செவ்வாய், 1 மார்ச், 2016

மெனிஞ்சியோமா




- கணேச குமாரன்


உடல்நலமின்றியோ அல்லது விபத்தில் சிக்கியோ மாதக்கணக்கில் , வருடக்கணக்கில் படுக்கையில் இருப்பவர்களை நாம் சந்தித்திருப்போம் , கடந்து வந்திருப்போம் . அவர்களின் வலியையும் ஒரு சின்ன பரிதாபத்தோடு கடந்திருப்போம். ஆனால் அந்த வலியை உணர்ந்திருக்கிறீர்களா..

சந்துருவுக்கு மூளையில் உள்ள கொழுப்பை நீக்க ஆப்ரேஷன் நடக்கிறது. ஆப்ரேசனுக்கு முன்னும்,பின்னும் , மருத்துவமனையிலும் வீட்டிலும் அவன்படும் வேதனையை ஒவ்வொரு வரியிலும் உணர்த்துகிறார் கணேசன் . 


அறுவை சிகிச்சைக்குப்பின் ஒரு சொட்டு நீருக்காக தவிப்பதாகட்டும் , ஒரு துளி சிறுநீர் பிரிவதாகட்டும் .. வார்த்தைகளிலேயே வலியை நமக்கு கடத்துகிறார் . சந்துரு , அவன் அப்பா காளிதாஸ் மற்றும் மருத்துவ அறிவியல் மூன்றின் வழியாகவும் பயணிக்கிறது கதை. சுஜாதாவின் "தலைமைச்செயலகம்" எனக்கு மூளை பற்றிய அறிவியலை தந்தது. கணேச குமாரனின் மெனிஞ்சியோமா மூளைப் பற்றிய உணர்வியலை தந்தது.

"பைத்தியருசி" நூலுக்கு சற்று முன்னர்தான் கணேசகுமாரன் எனக்கு நண்பர் மூலம் அறிமுகம் ஆனார். ஆனால் வாடா மாப்ளே என அழைக்கும் அளவுக்கு உரிமை எடுத்துக்கொள்ளும் நண்பன் . கணேசகுமாரனின் "மிஷன் காம்பவுண்ட்" என்ற சிறுகதை தொகுப்பு பிப்ரவரி 14 அன்று வெளிவரவுள்ளது. அதோடு சேர்த்து மெனிஞ்சியோமாவையும் சேர்த்து வாங்கிப் படிப்பது உங்களுக்கும் கணேசனுக்கும் நன்மை பயக்கும்.

ஆன்லைனில் வாங்க....
http://discoverybookpalace.com/products.php?product=மெனிஞ்சியோமா

2 கருத்துகள்:

  1. Enna mama en kadhaiyattam iruku sottu thanniku pala Mani neram kaathirunthathum amma Akka vs icula paaka siderails aatunadhum marakala patients ennaikum dayavu senju patientah paakathinga punitha Dr.oda ore oru siripum avanga pesuradhum ammava paakura santhosam tharum

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நந்து. இது என் நண்பர் கனேசகுமாரன் எழுதியது. அவரின் சொந்த கதையும் கூட.. புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் அவரின் அனுபவங்களை எழுதியுள்ளார். என்னிடம் புத்தகம் உள்ளது . வேண்டுமென்றால் தருகிறேன்.

      நீக்கு