கோவை ஜூபிடர் ஸ்டுடியோவில் SM சுப்பையா நாயுடு அவர்கள் இசை அமைப்பாளராக இருந்த பொது அவரிடம் உதவியாளராக சேர்ந்தார் MSV அவர்கள். அப்போது MSV போட்ட சில ட்யூன்களை கேட்டு அசந்து போனார் . அவற்றை தன படங்களில் பயன்படுத்திக் கொண்டார். சில ஆண்டுகளில் ஜூபிடர் ஸ்டூடீயோ சென்னைக்கு மாற்றப்பட்ட போது ,அதன் உரிமையாளரிடம் சுப்பையா நாயுடு அவர்கள் " இந்த பையனையும் ( MSV ) உங்களுடன் கூட்டிசெல்லுங்கள் . இவன் பொக்கிஷம் . நான் கடைசியாக இசை அமைத்த பாடல்கள் எல்லாம் இவன் தான் இசை அமைத்தான் " என்றார். அன்று முதல் MSV வாழ்வில் திருப்பு முனை .
தன்னை ஏற்றிவிட்ட குருவை MSV என்றும் மறந்ததில்லை . SM சுப்பையா
நாயுடுவின் இறுதி காலத்தில் தன் பராமரிப்பிலேயே வைத்துக் கொண்டார். அவர்
மறைந்த போது மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதி சடங்குகளை செய்தார்.
அதே போல் நகைச்சுவை மன்னன் சந்திர பாபு , MSV யின் நட்பும் . நகைச்சுவை நடிகராக , பாடகராக , நடன கலைஞராக தமிழ் திரையில் தனி முத்திரை பதித்த சந்திர பாபு , திரை உலகில் உயிர் நண்பராக நினைத்தது MSV ஐ மட்டுமே. இறுதி காலத்தில் அவர் பல்வேறு சிரமங்களில் இருந்த போது ஆறுதலாக இருந்தார் MSV . ''நான் இறந்தால் நீதாண்டா எனக்கு கொள்ளி வைக்கணும் '' என MSV இடம் சொல்லிக்கொண்டே இருப்பார் சந்திர பாபு . அதே போலவே சந்திர பாபு இறந்தவுடன் அவர் உடல் MSV வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது . MSV தன் நண்பனுக்கு இறுதி சடங்குகள் செய்து கொள்ளி வைத்தார் .
தன் ரத்த உறவு இல்லாத குருவுக்கும் , நண்பனுக்கும் MSV செய்த இறுதி மரியாதை போல வேறு உதாரணமே கிடையாது. இசையை தாண்டி மனிதம் என்றால் என்ன என்பதற்கு உதாரண புருஷர் . !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக