் ?
இதற்கு பதிலாக துணிப்பை கொடுத்திருக்கலாம் .அதிலும் கலைஞர் படம் பிரிண்ட் செய்ய முடியும் .வறுமையில் வாடும் நெசவாளர்களுக்கு உதவிய
மாதிரியும் இருக்கும் .
என்னத்த சொல்ல..!

4 கருத்துகள்:

  1. உங்கள் Motto = be positive. இதற்கு எதிராகப் போகிறதே உங்கள் பதிவு :)-

    பதிலளிநீக்கு
  2. மதிப்பிற்குரிய ஐயா
    இயற்கைக்கு ஆதரவாக இருப்பதும் positive தானே!
    ஏற்கனவே பிளாஸ்டிக் மற்றும் மரங்கள் தொடர்பாக நான் எழுதியுள்ள பதிவுகளைப் பாருங்கள் .

    பதிலளிநீக்கு
  3. எல்லாத்தையும் கலெக்ட் செய்து கலைஞர் வீட்டிற்கு பார்சல் செஞ்சா என்ன??அட்லீஸ்ட் 25 பாக்கெட்ஸ்..

    பதிலளிநீக்கு
  4. எங்க ஊர் ஆட்சியர் துணிப்பை கொண்டுதான் வர சொல்லியிருக்கிறார். ஒருவேளை எல்லா ஊருக்கும் பை இருக்காதோ ? வழக்கம்போல கணக்கு மட்டும் தான் எழுதப்படிருக்குமோ !.

    பதிலளிநீக்கு