வியாழன், 11 ஆகஸ்ட், 2016

வெயிலோடு விளையாடு

30 நாள் 30 மருத்துவம் - நாள் 7


வெயிலோடு விளையாடு 


இந்தியா வெயில் நாடு என்கிறோம். ஆனால் எங்கள் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவில் ஆயிரக்கணக்கான மெடிக்கல் ரிபோர்ட்டுகள் வந்ததில் ஒரே ஒரு ரிபோர்ட் தவிர்த்து வேறு எதிலும் வைட்டமின் டி அளவுகள் 30 தாண்டவில்லை.

வைட்டமின் டி அளவுகள் அதிகரிக்க, அதிகரிக்க வியாதிகள் வரும் விகிதம் எந்த அளவு குறைகிறது என்பதை கீழே உள்ள படம் விளக்குகிறது.

உதாரணமாக வைட்டமின் டி அளவு 20 ஆக இருக்கையில் 75% மாரடைப்பு ரிஸ்க் உள்ளது. வைட்டமின் டி அளவு 40 தொட்டால் இது 50% எனும் அளவு வீழ்ச்சி அடைகிறது.

ரத்த அழுத்தம், ஒஸ்டிரியோபோசிஸ், எலும்பு முறிவு என வைட்டமின் டி அளவுகள் கூட, கூட வியாதிகளின் சதவிகிதம் மட, மட என சரிகிறது. குறிப்பாக கான்சருக்கும் வைட்டமின் டிக்கும் இடையே உள்ள தொடர்பை காண்க. வைட்டமின் டி குறைய, குறைய கான்சர் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. டி அளவுகள் 60 என்பதை தான்டுகையில் அதுவே கான்சர் ரிஸ்க்கை பெருமளவு குறைத்துவிடுகிறது.

இத்தனை நன்மையும் கிடைக்க சும்மா வெயிலில் நின்றால் போதும் என்றால் நம்ப முடிகிறதா?

காலை 11 மணியில் இருந்து 1 மணிக்குள் சுமார் 20 நிமிடங்கள் வெயிலில் இருந்தால் போதும். ஓரளவிற்கு உடலில் வெயில் படும் அளவிற்கு நிற்கவேண்டும். தலையில் தொப்பி போட்டுக் கொள்ளலாம். மாத்திரை வடிவிலும் வைட்டமின் D கிடைக்கிறது. ஆனால் இயற்கையாக சூரிய ஒளியில் பெறப்படும் அளவிற்கு செயற்கை வைட்டமின் பலனளிக்காது.

தகவல் நன்றி , நியாண்டர் செல்வன் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக