செவ்வாய், 12 ஜூலை, 2016

வில்வம்‬

30 நாள் 30 மருத்துவம் - நாள் 6


‪‎வில்வம்‬

 
அந்தக்காலத்தில் பாமர மக்களுக்கு நோய்க்கான மருந்துகள் பற்றி சொன்னால் , சரியாக புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதற்காக நோய்க்கான மருந்துகளை கோவில்களில் வைத்தார்கள். மேலும் இறைவன் மீது நம்பிக்கை வைத்து கடைபிடிக்கும் போது , நோய் விரைவில் குணமாகும்.

துளசி , வேப்பிலை , மஞ்சள் ,குங்குமம் ,சந்தனம் ,திருநீறு , காவடி எடுத்தல் , மஞ்சள் நீராட்டு , அங்க பிரதட்சணம் ,அலகு குத்துதல் ,மரத்தை வலம் வருதல் , கோவிலை வலம் வருதல் ...எல்லாமே மருத்துவ பலன்களுக்காக ஆலயத்தில் வைக்கப்பட்டவை .

இந்த வரிசையில் மிக முக்கியமானது வில்வம் . அனைத்து சிவன் கோவில்களிலும் வில்வ மரம் இருக்கும், வில்வ தீர்த்தம் வழங்கப்படுகிறது. வில்வ இலையில் தயாரிக்கப்படும் வில்வ தீர்த்தம் உடல் சூட்டை தணிக்கும் , வயிற்றுப்புண் ,ஆண்மைக்குறைவு , நீரிழிவை போக்கும் . வயிற்றுவலி , அஜீரணம் போன்றவற்றை போக்கும். எனவே வில்வத்தை சர்வலோக நிவாரணியாக பார்த்தனர்.

அந்த நாட்களில் குழந்தை இல்லாத தம்பதிகளை ஒரு மண்டலம் ( 48 நாட்கள் ) சிவன் கோவில் சென்று வழிபட சொல்வார்கள் . தினமும் அந்த தீர்த்தத்தை பருகிவிட்டு, ஆலயத்தில் உள்ள வில்வ மரத்தை வலம் வந்து அந்த காற்றை சுவாசிக்கும் போது பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன .

குரானிலும் நபிகள் வில்வத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். இதயத்தை வலுவூட்டுவதாக நபி மருத்துவம் கூறுகிறது. வில்வ பழம் வயிற்று புண் , ஆசன வாய் புண், மூலம் போன்றவற்றை ஆற்றக்கூடியது. வில்வஇலை மலச்சிக்கலை போக்கும்.

வில்வத்தின் , வேர் , பிசின் எல்லாமே மருத்துவ குணம் உள்ளவை.
வில்வ பழ ஜூஸ் , ஜாம் போன்றவை இயற்கை அங்காடிகளில் கிடைக்கிறது.

குறிப்பு : 50 ஆண்டுகளுக்கு மேலான மரத்தில் இருந்து கிடைக்கும் பலன்களே சிறந்த பலனை தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக